வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சாஸ்திரம் கூறும் சில கடைபிடிக்க வேண்டிய நல்ல அறிவுரைகள் ..

1,குளிக்கும்போம் நீரில் அலைமோதாமல் குளிக்க வேண்டும்.
2, தலைக்கு வைக்கும் தலையணையைக் காலுக்கு வைக்கக்கூடாது, தலையணை மீது உட்காரவும் கூடாது.
3. நம் நிழல் சாதத்தில் விழும்படி சாப்பிடக்கூடாது.
4. கைவிரலை நீக்கியும், கையை உதறியும் சாப்பிடக்கூடாது.
5, சாப்பிடும் போது உருட்டிச் சாப்பிடக்கூடாது
6. எதையும் எச்சில் பண்ணிச் சாப்பிடக்கூடாது, குடிக்கக்கூடாது
7. சாப்பிட்டு முடித்ததும் தட்டையோ,கையையோ நக்கக்கூடாது
8. இரவில் அடுப்பில் நெருப்பை மிச்சமின்றி அணைத்துவிடவேண்டும்.
9. வாய்கொப்புளித்தோ, எச்சிலையோ வலதுப்பக்கம்
துப்பக்கூடாது.
10. அன்னம், நெய், உப்பு ஆகிய மூன்றையும் கையால் பரிமாறக்கூடாது.
11. தாமிரப்பாத்திரத்திலும், வெண்கலப் பாத்திரத்திலும் இளநீரை வைக்கக்கூடாது
12. ஆமணக்கு இலையிலும், பனை ஓலைக்கூடாயிலும் வைத்த பூ, பூஜைக்கு ஆகாது
13. கடும்வெயில், மயானப்புகை, தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணோடு உறவுகொள்ளுதல் தேங்கிய குட்டைநீர், இரவில் தயிர் அன்னம் சாப்பிடுதல் ஆகியவை ஒரு மனிதனின் ஆயுளைக் குறைக்கும்
14. இருகைகளாலும் தண்ணீர் குடிக்கக் கூடாது.
15. இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், கீரைகள், நெல்லிக்காய், வெங்காயம் ஆகியவற்றை இரவில் சாப்பிடக்கூடாது.
சிதம்பரத்துக்காரர்கள் அநேகம் பேருக்கு தெரியாத நந்தனார் குடில் பற்றி தெரிந்து கொள்வோமா?

நந்தனார் குடிலா அது எங்குள்ளது ?

நந்தனார் குடிலை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக நந்தனார் பற்றிய அறிமுகம், அவர் ஏன் தில்லைக்கு வந்தார்? ஏன் இந்த இடத்தில் தங்கினார்?என தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!!

உடலால் உள்ளத்தால் இறைவனை எப்போதும் துதித்தவர் திருநாளைப்போவார் எனும் நந்தனார்.

இவருக்காக ஈசனே நந்தியே சற்று விலகு நந்தன் தரிசிக்கட்டும் என்று சொன்னார் என்றால் இவரின் பக்தி எப்பேற்பட்டது.

வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள மேல ஆதனூர் இவர் பிறந்த ஊர்.

இப்பிறவியை கடந்தேற சிவனது பாதம் பணிவதே ஓரே வழி என கருதி ஈசனை பற்றியே சிந்தித்தார்.

சிதம்பரம் சென்று நடராஜபெருமானை தரிசிக்க வேண்டும் என்பது அவரின் நீண்டகால விருப்பம்.

பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் தில்லை வந்த அவருக்கு ஆலய தரிசனம் மறுக்கப்பட்டது.

ஆதலால் தில்லையின் எல்லையை பிரகாரமாக எண்ணி சுற்றி சுற்றி வந்தார்.

நடராஜப்பெருமானின் நேர் எதிரில் உள்ள ஓரிடத்தில் குடில் அமைத்து தங்கி ஆலய மணி எழுப்பும் ஓசையை கொண்டு அங்கு நடைபெறும் ஆறு கால பூஜையை மானசீக தரிசனமாக கண்டார்.

தில்லை நடராஜசபையின் அருகில் உள்ளது சிகண்டி பூர்ணம் என அழைக்கப்படும் இரண்டு மணிகள்.

