வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo
#நெஞ்சு_சளி_நீங்க_7வகை_நாட்டு_மருத்துவம்

1) இஞ்சி :

10ml இஞ்சி சாறு, 10ml ஆடாதொடை இல்லை சாறு மற்றும் 10ml தேன் ஆகியவற்றை கலந்து தினமும் மூன்று முறை காலை, பிற்பகல், மாலை என குடிக்க வேண்டும்.

2) திரிகடுகம் கசாயம் :

30 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிளி, 50 கிராம் பானக்கற்கண்டு, 50 கிராம் கடுக்காய் தோல் ஆகியவற்றை போடி செய்து தினமும் மூன்று வேலை சாப்பிடவும். அவ்வாறு சாப்பிட்டு வர சளி குணமாகும். பெரியவர்கள் 1 ஸ்பூன் சாப்பிடலாம் குழந்தைகளுக்கு 1/2 ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

3) எலுமிச்சை :

ஒரு எலுமிச்சை பழம் எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் பிழிந்து சிறு துளி தேன் சேர்த்து கலக்கி தினமும் இருவேளை சாப்பிடவும். எலுமிச்சை பழத்தில் வைட்டமின் C இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

4) தேங்காய் எண்ணெய் :

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதை கொதிக்க விடவும் பிறகு அதில் கற்பூரம் சேர்க்கவும். அது வெதுவெதுப்பாக வரும் வரை ஆறவிடவும். பின்பு அந்த எண்ணெயை உங்கள் உடம்பில் தேய்க்கவும் (மார்பு / மூக்கு / நெற்றியில் / மற்றும் பின்புறம்). அதை ஒரு நாளைக்கு 5 முதல் 7 முறை பயன்படுத்துங்கள்; அவ்வாறு செய்துவர நீங்கள் ஒரு நல்ல நிவாரணத்தைக் காணலாம். இது விக்ஸ், அமிர்தாஞ்சன் போன்ற வாபரோப் பதிலாக இயற்கையான ஒன்று.

5) துளசி :

தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சிறுதளவு துளசி மற்றும் சிறிது கற்பூரவள்ளி சேர்க்கவும். 2 கப் தண்ணீர் அரை 1/2 கப் தண்ணீராக வரும்வரை கொதிக்கவிடவும். பிறகு அதை குடிக்கவும். இது இருமல் மூலம் உங்கள் சளியை வெளியே கொண்டு வரும்.

6) ஆடாதொடை :

ஆடாதொடை இலை, மிளகு, துளசி, தூதுவளை ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். இதை வைத்து டிகாஷன் போல ரெடி செய்து தினமும் காலை, மாலை என இரண்டு முறை பருகி வர சளி/ இருமல் / வாந்தி மற்றும் மூச்சு திணறல் சரியாகும்.

7) கடுக்காய் :

மிளகு, கடுக்காய், அதிமதுரம் ஆகியவற்றை சமமான விகிதத்தில் எடுத்து அதை வறுத்து பொடி செய்து கொண்டு
காலை மாலை தேனில் சுண்டக்காயளவு உட்கொள்ளல் வேண்டும்.
#பயமுறுத்தாதீர்கள் !!! 🌷🧩🌷

1.காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2.24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

3.இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும்போது பித்தப் பை பயப்படுகிறது.

4.ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பயப்படுகிறது.

5.நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் பயப்படுகிறது.

6.சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.

7.அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.

8.அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பயப்படுகிறது.

9.சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.

10.இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.

11.எதிர்மறை (நெகடிவ்) எண்ணங்களைச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது மூளை பயந்து போகிறது.

உங்கள் உடலின் பாகங்களில் அக்கறை கொள்ளுங்கள். அவற்றை பயமுறுத்தாதீர்கள்.
இந்த உடல் பாகங்கள் அனைத்தும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் மிகவும் விலை உயர்ந்தவை. அநேகமாக உங்கள் உடலும் ஏற்றுக் கொள்ளாது. எனவே உங்கள் உடல் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.🌷🧩🌷....
வாதம் வைத்தியம்
Photo
❤️🔅🧡🔅💙🔅🖤🔅
*நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வாழைப்பூ*
🌈🌟🌈🌟🌈🌟🌈🌟
வாழைமரத்தில் உள்ள அனைத்துப் பாகங்களும் நமக்கு எல்லா வகையிலும் பயன்படக் கூடியது. இயற்கை நமக்களித்த வரப்பிரசாதம் தான் வாழைமரம். தற்போது, வாழைப்பூவின் பயன்களைக் காண்போம்.

