வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சித்த_மருத்துவ_கையேடு_.PDF
2.9 MB
சாது - யோக வாழ்க்கை
அல்லது
ஆரோக்கிய வாழ்வு முனைவோருக்கான
அற்புத சேகரகங்கள் கொண்ட 57 பக்கங்கள்
உள்ள இ-புத்த்தகம்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
https://youtu.be/ZcFRFmjwpnM

கோவை. உடையாம்பாளையம்
ஶ்ரீ கணபதி சுவாமிகள்
ஜீவாலயத்தின்
👌 காணொளி !

ஶ்ரீ சிவானந்த பரமஹம்சரோடு
அணுக்க சீடராக திகழ்ந்த..
பிரம்மஶ்ரீ.
கணபதி சுவாமிகள்

சித்தவித்தை மகிமையை எடுத்துரைக்க..

வெளியிட்ட நூலான..

"ஊண் உடம்பு ஆலயம்"
📗 மின்னூலாக : 👇
Ebook 125
pages in 84MB

https://t.me/truthsofsivayoga/9233
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
"ஞானியின்‌ கல்‌"
PHILOSOPHER'S STONE
௬வாமி. பிரபஞ்சநாதன்
எழுதிய மின்னூலிருந்து..
சில பக்ககங்கள் : 👇
https://1drv.ms/b/s!ArYnH2DgNvT1hzTRvnorFGmy31q0
மறை பொருளும்,
சாகாக் கலையும்‌ :-

மனிதனின்‌ வாழ்க்கையே மறைப்பொருளை அறிவதற்கு
உண்டான ஒரு உன்னதமானப்‌ பயணம்‌ எனலாம்‌.

ஒவ்வொரு
மனிதனும்‌ பிறக்கும்போதே அவன்‌ அடையக்கூடிய இறுதி
இலக்கையும்‌ தீர்மானிக்கப்பட்டு,
அதன்‌ அடைப்படையிலே
தான்‌ அவனது வாழ்க்கைப்‌ பயணமும்‌ அமைகின்றது.

அடுத்து என்ன நடக்கப்போகின்றது
என்பதை அறிய
முடியாத, சுவாரஸ்யமான அவனது வாழ்க்கை,
அனுதினமும்‌
ஆனந்தமாகக்‌ கழிகின்றது.

இதிலே, மரணம்‌, மரணத்துக்குப்‌
பிந்தைய வாழ்க்கை பற்றிய பயம்தான்‌ மனிதர்களை
ஓரளவு நியாயமாகவும்‌
வாழச்‌ செய்கிறது.

கடவுளைப்‌ பற்றிய தேடலும்‌ அவனிடம்‌ உருவாகிறது.
அத்துடன்‌ ஞானத்தை தேடி, அதை அடைய விரும்பிய
எல்லாவிதமான பயணங்களும்‌,
அதன்‌ பாதைகளும்‌ பயணிக்கு
அர்த்தமுள்ளவைகளே ஆகும்‌.

இந்தப்பயணத்திலே மனிதனின்‌ பிறவிப்‌ பிணியைத்‌
தீர்க்கும்‌ மருந்தை கண்டுபிடித்து விட்டான்‌ என்றால்‌,

இவனது
பயண நோக்கம்‌ முழுவதுமாக நிறைவடைந்தது எனவும்‌
அறியலாம்‌. இந்த பயணத்தின்‌ நோக்கம்‌ வெற்றிப்‌ பெற
வேண்டுமானால்‌, அதற்குச்‌ சாதனமான இந்த உடலும்‌, மனமும்‌ ஒருங்கிணைந்து
ஒத்துழைக்க வேண்டும்‌ என்பதை நம்‌ தமிழ்‌ மெய் ஞானிகளான
சித்தர்‌ பெருமக்கள்‌ அறிந்திருந்தனர்‌.

அவ்வாறே, இந்த ஸ்தூல உடலையும்‌, சூக்ஷ்ம
மனதையும்‌
ஒருங்கிணைக்கின்ற
ஒரு உன்னதப்‌ பொருள்‌
கண்களால்‌ காணப்பட முடியாத உயிராக உள்ளது என்பதையும்‌
அவர்கள்‌ அறிந்திருந்தனர்‌.