சிகண்டி பூர்ணம் மணியை ஒவ்வொரு கோணத்தில் நோக்கினால் ஒவ்வொரு விதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையது.

இந்த சிகண்டி பூர்ணம் எழுந்தருளி இருக்கும் திசை தென்கிழக்கு.

அது அக்னி பகவானுக்கு உரியது.வெப்பம், ஒளி என்ற இரண்டு இணை பிரியா அம்சங்களுடன் விளங்குவதே அக்னி.

இம்மணியை அக்னி பகவானுக்கு உரிய இரு நாக்குகளாக பெரியோர்கள் வர்ணிக்கிறார்கள்.

வாலாட்டி, சாலாட்டி என்ற அக்னி பகவானின் இரு நாக்குகள் இந்த ஒளி, உஷ்ண தத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறு இறை மார்கத்தில் முன்னேற நினைக்கும் அடியார்கள் தங்கள் வாக்கில் தீயையும் தெளிவையும் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து அளிப்பதே சிகண்டி பூர்ணமாகும்.

சிதம்பர திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிகண்டி பூர்ண மணி ஓசையை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கேட்டு உணர்ந்து பக்தி கொள்கிறானோ அந்த அளவிற்கு அவன் என்றும் மாறா இளமையுடன் திகழ்வான் என்பது உறுதி.

இந்த சிகண்டி பூர்ண மணியின் ஓசையை நந்தனார் அமர்ந்து கேட்ட இடம் தான் இன்று செங்காட்டான் தெரு என அழைக்கப்படும்"சென்று கேட்டான் தெரு"

தெற்கு கோபுரத்தின் எதிரில் செல்வது தான் சீர்காழி சாலை.

இதில் பச்சையப்பன் பள்ளிக்கு அடுத்த தெரு தான் மன்னார்குடி தெரு.

இந்த தெருவில் திரும்பி சரியாக 200மீட்டர் சென்றவுடன் இடது புறம் திரும்பும் செங்காட்டான் தெருவில் 100மீட்டர் சென்றவுடன் வலது புறம் கிழக்கு நோக்கிய விநாயகர் கோயில் உள்ளது.

அதன் எதிரில் ஐந்தடி அகல சந்து ஒன்று உள்ளது.

அதில் உள்ளே சென்றால் வடக்கு நோக்கிய நந்தனார் கோயில் உள்ளது.

இந்த இடம் ஏறக்குறைய தில்லை நடராஜரின் நேர் தெற்கில் உள்ளது

அதனால் தான் நந்தனார் இந்த இடத்தில் குடிலமைத்து தங்கியுள்ளார் என்பதை ஊகித்து கொள்ளலாம்.

முற்றிலும் அழகாக செங்கல்லால் கட்டப்பட்ட கோயில்.

முகப்பு கோபுரம் இல்லை.

மையத்தில் நந்தனார் கருவறையும் சுற்றிவர மூடப்பட்ட பிரகாரமும் உள்ளன.

அதில் பக்கத்திற்கு மூன்று சன்னல்கள் உள்ளன,

நான்கு புறமும் ஆக்கிரமிப்புகள்
எனினும் இப்பகுதியில. வசிக்கும் நல்ல மக்கள், இக்கோயிலை எந்த விதத்திலும் சேதப்படுத்தாமல் வைத்துள்ளனர்.

தற்போது பூஜைக்கு என ஒரு அர்ச்சகர் வந்து செல்கிறார் என சொல்கின்றனர்.

கருவறையில் நந்தனார் நடராஜரை இங்கிருந்தே கரம் குவித்து வணங்கி நிற்கின்றார்.

அருகில் ஒரு முனிவர் யாரென தெரியவில்லை.

இரு சிலைகள் மட்டுமே உள்ளன.

உள்ளே பிரகாரத்தில் விநாயகர், முருகன் உள்ளனர்.

நாயன்மார்கள் எத்தகைய சூழலிலும் தங்களது நிலைகுலையாகத பக்தியினை வெளிப்படுத்தியவர்கள்.

