வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
*இயற்கை உணவு பயிற்சி*

*பாரம்பரிய அரிசிகள் அதன் பயன்கள் அதன் வகைகள்*

*சிறுதானிய உணவுகள் அதன் வகைகள்*

*வீட்டு வைத்தியம்*

*பாட்டி வைத்தியம்*


*அனைத்தும் வாட்ஸ் அப் குழு மூலமாக குறைந்த* *கட்டணத்தில் text & audio வடிவில் பயிற்சி* *நடைபெறும் உறவுகளே*
*விருப்பமுள்ளவர்கள்* *இணைந்து கொள்ளலாம்*
*+919994826102*
நம் நாவில் *உலாவும்
பலவகையான பேச்சு..

1. # அன்புப் பேச்சு :
நட்பையும், பாசத்தையும்,
நேசத்தையும் வெளிப்படுத்தி
உறவுகளை தழைக்கச் செய்யும்.
இன்பத்தின் இதய மூச்சு. இரும்புக்கதவையும் திறக்கும் சக்தி

2. # அமைதிப் பேச்சு :
அக்கறையையும், அன்பையும்,
பிறர் நலனில் ஆர்வத்தையும்
வெளிப்படுத்தும்

3. # ஆலோசனைப் பேச்சு :
உறவையும், நட்பையும்
உறுதிப்படுத்தி உயர்வுக்கு
வழி காட்டும்

4. # ஆணவப் பேச்சு :
அற்ப சந்தோசத்தை முதலில் தந்து,
முடிவில் அழிவைத் தந்து விடும்

5. # அவமானப் பேச்சு :
அடுத்தவரை துன்புறுத்தி காயப்படுத்தும்

6. # வாழ்த்துப் பேச்சு :
பேசுபவருக்கும், கேட்பவருக்கும்
மகிழ்வைத் தரும்

7. # மகிழ்ச்சிப் பேச்சு :
நிரந்தர இன்பத்தைத் தரும்

8. # மழலைப் பேச்சு : மகிழ்ச்சி தரும்

9. # மங்கையர் பேச்சு : மயக்கம் தரும்

10.# திமிர் பேச்சு :
முட்டாள் தனத்தை பறை சாற்றும்.
அறியாமையை, கல்லாமையை,
புரியாமையை வெளிச்சம்
போட்டு காட்டும்

11.# வீண் பேச்சு :
நேரத்தை வீணடிக்கும்,
விபரீதத்தை தேடித்தரும்,
வம்புகளை வளர்க்கும்,
வளர்ச்சியைத் தடுக்கும்

12. # பயப் பேச்சு : பீதியைக் கிளப்பும்

13. # கண்டனப் பேச்சு :
எதிர்ப்பையும், வெறுப்புணர்வையும்
வெளிப்படுத்தும்

14.# கவிதைப் பேச்சு :
கவர்ச்சி நிறைந்திருக்கும்

15 . # பண்புப் பேச்சு : பயன் தரும்

16. # பயனற்ற பேச்சு :
பலர் வெறுப்பைத் தேடித்தரும்

17. # இனிமையான பேச்சு :
வாழ்வில் உயர்வைத் தரும்.
காரியம் கைகூட வைக்கும்

18. #தெளிவான பேச்சு :
குழப்பத்திலிருந்து காக்கும்

19. # நிதானப் பேச்சு :
நாளும் நன்மையைத் தரும்

20. # ஏளனப் பேச்சு, கேலிப் பேச்சு,
கிண்டல் பேச்சு. இழிவுப் பேச்சு :
தற்காலிக இன்பத்தைத் தரும்

அத்தனையும் உள்ளடக்கியது
வள்ளுவரின் இனியவை கூறலும்,
பயனில சொல்லாமையும்..

நம் பேச்சு எவ்வகை
நம் சிந்தனைக்கு.......

நிரந்தரமில்லாத வாழ்க்கையில்
கொண்டு செல்ல ஒன்றுமில்லை இவ்வுலகில்...!!!

மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும்
நாம் சந்திக்கும் மனிதர்களிடம்
#அன்பாகவும் #இனிமையாகவும் பேசி
கடந்து செல்வோமே.✍🏼🌹
வாதம் வைத்தியம்
Photo
சீரகம்

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.

* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

* சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

* சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

* பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

* கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.

* மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
Photo from Raajan @ Singapore/Karur
உயிர் நம் உடலில் எந்த இடத்தில்
இருக்கிறது?-சித்தர்கள் கூறும் விளக்கம் !!!