அந்த அரூபமான
கண்களுக்குத்‌ தெரியாத உயிர்‌
என்றுமே அழியாமல்‌ இருக்கக்‌ கூடியது. ஆனால்‌,
கண்களுக்குத்‌ தெரிகின்ற
இந்த உடலோ தொடர்ந்து
மாறுதலுக்கு உட்பட்டு,
ஒரு நாள்‌ அழிந்து போகக்‌ கூடியது.

அதாவது, இந்த உடல்‌
அழிவுக்கு உட்படுவது
என்பதைக்கூட, வேறு ஒன்றாய்‌ மாறக்கூடியது என்றே
சித்தர்கள்‌ அறிந்திருந்தனர்‌.

அதாவது,
இறந்த இந்த உடல்‌
மண்ணில்‌ உள்ள
நுண்கிருமிகளினால்‌ சிதைக்கப்பட்டு மற்ற
புழு, பூச்சிகளுக்கும்‌, தாவரங்களுக்கும்‌
உணவாக மாறுகின்றது
என்பதையும்‌ அவர்கள்‌
நன்கு அறிந்திருந்தனர்‌.

அந்த சிதைந்த அழுகிய நிலையில்‌ உள்ள உடலை
உணவாக உட்கொள்கின்ற புழு, பூச்சிகள்‌ மற்றும்‌ தாவரங்கள்‌
போன்றவைகளை தவளை, ஓணான்‌, பாம்பு, பறவைகள்‌,

விலங்குகள்‌ போன்றவைகள்‌ ஒன்றை ஒன்று உணவாக உட்‌
கொள்கின்றன. இவைகள்‌ அனைத்தையும்‌ இந்த மனிதர்கள்‌ உணவாக உட்கொள்கின்றனர்‌.

இவ்வாறு, ஒன்றை ஒன்று உணவாக உட்கொள்ளப்‌
படுவதும்‌, ஒன்றை ஒன்றுச்‌ சார்ந்து வாழ்க்கையை வாழ்வதும்‌ என இந்த மொத்த பிரபஞ்சமே ஒரு சக்கரம்‌ போன்று சுழன்றுக்கொண்டு உள்ளது.


உண்மையிலேயே,
இதை சற்று ஆழ்ந்து ஆராயும்‌
பொழுது, உணவு என்று தனியாக வெளியில்‌ இருந்து எதுவே கிடையாது. அதாவது தன்னுடைய உடலையே
தானே உணவாக உட்கொள்ளும்‌ ஒருமுறைதான்‌ நடைமுறையில்‌
நம்மிடையேக்‌ காணப்படுகின்றது.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
https://youtu.be/fFC2-5rGK3c?si=1BvE5Quw4a3H3j8I

உலக
வாழ்வியலின் ஜெயத்திற்க்கு..

அதி உயர்
யோக ஞான சாதனத்தின் நுட்பங்களை
கையாள்வது பற்றி

நாமக்கல்.
பிரம்மஸ்ரீ. ராம்நாத்

அருமையாகவும்
எதார்த்தமாகவும்
விளக்குகிறார் .

கவனத்துடன்
கேளுங்கள்.
*கிடைத்தற்கரிய இறையின் கொடையான நமது உடல் ஒரு முறை கெட்டுவிட்டால் சீர்செய்யவே இயலாது. உடலை கெடாமல் பாதுகாப்பது ஒன்றே மிகவும் எளிய வழியாகும்.*

1. The *STOMACH*
is injured when
you do not have
breakfast in the
morning.

காலைச் சிற்றுண்டி உண்ணாவிட்டால் நமது இரைப்பை பாதிப்புறும்.

2. The *KIDNEYS*
are injured when
you do not even
drink 10 glasses
of water in 24
hours.

தினசரி 2 லிட்டர் தண்ணீர் பருகாவிட்டால் நமது சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

3. *GALLBLADDR*
is injured when
you do not even
sleep until 11
o'clock and do not
wake up to the
sunrise.