இன்றைய சூழலில் பணம், பகட்டு வேண்டி மதம் மாறும் சில பிரபலங்களை பின் பற்றாமல் நாயன்மார்களை பின்பற்றி உலகின் உன்னத மதமான இந்து மதத்தில் பிறப்பெடுத்ததை எண்ணி பெருமை கொள்வோம்.

நந்தனார் குடிலின் புகைப்படங்கள் மற்றும் காணொளிக்காட்சிகள் 👁👆🙏
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
வர்மம் உடலில்..
எப்படி இடகலை,
பிங்கலை
நாடியாக
பிண்ணி
பிணைந்து செயல்படுகிறது..
என்பதை..
சித்தர்கள்
வர்ம சுவடி ஏட்டின் பாடல்கள்படி..

3D அனிமேசனில்
காணுங்கள்👌🙏
(**Timeplay in 33.40 minute Play tha video)

👇🏼👇🏼👇🏼
https://youtu.be/6ljJo31cGG8

கோவை.
திருமூலர் வர்மாலஜி பயிலகத்தில்.. Dr.சண்முகஓம் ஐயா தமிழ் பேராசிரியர், வர்ம ஆசான் அவர்களினுடைய

*வேதசத்தி*
"அடிப்படை *வர்ம மருத்துவம்*"

பற்றிய 2 Days பயிலரங்கு
2021 பற்றிய தகவலுக்கு..
👇 http://www.varmam.org/workshops/workshopschedule.php
Photo from Raajan @ Singapore/Karur
சித்தவித்தை /
வாசியோகம் சார்ந்த
கேள்வியும் பதிலும் : #20a,b,c

*#20 A*
மாற்றுமத
நம்பிக்கையாளர்களும்
வாசியோக வித்தைகளை
பெற்று பயிலலாமா!?
அதனால் ஏதேனும்
பாதிப்புகள் வருமா!?

*#20 B*
வாசியோக நுட்பத்தை
பெற்றபின் எனது
சமய வழிபாடுகளில் ஈடுபடலாமா!?

*#20 C*
வாசியோக நுட்பத்தை
பழகும்போது ருத்திராட்ச
ஜபமாலை மற்றும் மந்திரங்கள்
பிரயோகிக்கலாமா!?

ஐயா இதற்கு ☝️
தங்களது விளக்கம் என்ன என்று அறிய தருவீர்களா?
● Questioner :
(Mixed Persons)

👆
இதற்கான 🗣️
சிறு பதிலளிப்பு
◆கருவூரானின்◆
குரலொலியாக.
👇 இங்கே.
*ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் (self-dependence) Close.*
👇👇👇👇👇👇
*படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு*

1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.

*மாட்டுவண்டி எங்க தாத்தா ???*

மாடு இல்லையே பா..!!

2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.

*ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?*

மாடு இல்லையே பா..!!

3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது.

*மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?*

மாடு இல்லையே பா..!!

4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.

*மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று ?*

மாடு இல்லையே பா..!!

5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே -

*மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??*

மாடு இல்லையே பா..!!

***********************

*உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது* என்று திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் *பசுவதை கூடங்கள் (cow slaughter houses)* அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) - பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.

விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. *மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான்.* இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்..

*சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?*

காளை மாடு இல்லையே பா..!!

***********************
*ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.*

*அனைவரும் சிந்திக்கவே இந்த பதிவு.... விழிப்போம் உயர்வோம்....*👍🏼
ஶ்ரீ ஆதிசங்கரரின்
"*நிர்வாண ஷடகம்*"
*பற்றற்ற ஞான நிலைக்காக*
மனதை- அதன் எண்ணங்களை
தயார் செய்யவல்ல,
*மனனம் செய்யவல்ல*
*ஞான தொகுப்பு*
மாயை விடுபடும்
விழிப்புணர்வு
பொக்கிஷம் இது!

தமிழாக்க ஒலிதொகுப்பு இது ☝️
https://t.me/truthsofsivayoga/5178
தமிழில் வாசிக்க
https://charuonline.com/blog/?p=3403
👆அச்சு பிரதியில் ..
&
👁️காணொளியில் காணுங்கள்
👇🏼👌👇🏼
https://youtu.be/5fa4v9Z9IAI