வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
*முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதால் இத்தனை பலன்களா??*
https://youtu.be/ACWHm-uLNhU?sub_confirmation=1
சித்தர் வழி ஆராய்சியாளர்
&
வைத்திய ரத்தினம்.
ஜட்ஜ் பலராமையா
அவர்களின்
நூல்கள்

இந்த கோப்பில் அடங்கிய நூல்களின் பெயர்கள்:

1) அகத்தியர் அந்தரங்க தீக்ஷாவிதி

2) அகத்தியர் பன்னீராயிரம் தொகுப்பு

3) அனுபவ சித்த வைத்திய முறைகள்

4) *அமுதகலசம்*

5) உங்கள் வீட்டில் சித்தர் மருந்து

6) உயிர் நீட்டும் மூலிகைகள்

7) கடவுளும் மோட்சமும்

8) *சரீர தத்துவம் & சாகாக்கலை*

9) சித்த மருந்து செய் பெரு முறைகள்

10) சித்தர் கைகண்ட மருந்து

11) *சித்தர் மெய்ப்பொருள்*

12) புற்றுநோயை குணப்படுத்தலாம்

13) *முப்பு குரு*

14) வாத வைத்தியத்துக்
காதி

15) சித்த மருத்துவம் (வீட்டு வைத்திய முறைகள்)
Audio
Audio from Raajan @ Singapore/Karur
Audio
Audio from Raajan @ Singapore/Karur
சித்தவித்தை குழுவில்
https://chat.whatsapp.com/JJueTipINosLYP8SdrROZY
வாசியோகியர்கள்
'புளிநீர்' அருந்தும்
"கற்பமுறை" பற்றி
அகத்தியர் கூறியது
பற்றிய கேள்விக்கு சிறு பதில்👆🗣
Photo from Raajan @ Singapore/Karur
Audio
Audio from Raajan @ Singapore/Karur
சித்தர் மலைகள் பயணம்

(12 to 40 Age /
12 to 60+ Age)

1. சதுரகிரி மலை பயணம்
Saduragiri Forest Office
https://maps.app.goo.gl/s3JaUNKGwccYbaoy5

2. பொதிகை மலை பயணம்

My voice &
captured video
https://t.me/truthsofsivayoga/3061

Bonacaud Forest Office
https://maps.app.goo.gl/MtvAk5ZXfhL4sbYU8

3. பர்வதமலை+
திருவண்ணாமலை பயணம்
Parvathamalai Top
https://maps.app.goo.gl/rvYPDiqo3ymymUcEA

4. வெள்ளியங்கிரி
மலை பயணம்
Velliangiri Hill Trecking Entrance
https://maps.app.goo.gl/74LWTgr1oj6Pv4CS9

5. சதாசிவகோனே
சிவன்மலை பயணம்
Sathasivakona siva temple
https://maps.app.goo.gl/ym8CdS9TW8dcdgcC7
Photo from Raajan @ Singapore/Karur
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம். மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும்,
த்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். லதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..)

Pls share these kind of experience to save our traditional treatment systems.
Photo from Raajan @ Singapore/Karur
ஒவ்வொரு ஜீவனும்... இந்த உலகம் எனும் 'நாடக மேடையில்' நடிப்பதற்காக ஒரு உருவத்தை ஏற்றுக் கொண்டு பிறவியை அடைகிறது.

இங்கு வந்த பின்புதான், தான் மட்டுமல்ல... தன்னோடு இணைந்து நடிக்கும் பாத்திரங்களும்... அந்தத் திரைக்கதையில் பங்கு பெறுவதற்காக... அதனதற்கான உருவங்களை ஏற்றுக் கொண்டு வந்திருப்பதைக் காண்கிறது.

இங்கு, நாம் நடிக்கும் ஒவ்வொரு காட்சியையும்... அதில் நடிக்கும் ஒவ்வொரு பாத்திரத்தையும்... அதனதன் 'கர்ம வினைகளுக்கு' ஏற்ப வடிவமைத்திருக்கிறான் படைப்பாளன் என்ற 'பரம் பொருள்'.

காட்சிகளுக்குள் நடிப்பை வெளிப்படுத்தும் பாத்திரங்களாகிய நாம்... நம்மை ஒரு நடிகனாக எண்ணாமல்... அந்தப் பாத்திரமாகவே மாறி அதில் ஒன்றிவிடுவதுதான்... உலகவாழ்வு என்ற நாடக மேடையில் 'எண்ணற்ற முறையில்' அரங்கேறும் நாடகமாக அதை மாற்றி விடுகிறது.

மாறாக, நாம் ஒரு நடிகன். நமக்கு அளிக்கப்பட்டிருப்பது ஒரு பாத்திரம் என்பதை உணர்ந்து, அந்தக் காட்சியின் பூரணத்துவத்தை மட்டும் மனதில் கொண்டு... அதற்கு ஏற்ப நமது நடிப்பை வெளிப்படுத்தினால், காட்சி மட்டுமல்ல... அந்த நாடகமே 'ஒரு அனுபவக் காவியமாக' மாறிவிடுகிறது.

நாம் நடிகன் என்ற உணர்வு வந்ததும்... ஒவ்வொரு காட்சிக்கு இடையிலும்... நமது பணி இந்த உலகில் எதுவாக இருக்கும் என்ற தேடலும் எழுகிறது.

அது நம்மை இந்தத் தொடர் நாடகத்திலிருந்து விடுவித்து...

ஆன்ம தேடலாக
ஆன்மீக வாழ்வில்
நுழைத்து..

தான் எனது நான்
எனும்
அடையாளங்களை
துறக்க வைத்து..

ஞானமடைதல்
எனும் நிலையில்
மனித பிறவியை
மோட்ச கதி யடைந்து
எல்லையிலா
ஆனந்தத்தில் கொண்டு சேர்க்கிறது.

இதுதான்... பிறவித் தளைகளிலிருந்து விடுபடும் சூட்சுமம்.