இரவு 11 மணிக்குமேல் விழித்திருந்தாலும் காலை சூரிய உதயத்திற்குள் விழிக்காவிட்டாலும் நமது பித்தப்பை பாதிப்புறும்.

4. The *SMALL*
*INTESTINE* is
injured when you
eat cold and stale
food.

மிகவும் குளிர்ந்த மற்றும் பழைய கெட்டுப்போகும் தருவாயில் இருக்கும் உணவை உண்பது நமது சிறுகுடலுக்குத் தீங்கு.

5. The *LARGE*
*INTESTINES* are
injured when you
eat more fried
and spicy food.

அதிக அளவில் பொரித்த உணவு மற்றும் அதிக காரம் நமது பெருங்குடலுக்குக் கேடு.

6. The *LUNGS* are
injured when you
breathe in smoke
and stay in
polluted
environment of
cigarettes.

புகை மற்றும் சிகரெட் புகை சூழ்ந்துள்ள இடத்தில் சுவாசிப்பது நமது நுரையீரல்களைக் கெடுக்கும்.

7. The *LIVER* is
injured when you
eat heavy fried
food, junk, and
fast food.

துரித உணவு, அதிகநேரம் எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவு முதலியன நமது கல்லீரலுக்குக் கேடு.

8. The *HEART* is
injured when you
eat your meal with
more salt and
cholesterol.

அதிக உப்பும் அதிக கொழுப்பும் இதயத்தை வெகுவாகப் பாதிக்கும்.

9. The *PANCREAS*
is injured when
you eat sweet
things because
they are tasty and
freely available.

அதிக இனிப்பு நமது கணையத்தைச் சேதப்படுத்தும்.

10. The *Eyes* are
injured when you
work in the light
of mobile phone
and computer
screen in the
dark.

இருளில் செல்போன் மற்றும் கணிணியில் வேலை செய்வது கண்களுக்குக் கெடுதல் விளைவிக்கும்.

11. The *Brain* is
injured when you
start thinking
negative
thoughts.

எதிர்மறை எண்ணங்கள் நமது மூளையைப் பாதிக்கும்.

12. The *SOUL* gets
injured when you
don't have family
and friends to
care and share
with you in life
their love,
affection,
happiness,
sorrow and joy.

நமது குடும்பம், நட்பு, உற்றார், உறவினர்களின் அன்பும் அனுசரணையும், பராமரிப்பும் இல்லையெனில் நமது உயிருக்கு நன்றன்று.

*All these body parts are NOT available in the market.*

*நமது எந்த உள்ளுறுப்பும் சந்தையில் கிடைக்காது.*

So take good care and keep your body parts healthy. எனவே நல்ல கவனத்துடன் உடற்பயிற்சியையும் நாள்தோறும் தவறாது செய்து நமது உள்ளுறுப்புகளைப் பாதுகாப்போம்.

EFFECTS OF WATER
தண்ணீரின் அவசியம்.
💐 We Know Water is
important but never
knew about the
Special Times one
has to drink it.. !!

தண்ணீரின் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்திருப்பினும் எப்போது எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்ற விபரங்கள் தெரியாமல்தான் இருக்கின்றோம்.

Did you??? உங்களுக்குத் தெரியுமா???

💦 Drinking Water at the
Right Time
Maximizes its
effectiveness on the
Human Body;

சரியான நேரத்தில் தண்ணீர் அருந்துவது நமது உடலின் பல பாகங்களையும் செவ்வனே செயல்பட வைக்கிறது.

1⃣ 1 Glass of Water
after waking up -
🕕 helps to
activate internal
organs..

காலை எழுந்தவுடன் 350 மிலி தண்ணீர் அருந்துவது நமது உள்ளுறுப்புகள் அனைத்தையும் ஊக்குவிக்கும்.

2⃣ 1 Glass of Water
30 Minutes 🕧
before a Meal -
helps digestion..

உணவுக்கு 30 நிமிடம் முன்பு 300 மிலி தண்ணீர் பருகுவது செரிமானத்துக்கு நல்லது.

3⃣ 1 Glass of Water
before taking a
Bath 🚿 - helps
lower your blood
pressure.