வாழைப் பூவின் பயன்கள்:

வாழைப்பூவில் வைட்டமின் பி (Vitamin B) அதிகம் உள்ளது. இந்தப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும்.

கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை (Banana Flower) இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.

வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூலநோய் குணமாகும். வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் குணமாகும். தாது விருத்தியடையும்.

வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் (Diabetes) கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும்.

வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை, கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை, கால் எரிச்சல் குணமாகும்.

சிலருக்கு அஜீரணக் கோளாறு (Indigestion) ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக்கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் (Pepper) சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
Photo from Raajan @ Singapore/Karur
ஆசிரமத்தில் குருஜி ஒருவர் இருந்தார். மாணாக்கர்களுக்கு கற்றுத்தருவதை விட அனுபவ ரீதியாக புரிய வைக்கவே முற்படுவார். அதனாலேயே அவரிடம் உள்ள மாணாக்கர்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தார்கள். தொலைதூரத்தில் இருக்கும் அரசகுமாரர்களும் இவரைத் தேடி வந்தார்கள். உலகின் தலைசிறந்த ஞானிகளுக்கெல்லாம் ஞானியாய் விளங்கிய குருஜிக்கு தெரியாத விஷயங் கள் எதுவுமே இல்லை என்றாலும் குருஜி தன்னடகத்தோடு வாழ்ந்துவந்தார்.
வடநாட்டில் எல்லாம் தெரியும் என்னும் மமதை கொண்ட மாணவன் ஒருவன் இருந்தான். சிறுவயது முதலே கற்பதைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் வாழ்ந்து வந்தான். இளம் வயதிலேயே அனைத்தையும் கற்றுவிட்டாயே என்று அந்நாட்டு மக்கள் அவனை பாராட்டினார்கள். அந்நாட்டில் மட்டுமல்ல உலகத்திலேயே இவனை போன்ற அதிபுத்திசாலி யாருக்குமே இல்லை என்று போற்றி பாராட்டினார்கள் மக்கள்.

ஒருமுறை புனித யாத்திரைக்காக அந்த நாட்டின் வழியே ஆன்மிக பாதை மேற் கொள்ளும் யாத்திரிகள் கூட்டம் வந்தது. அந்த ஊரின் முக்கிய பிரதிநிதியாக அவன் செயல்பட்டதால் மரியாதை நிமித்தம் அவர்களை வந்து சந்தித்தான். அந்நாட்டின் மிக முக்கியமானவன் இவன் என்றும் அனைத்தையும் கற்று கரைத்துக் குடித்தவன் என்றும் அவனை பாராட்டினார்கள். யாத்திரைக்கு வந்த ஆன்மிகவாதிகள் தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள். அதோடு எங்கள் நாட்டில் ஒரு குருஜி இருக்கிறார். அவரைப் போன்ற ஞானியை நீங்கள் உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்கமாட்டார். அவரிடம் வந்து உங்கள் திறமையை நிரூபியுங்கள் என்றனர்.

உடனடியாக குருஜியை நோக்கி பயணமானான். நேரடியாக அவரிடம் சென்று என்னை விட நீங்கள் பெரிய ஞானி என்று கேள்விப்பட்டேன். நான் அனைத்தையும் கற்று வல்லவனாக இருப்பதாக என்னுடன் பழகியவர்கள் பார்த்தவர்கள் அனைவரும் சொல்கிறார்கள். அதனால் நம்மிருவரில் யார் பெரியவர் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமாகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்றான். கருத்துக்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதைப் பற்றி கவலைப்பட்டு என் நேரத்தைப் போக்கி கொள்ள நான் விரும்பவில்லை. நீயே அனைத்தையும் கற்ற ஞானி என்பதை ஒப்புக்கொள்கிறேன் என்றார் பொறுமையாக.
வடநாட்டு பிரதேசத்தில் இருந்து வந்தவனுக்கு ஆச்சரியமாகிவிட்டது. நான் தான் அறிவாளி என்று வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சட்டென்று அமைதியாகி விட்டாரே இவருடனா என் திறமையை நிரூபிக்க வேண்டும். ஒன்றும் அறியா தவர் என்று நினைத்தான். பிறகு குருஜியிடம் திரும்பி நான் இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்து செல்ல விரும்புகிறேன் தங்க அனுமதி கொடுங்கள் என்றான். அதனாலென்ன யாருக்கும் எதுவும் சொந்தமில்லை என்பதால் எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றார்.