இந்த உடலுக்கு உயிர் வந்தது எப்படி சிங்கி?-
அது தொந்தி நடுக்குழி தொப்புழ் வழியடா சிங்கா!
இந்த உடலுக்கு உயிர் எங்கே நின்றது சிங்கி? -
அது அந்தரமாயண்ட மாக்கொடி யல்லவோ சிங்கா!”
(ஞானக் குறவஞ்சி)

தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கும் போது
அதன் தொப்புழ்க் கொடியில் உயிர்
அந்தரந்தமாக இருக்கிறது என்கிறது இந்தப்
பாடல். எனவேதான் பிறக்கும் குழந்தை
தொப்புழ்க் கொடியுடன் சேர்ந்தே பிறக்கிறது

குழந்தை தாயின் வயிற்றில் இருந்து
வெளிவந்து, முதல்
முதலாக காற்று உடலின் உள்ளே புகுகிறது.

உயிரும் சுவாசத்துடன் கலந்து உள்ளே
செல்கிறது. உள்ளே சென்ற உயிர் உடலில் எங்கே சென்று
அமர்வதாக சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்
என்று பார்ப்போம்!!!!

“உச்சிக்குக் கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை!”
- திருமந்திரம் – 309

“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே!”
- திருமந்திரம் 197m

இவ்வாறு உச்சிக்குக் கீழே, உண்ணாக்கு மேலே
உயிர் இருப்பதாக நம் சித்தர்கள் கூறுகிறார்கள்.

மேலும் அது 1008 இதழ்த் தாமரை மலரில்
வீற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். அங்கே
வீற்றிருந்தாலும் அதன் வடிவம் எத்தகையது
என யாருக்காவது தெரியுமா என்றால்
அதையும் கூறுகிறார்கள் நம் சித்தர்கள்.

“மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்று”
- திருமந்திரம் 1777

“ஜோதியே! சுடரே! சூழ் ஒளிவிளக்கே!”
- மாணிக்கவாசகர்

“ஊனறிந்துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்”
- திருமந்திரம் 1797

“உற்றிந்து பாரடா உள் ஒளிக்கு மேல் ஒளி
அத்தனார் அமர்ந்திடம் அறிந்தவன் அனாதியே! “
- சிவவாக்கியர்

இவ்வாறு அணுவுக்கு அணுவாக நீல நிற
ஒளிவட்டமாக விளங்கும் சக்தியின் பீடத்தின்
நடுவில் தீபச் சுடராக சிவம் விளங்குகின்றது
எனவும் அந்தத் தீப வடிவே உயிரின் வடு
எனக் கூறப்படுகிறது.

இதையே திருமூலர் உயிர்தான் சிவலிங்கம்
எனத் தெளிவாகக் கூறுகிறார்.

“தெள்ளத் தெளிவோர்க்குச் சீவன் சிவலிங்கம்”
- திருமந்திரம் 1823-

வடிவத்தைக் கூறிய நம் சித்தர்கள், உயிரின்
அளவைப் பற்றி மட்டும் கூறாமலா
விட்டிருப்பார்கள்.

ஒரு பசுவின் உடலில் இருந்து ஒரு மயிரை
எடுத்து, அதை ஒரு லட்சம் பிரிவாக பிரித்தால்
,அதன் ஒரு பிரிவின் அளவே உயிரின்
அளவாகுமாம். இதைக் கூறியது நம்
திருமூலர்தான்.

“மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறது நூராயிர்த்தொன்றே!”
– திருமந்திரம்

மனமது செம்மையானால் மந்திரம்
செபிக்கவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை
உயர்த்தவேண்டாம்
மனமது செம்மையானால் வாயுவை
நிறுத்தவேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம்
செம்மையாமே .
– அகத்தியர் ஞானம் 23

மனம் செம்மையானால் மந்திரங்களும்
வேண்டாம். எந்த கிரியைகளும் வேண்டாம்
என்று மனத்தின் மாண்பை அகத்தியர்
விளக்குகிறார். அத்தகைய மனத்தின்
மாயங்கள் எத்தனை? மனத்தைச்
செம்மைப்படுத்தும் மார்க்கம் என்ன என்று
சித்தர்கள் என்ன கூறுகிறார்கள் என்று
பார்த்தால்,

“மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை”
மன்மனம் என்றால் நிலைபெற்ற மனம்.

இவ்வாறு வாயுவுக்கும் மனத்திற்கும்
இடையில் இருக்கும் தொடர்பை
விளக்குகிறார் திருமூலர்.

மூச்சுக்கும்
மனத்திற்கும் இடையில் இருக்கும்
பந்தத்தை மூச்சைவைத்து மனத்தை மடக்கும்
மாயத்தை நம் சித்தர்கள் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகப் பல்வேறு
வழிகளில் கூறிவிட்டார்கள்.

இன்னும் சிவவாக்கிய சித்தர்,
உருத்தரித்த நாடியில்
ஓடுகின்ற வாயுவை
கருத்திலே இருத்தியே
கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலனாவார்
மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் ஆணை அம்மை ஆணை உண்மையே
வயது முதிர்ந்த கிழவரும் மனத்தின் சக்தியைப்
பயன்படுத்தி, வாயுவை
நெறிப்படுத்த முடிந்தால், அவரே குமாரனாவர்.