குளிப்பதற்கு முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
4⃣ 1 Glass of Water
before going to
Bed - 🕙 avoids
Stroke or Heart
Attack.

இரவு படுக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் பருகுவது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றிலிருந்து பாதுகாக்கும்.

🙏🏻🙏🏻🙏🏻
வாதம் வைத்தியம்
Photo
சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
திரிகடுகு என்பது சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் கலவையே ஆகும். ...
திப்பிலி இருமல், இரைப்பு, தொண்டைப்புண், தொண்டைக் கட்டு இவற்றைக்குணமாக்கும். ...
திரிகடுக சூரணத்தை பயன்படுத்துவதால் பலவித நோய்களுக்கும் தீர்வாக இருக்கும். ...
நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல பிரச்சனைகளை தீர்க்கவல்லது. ...
நுரையீரலின் உயிர் சக்தியை அதிகபடுத்தும்.
வாதம் வைத்தியம்
Photo
பழைய காலத்து
30 வகை பத்திய சமையல்.....

இஞ்சி பச்சை மிளகாய் தொக்கு

தேவையானவை: இளம் இஞ்சி 25 கிராம், பிஞ்சு பச்சை மிளகாய் 10, புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, அச்சு வெல்லம் ஒன்று, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், இஞ்சியை வதக்கி… புளி, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, சிறிதளவு நீர்விட்டு மிக்ஸியில் அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு, அரைத்து வைத்த விழுதைச் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு: இதை சப்பாத்தி, தோசைக்கு தொட்டு சாப்பிடலாம். இஞ்சி ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.
___________________
கறிவேப்பிலை மிளகு குழம்பு

தேவையானவை: கறிவேப்பிலை 2 கைப்பிடி அளவு, மிளகு 20, உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, கடுகு ஒரு டீஸ்பூன், எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை நன்றாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கறிவேப்பிலையை எண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்தவற்றுடன் சேர்த்து… புளி, உப்பு சேர்த்து, நீர் விட்டு நைஸாக மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்ததை போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: இந்தக் குழம்பு, பிரசவித்த பெண்களுக்கு மிகவும் நல்லது. மழை நேரத்தில் ஏற்படும் ஜுரம், உடல் வலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.
__________________
கீரை பொரித்த குழம்பு

தேவையானவை: முளைக்கீரை ஒரு சிறிய கட்டு, மிளகு 6, தனியா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, தேங்காய்த் துருவல் ஒரு சிறிய கிண்ணம், சீரகம் ஒரு டீஸ்பூன், பாசிப்பருப்பு 4 டீஸ்பூன், கடுகு அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: கீரையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய்த் துருவல், தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பாசிப்பருப்பு சேர்த்து வேகவிடவும். பருப்பும் கீரையும் வெந்த பிறகு உப்பு சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்துக் கிளறவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் தாளித்து, கீரையுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்துடன் இதை சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிட்டால், சுவையில் அசத்தும். இதற்கு, மாங்காய்ப் பச்சடி சிறந்த காம்பினேஷன்.
_____________________
தத்துவப் பச்சடி

தேவையானவை: வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு, மாங்காய்த் துண்டுகள் (சற்றே பெரியது) இரண்டு, வெல்லம் 50 கிராம், பச்சை மிளகாய் (சிறியது) ஒன்று, கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: மாங்காய்த் துண்டுகளை வேகவைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் தாளித்து, வேப்பம்பூவை சேர்த்து வறுக்கவும். வெந்த மாங்காய்த் துண்டுகளை இதில் கரைத்துவிடவும். பிறகு, பொடித்த வெல்லம், உப்பு சேர்த்து, நன்கு கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: ‘வாழ்க்கை என்பது கசப்பு, இனிப்பு, புளிப்பு எல்லாம் கலந்தது’ என்ற தத்துவத்தை உணர்த்தும் இந்தப் பச்சடி, தமிழ்ப் புத்தாண்டு அன்று முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.
__________________
கண்டதிப்பிலி ரசம்

தேவையானவை: கண்டதிப்பிலி (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) 10 கிராம், மிளகு, தனியா, கடுகு, கடலைப்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் ஒன்று, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கண்டதிப்பிலி, மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுக்கவும். இத னுடன் புளி, உப்பு சேர்த்து விழுதாக அரைத்து, நீர் விட்டு நன்கு கரைத்து கொதிக்கவைக்கவும். இதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து… கடுகு தாளித்துக் கொட்டி இறக்கவும்.