மறுநாள் காலை குருஜி யாரையோ எதிர்பார்த்திருந்தது போல் இவனுக்கு தோன்றியது. யாரை தேடுகிறீர்கள் என்று கேட்டான். உனக்கு சொன்னால் புரியாது. நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். அனைத்தும் கற்ற ஞானியாக என்னை போற்றும்போது எனக்கு எதுவுமே தெரியாது என்று சொல்கிறீர்களே என்று அங்கலாய்த்தான். குருஜி நீ எவ்வளவு கற்றாய் என்பதை நானும் பார்க்க விரும்பு கிறேன். அதோ அந்த மரத்தில் இருக்கும் இலைகளை அள்ளிக்கொண்டு வா. அதைப் பார்த்து நீ எவ்வளவு கற்றிருக்கிறாய் என்பதை முடிவு செய்கிறேன் என்றார். இவனும் அப்பாடி இப்போது என்னிடம் நன்றாக மாட்டிக்கொண்டார் என்று கை நிறைய இடமில்லாமல் இலைகளை அள்ளி வந்து இப்போது பார்த்தீர்களா.. உள்ளங்கையில் இடமில்லாத அளவுக்கு இலைகள் இருப்பதை போல் தான் நான் ஞானத்திலும் அனைத்தையும் பெற்று முழுமை பெற்றிருக்கிறேன் என்றான்.
அதைப் பார்த்த குருஜி பொறுமையாக சொன்னார். ஞானம் என்பது கற்பதால் வருவதல்ல. உணர்வால் வருவது. அதை புரிந்துகொள்ள மட்டுமெ முடியும். இந்த மரத்தில் இருக்கும் இலைகள் எல்லாம் ஞானம் போன்றது நீ பறித்த இலைகள் தான் நீ பெற்ற ஞான துளிகள். இன்னும் நீ பெற வேண்டிய ஞானம் இந்த மரத்தின் இலைகள் போல் உலகில் படர்ந்திருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் நீ உணர வேண்டுமானால் மனதில் நான் என்னும் கர்வத்தைத் தங்க விடாதே என்று அறிவுரை கூறினார்.
நாமும் அப்படித்தான் வாழ்கிறோம். எல்லாம் எனக்குத் தெரியும் என்னும் எண்ணம் நம்மை அழிக்கவே செய்யும். ஆணவத்தால் ஆன்மிகத்தையும் உணர முடியாது. ஆத்மார்த்தமான அன்பையும் உணர முடியாது.

🌹🙏
*22/11/2020 இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை Google Meet கலந்துரையாடல் உறவுகளே*👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


பாரம்பரிய அரிசிகள் அதன் பயன்கள்:

முதல் நான்கு அரிசிகள்:

மாப்பிள்ளை சம்பா அரிசி

கருப்பு கவுனி அரிசி

காட்டுயானம் அரிசி

கருங்குருவை அரிசி


மேற்குறிப்பிட்ட அரிசி வகைகளை எவ்வாறு பயன்படுத்துவது அதன் பயன்கள் என்ன?


அந்த அரிசி வகைகளை சமையலுக்கு எவ்வாறு உபயோகிப்பது?


இந்த அரிசி வகைகளை யார் சாப்பிடலாம்?


இந்த அரிசி வகைகள் எங்கு கிடைக்கும்?

இந்த அரிசி வகைகளை கொண்டு எந்த நோய்கள் சரியாகும்?


அனைத்து கேள்விகளுக்கும் பதில் இந்த கலந்துரையாடல் இடம் பெறும் உறவுகளே
Google Meet (For pre register ):
Mobile no : +919994826102
நாள்: 22/11/2020
நேரம் : 5.00 PM to 6.00 PM
*இருமல் நீங்க*

சளியும் இருமலும் வந்துவிட்டால் நாம் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கூடவே தொண்டைவலியும் வந்துவிட்டால் அவ்வளவுதான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம்.

தே.பொருட்கள்..
அதிமதுரம் - 50 கிராம்
கரிசலாங்கண்ணி - 50 கிராம்
சுக்கு - 25 கிராம்
மிளகு - 25 கிராம்
திப்பிலி - 25 கிராம்
வெங்காரபற்பம் - 20 கிராம்
மஞ்சள் - 10 கிராம்

இவைகளை தூளாக்கி கலந்து, வேளைக்கு 2 கிராம் வீதம் சாப்பிட எப் பேர்பட்ட இருமலும் தீரும்.