வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
204 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Video
நீரிழிவு நோயை குணமாக்கும்.. 🌿சித்தமருத்துவ முறையிலான, 🥣அவரவர்கள் வீட்டிலேயே தயாரித்து உண்டு குணமாக்கிடும், செய்முறை விளக்க காணொளி இது.👆👍👌
ஆத்ம நமஸ்காரம். சித்தயோகி. பிரம்மஶ்ரீ. சங்கரானந்தா ஸ்வாமிகள் ஆசியுடன்.. அவர் ஜீவ ஐக்கியமடைந்த குற்றாலத்தின் ஜந்தருவி அருகே அமைந்துள்ள சங்கரானந்தா ஸ்ரமத்தில்.. மாதாந்திர கூட்டு ஜபவிழா.. வரும் வைகாசி மாதம் 2022 ஜுன் 12,13 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டு ஜெபதவம்+ சத்சங்கம்+ அன்னதானம் நடைபெறும் என்பதனை தெரிவித்து கொள்ளுகிறோம். ஆகையால் சித்தவித்தயார்த்தி சகோதர சகோதிரிகள் அனைவருக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்திடவும், பயனடையும் படியும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

இங்கணம் :- சங்கராஸ்ரம ஆசிரம நிர்வாகம் ஐந்தருவி. குற்றாலம்

Google map location 📍 Sankaranandha JeevaSamathi Ashramam, Five Falls, Kuttralam
https://maps.app.goo.gl/7kSdAMTrdtiMFUhi8
🪵🕊️ *குச்சியும்- பறவையும்*🕊️🪵
தரும் ..
*வாழ்வியல் -ஞானம்*🔆


*ஒரு மகான்* மரத்தடியில் அமர்ந்திருந்தார். *ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.

*‘ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.

*‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?* முயற்சிப்பதில் தவறில்லை. *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.* பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் மகான்.

*தலையசைத்து விட்டு பறந்தது பறவை*. பக்கத்தில் இருந்த *சீடனிடம் பேசினார்* மகான்.

‘சீடனே! *முதல் முறை சோர்வடையும் போது பாதி பலத்தை இழந்துவிட்டோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும்',* என்றார் மகான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.

*‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.

*‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* மகான்.

பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.

*‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.

மகான் சிறிது யோசித்தார்.. *கீழே கிடந்த ஒரு தடிமனான குச்சியை எடுத்து பறவையிடம்* கொடுத்தார்.

*‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் மகான்.

*பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.* இரண்டு மாதங்களுக்குப் பிறகு மகானிடம் வந்தன.

*‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.

*‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் மகான். . . . . . . பறவை பேசியது.

*‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.* ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*

மகானை பார்த்தான் சீடன். மகான் பேசினார்.

*‘சீடனே! பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வடையாமல் பறக்க முடிந்தது.* அதற்குக் காரணம் *‘துணை'.* ஆனாலும் *இலக்கை அடைய முடியவில்லை*. இலக்கை அடைய *‘குச்சி'* என்ற கருவி அவசியமாகிறது. *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.* ஆனால்,
*அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*. பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *‘இல்லறம்'* கருவியாகிறது. *‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. காடு-மலை தேடி தங்கி* திரியவேண்டியதில்லை.

‘இல்லறம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கும் அறிவோடு.. கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த மகான்*.

குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், *‘குச்சியே பறவைகளை சுமக்கிறது'*. இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை தான் மட்டுமே நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *இல்லறமே அவர்களை சுமந்து வழி நடத்தி செல்கிறது.*

அவ்வாழ்வின்
நல்முறையே
*வீடு பேறு* எனும்
*முக்திக்கு*/ மோட்சத்திற்கு
எளிமையான
*கருவி* யாகிறது.

*இதுவே இல்லறம்* எனும்
*வாழ்வியலின் ரகசியம்*..!!

🌷நன்றிகள்🙏
★௧ருவூரான்★
www.t.me/truthsofsivayoga
Forwarded from 🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
Forwarded from 🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
Discussions ~ சிவயோகம்

டெலிகிராம் குரூப் கலந்துரையாடலுக்காக
துவங்கப்பட்டுள்ளது.

Link for Join YourSelf :👇
https://t.me/+ip4jgW_MYVYyZmU1

(Discussion Group on
True Yoga Related )

உண்மையான
*சிவ யோகங்கள்*
சார்ந்த
ஐயங்களையும்,
கேள்வி பதில்களையும்
தேர்ந்த சித்தமார்க்க பயணிகளிடம் சகஜமாக கலந்துரையாட வல்ல வாய்ப்புகளை வழங்கும்..
Telegram group செயலி பாத்திரம் இது. Discussions~SIVAYOGAM
☝️🙏.
Don't send unwanted forwards & Arguments
📵இங்கு தேவையில்லாத ஆன்மீக பார்வேர்டுகளையும், வீண்-விவாதங்களையும்
தவிர்க்கவும். 🚫 மீறினால் நீக்கப்படுவதுடன் Block செய்யப்படுவீர்.
Forwarded from 🌙சிவயோகம்🌞பகிர்தல்கள்
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
https://youtu.be/R_JafCCkdpc

இங்க 👆தான் திருச்சீறலைவாய்போர் நிகழ்வின் பின்னர்

பத்மாசுரன்
எனும் முனிவராக
சுப்பிரமணிய ரால்
மனம் மாற்றப்பட்டு

(இறவாத யுகம் தாண்டிய
அரக்கர்குல தலைவனாக)

கல்பூட்டு குகையில்
தவநிலையில்
கடும் காவலுடன்
மறைந்திருக்கும்
குகை ஸ்தலம்.

ஆதாரம் :
போகர் ஏழாயிரம்
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo from RJN-$G
சித்தர்களின்
ஞான சுருதிகள் பாடல்கள்,
ஞான பதங்களை
குறியீட்டு சொற்களை காட்சிப்
படங்களோடு..
குறுங் காணொளிகளாக..

Words for Wisdom
தொகுப்பில்

தங்களது Whatsapp
STATUS க்காக
கீழ்வரும் இணைப்பில் சிலவை உள்ளது.


My Youtube Channel
Playlist : 👇🎼💛👌

https://youtube.com/playlist?list=PLDOUCtAoF3aleDok_C3uWPwiS8EsS31L5