குறிப்பு: இந்த ரசம், உடல் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். பருப்புத் துவையல் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
____________________
மணத்தக்காளி வற்றல் குழம்பு

தேவையானவை: உப்பில் ஊறவைத்து, காயவைத்த மணத்தக்காளி வற்றல் 25 கிராம், காய்ந்த மிளகாய் 2, புளி ஒரு எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி 4 டீஸ்பூன், வெந்தயம், கடுகு, கடலைப்பருப்பு தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு சிறிதளவு.
வாதம் வைத்தியம்
Photo
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, மணத்தக்காளி வற்றலை சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். இதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: மழைக்கால இரவில் சூடான சாதத்தில் மணத்தக்காளி வற்றல் குழம்பும், நெய்யும் சேர்த்து சாப்பிட்டால்… அருமையான ருசியுடன் இருக்கும். சுட்ட அப்பளம் தொட்டு சாப்பிடலாம். மணத் தக்காளி காய், கீரை இரண்டும் வயிற்றுப்புண்ணை ஆறவைக்கும்.
__________________
பூண்டு மிளகு சீரக ரசம்

தேவையானவை: பூண்டு 6 பல் (தோல் உரித்தது), புளி ஒரு சிறிய எலுமிச்சை அளவு, கடுகு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, நெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: பூண்டு, மிளகு, சீரகம், துவரம்பருப்பு ஆகியவற்றை சிறிதளவு நெய்யில் வறுத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும். புளியை நீரில் கரைத்து, அதில் அரைத்ததை சேர்த்துக் கலந்து உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். மீதமுள்ள நெய்யில் கடுகு, பெருங் காயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: காய்ச்சல் ஏற்படும் சமயத்தில் புழுங்கல் அரிசியை வறுத்து, ரவை போல உடைத்து குழைவாக வேகவைத்து, இந்த ரசத்தை ஊற்றிக் கரைத்து குடித்தால்… உடல் வலி, சோர்வு நீங்கும்.
___________________
இஞ்சி பிரண்டை துவையல்

தேவையானவை: இளம் தளிரான கொழுந்துப் பிரண்டைத் துண்டுகள் ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி ஒரு சிறிய துண்டு, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உளுத்தம்பருப்பு 4 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு, நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: பிரண்டையைப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக நல்லெண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த மிளகாய், உளுத்தம்பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

குறிப்பு: பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். வாயுத்தொல்லை நீங்கும். இந்தத் துவையலை சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால்… அசத்தல் சுவையில் இருக்கும். சுட்ட அப்பளம், வடகம் இதற்கு நல்ல காம்பினேஷன்.
____________________
பூண்டு வடகம் குழம்பு

தேவையானவை: பூண்டு 100 கிராம், கூட்டு வடகம் 100 கிராம், சின்ன வெங்காயம் 20, வெந்தயம், கடுகு தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 4, சாம்பார் பொடி 4 டேபிள்ஸ்பூன், புளி ஒரு எலுமிச்சம்பழ அளவு, நல்லெண்ணெய் 50 மில்லி, உப்பு தேவையான அளவு.

செய்முறை: பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கூட்டு வடகம், கடலைப்பருப்பு சேர்த்து, காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு… வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி… இதனுடன் சாம்பார் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு, புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்பு: இதயத்தைக் காக்கும் சிறந்த மருத்துவக் குணம் பூண்டுக்கு உண்டு. இதயக் கோளாறு உள்ளவர்கள், அடிக்கடி பூண்டை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
_________________
பூண்டுப்பொடி

தேவையானவை: உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், பூண்டு 100 கிராம் (தோல் உரிக்கவும்), காய்ந்த மிளகாய் 6, எண்ணெய் 4 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பூண்டு ஆகியவற்றை எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி இறக்கவும் (ரொம்ப மசியக்கூடாது).

குறிப்பு: இந்த பூண்டுப் பொடி இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் ஏற்றது. பூண்டு, இதயக் கோளாறு வராமல் தடுப்பதுடன், வாயுத் தொல்லையையும் நீக்கும்.
__________________
அப்பளக் குழம்பு

தேவையானவை: புளி பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன பூண்டு பல் 10, சின்ன வெங்காயம் 10, உளுந்து அப்பளம் 2, காய்ந்த மிளகாய் ஒன்று, சாம்பார் பொடி 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம் தலா கால் ஸ்பூன், நல்லெண்ணெய் 6 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு… கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் தாளித்து… வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு, அப்பளத்தை பிய்த்து துண்டுகளாக்கி சேர்க்கவும். பின்னர் சாம்பார் பொடி போட்டு வதக்கி, புளித் தண்ணீரை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
______________________
வாதம் வைத்தியம்
Photo
வல்லாரைத் துவையல்

தேவையானவை: வல்லாரைக்கீரை ஒரு கட்டு, தேங்காய்த் துருவல் 4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, புளி சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிள காய், உளுத்தம்பருப்பை சிறி தளவு எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். மீதமுள்ள எண்ணெயில் வல்லாரைக் கீரையை வதக்கிக்கொள்ளவும்.இவை ஆறியவுடன் தேங்காய்த் துரு வல், புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு: வல்லாரைக்கீரை, ஞாபகசக்திக்கு மிகவும் நல்லது.
_________________
மூலிகைப்பொடி

தேவையானவை: சுக்கு ஒரு சிறிய துண்டு, சுண்டைக்காய் வற்றல் 10, வேப்பம்பூ, கறிவேப்பிலை தலா ஒரு கைப்பிடி அளவு, மிளகு 2 டீஸ்பூன், கடுகு 2 டீஸ்பூன், பெருங்காயம் ஒரு சிறிய துண்டு, உப்பு தேவையான அளவு.

செய்முறை: கடுகு, சுக்கு, சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கறிவேப்பிலை, மிளகு, பெருங்காயம் எல்லாவற்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

செய்முறை: இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். இந்தப் பொடியில் சேர்க்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. கடுகு சளித் தொல்லையில் இருந்து நிவாரணம் அளிக்கும், சுக்கு ஜீரணசக்திக்கு நல்லது, வேப்பம்பூ பித்தத்தை தணிக்கும், கறிவேப்பிலை இரும்புச்சத்து மிகுந்தது, மிளகு ரத்த சுத்திகரிப்புக்கு உதவும், பெருங்காயம் வாயுத்தொல்லை நீக்கும்.
_________________
வேப்பம்பூ சாதம்

தேவையானவை: அரிசி 200 கிராம், வேப்பம்பூ ஒரு கைப்பிடி அளவு, மோர் மிளகாய் 4, கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவு, எண்ணெய் இரண்டு டீஸ்பூன், நெய் சிறிதளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, மோர் மிளகாயை கிள்ளிப்போட்டு… வேப்பம்பூவையும், பெருங்காயத்தூளையும் சேர்த்து வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு சாதம் வைத்து, அதில் வறுத்த வேப்பம்பூ கலவை, உப்பு சேர்த்து, நெய் விட்டு நன்கு கலந்து சூடாக சாப்பிட்டால்.. நாவுக்கு ருசியாக இருக்கும்.

குறிப்பு: வேப்பம்பூ… பித்தம், தலைசுற்றல் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். வேப்பம்பூ சீஸனில் அதை சேகரித்து, காயவைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
______________________
நெல்லிக்காய் பச்சடி

தேவையானவை: பெரிய நெல்லிக்காய் 4, இஞ்சி விழுது அரை டீஸ்பூன், புளிக்காத தயிர் 100 மில்லி, பெருங்காயத்தூள் சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: பெரிய நெல்லிக்காயை சீவி, கொட்டையை எடுத்துவிட்டு மிக்ஸியில் அரைக்கவும். நெல்லிக்காய் விழுது, இஞ்சி விழுதை தயிரில் கலந்து, உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: நெல்லிக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ரத்தசோகை உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தலாம். நெல்லிக்காயில் துவையல், அல்வா, போளி, ஜாம் என்று பலவிதமாக தயாரித்து ஒவ்வொரு ருசியிலும் பயன்பெறலாம்.
___________________
முடக்கத்தான் கீரை தோசை

தேவையானவை: புழுங்கல் அரிசி 200 கிராம், வெந்தயம், உளுத்தம்பருப்பு தலா 2 டீஸ்பூன், முடக்கத்தான் கீரை இரண்டு கைப்பிடி அளவு (கீரை விற்பவரிடம் கேட்டு வாங்கவும்), எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயத்தை ஒன்றாக ஊற வைத்து… ஒரு மணி நேரத்துக்குப் பிறகு முடக்கத்தான் கீரையையும் சேர்ந்து நைஸாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். மாவை தோசைக்கல்லில் தோசைகளாக வார்த்து, லேசாக எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: இட்லி மிளகாய்ப் பொடியை தோசையின் மேலே தூவி சாப்பிடலாம். முடக்கத்தான் கீரை… கால்வலி, மூட்டுவலியில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
________________
ஓம லேகியம்

தேவையானவை: ஓமம் 25 கிராம், மிளகு 10 கிராம், சுக்கு ஒரு சிறிய துண்டு, அரிசி திப்பிலி 10, கண்டதிப்பிலி 10 கிராம், சித்தரத்தை, விரலி மஞ்சள் தலா ஒரு சிறிய துண்டு, வெல்லம் 150 கிராம், நெய் 100 மில்லி.

செய்முறை: ஓமம், மிளகு, சுக்கு, கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி, சித்தரத்தை, மஞ்சள் ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் போட்டு நன்கு பொடிக்கவும். வெல்லத்தைக் கரைத்து, வடிகட்டி, பாகு காய்ச்சி, செய்துவைத்த பொடியை சேர்த்துக் கிளறி, நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, ஆறிய உடன் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

குறிப்பு: வயிறு சரியில்லாத சமயத்தில் இந்த லேகியத்தில் இருந்து சிறிதளவு எடுத்து, உருண்டையாக உருட்டி அப்படியே சாப்பிடலாம்.
________________
வாதம் வைத்தியம்
Photo
வாழைத்தண்டு கோஸ் மோர்க்கூட்டு

தேவையானவை: முட்டைகோஸ் கால் கிலோ, மிளகு 10, வாழைத்தண்டு இரண்டு துண்டுகள், காய்ந்த மிளகாய் ஒன்று, தயிர் ஒரு கப், கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு அரை டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு. தேங்காய்த் துருவல் 4 டேபிள்டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு,

செய்முறை: கோஸை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாழைத்தண்டின் மேல்பட்டைகளை உரித்து, தோல் சீவி, வில்லை வடிவமாக நறுக்கி, நார் எடுத்து, பொடியாக நறுக்கவும். இதை கோஸுடன் சேர்த்து, உப்பு போட்டு வேகவிடவும். மிளகு, காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம் ஆகியவற்றை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து, வேகவைத்த கோஸ் வாழைத்தண்டுடன் சேர்க்கவும். இதனை சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி, தயிர் விட்டு கலக்கவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்க்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.

குறிப்பு: வாழைத்தண்டு பித்தப்பையில் உள்ள கற்களை நீக்கும். நார்ச்சத்து உள்ளதால் இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. சூடான சாதத்தில் இந்த மோர்க்கூட்டு சேர்த்து, பொரித்த அப்பளம் தொட்டு சாப்பிட்டால்.. சுவை அள்ளும்.
_________________
பிடிகருணை மசியல்

தேவையானவை: பிடிகருணைக்கிழங்கு 6, இஞ்சி ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் ஒன்று, கடுகு, கடலைப்பருப்பு தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, வெல்லம் ஒரு சிறிய துண்டு, கொத்தமல்லித் தழை சிறிதளவு, எலுமிச்சம்பழம்