மேனியும் சிவந்திடும் என ஆணை இடுகிறார்
சிவவாக்கியர். இவ்வாறு மனத்தின் மாட்சியைப்
பற்றி நம் சித்தர்கள் கண்ட பல உண்மைகள்
இன்னும் ஆராய்ந்து அறியப்படாமல் உள்ளன.

நாம் யார்? உடலும், மனமும் மட்டும் தான்
நாமா? எது இல்லாவிடின் இவ்வுடல் இயக்கம்
செயல்படாமல் நிற்கிறது?

எப்போது ஒருவர்
இறந்து விட்டார் என்று கூறுகிறோம்? இறந்த
உடன் எதோ ஒன்று இவ்வுடலை விட்டு
பிரிகிறது அல்லவா!

அந்த எதோ ஒன்று
இவ்வுடலில் இருப்பதால் தானே நம் உடல்,
மனம் செயல்படுகிறது. அது என்ன?
நமது ஞானிகள் இதை உயிர் என்றும் ஆன்மா என்றும் “ஜீவாத்மா” என்றும்கூறிபிடுகின்றனர்.

இவ்வுயிர் அழிவற்றது என்றும் நாம் யார் என்ற
கேள்விக்கு “நாம் என்பது” நம் உடலில் தங்கியுள்ள உயிர் அதாவது ஜீவாத்மா தான் நாம் என்று கூறிப்பிடுகின்றனர்.

இவ்வுயிரை அறிந்து , தெரிந்து, உணர்ந்தாலே
நாம் யார் என்பதை தெளிவாக முற்றிலும் உணர முடியும்.

இவ்வுயிரை அறிய முதலில்இவ்வுயிர் நம் உடலில் எங்கு இருக்கிறது
என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கு
இருக்கிறது என்று தெரிந்தால் தான் நாம்
உடலில் அங்கு சென்று அதை
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
*அசைவம்சாப்பிடலாமா? # ஓஷோ அவர்களின் விளக்கம்


இறை நம்பிக்கை உள்ளவர்கள் ???
அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????
...
இந்த கேள்வியை
கேட்காத மனிதர்கள் இல்லை
இதற்கு
பதில் தராத
குருவும் இல்லை
ஆயினும்
கேள்வி தொடர்கிறது
...
*இதோ ஓஷோ அவர்களின் பதில்...*
உணவுக்கும்
இறைவனுக்கும்
எந்த சம்மந்தமும் இல்லை..
...
உணவுக்கும்
கடவுள் கோபிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை...
....
உணவுக்கு
கடவுள் தண்டிப்பார் என்பதற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை.
...

*உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு*
..
*உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு*
..
*உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு*
..
*உணவுக்கும் மனிதன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு...*
..
*உணவுக்கும் மனிதன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு...*

*உணவுக்கும் மனித மனதிற்கும் சம்மந்தம் உண்டு..*
..

*மனதிற்கும் இயற்கைக்கும், இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு..*

------------
1. கர்மாவின் காரணமாக
பிறவி எடுத்தவன் மனிதன்..
அந்த அதைக் கரைக்கவே
மனித பிறவி...*

2. தாவர உயிரினங்களுக்கு
கர்ம பதிவுகள் குறைவு
மாமிச உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள் அதிகம்...*

3. எந்த
உணவை
மனிதன் உண்டாலும்
அந்த
உணவான
உயிர்களின்
பாவ கணக்கை
அந்த
மனிதனே அடைக்க வேண்டும்.*
----------- ------------

4. அம்மாவை தேடி அலையும் தாயில்லாத
குஞ்சுகள் மற்றும் குட்டிகள்
தாயின் மனம் மற்றும்
அந்த குட்டியின் மனம்
எவ்வாறு
தேடி தவித்து இருக்கும்? அதன்
தாயை கொன்று தின்னும்
மனிதன்
உணரவேண்டியது
இதுதான்.
அதிக பாசம் உள்ள
ஆடு கோழி மீன்
இவைகளை
மனிதன் உண்பது
பாச தோஷம் ஆகும்.
அந்த தோஷத்தை
மனிதன்
அடைந்தே தீருவான்
அந்த
கர்மாவையும் சேர்த்து கரைக்க
ஒருவன்
தைரியமாக முன்வந்தால்
அவன்
தாராளமாக
அசைவம் உண்ணலாம்
இதில்
கடவுளுக்கு என்ன பிரச்சனை ???
------------------ --------------
ஒருவர்
வங்கியில்
ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்
மற்ற ஒருவர்
ஒரு கோடி வாங்குகிறார்
இதில்
மேனேஜருக்கு என்ன பிரச்சனை
கடன் வாங்கியவனே
கடனை கட்ட வேண்டும்.*
------- -------- ---------

6. சில நேரங்களில்
விரதம் இருப்பது
உடலுக்கு மட்டும் நல்லதல்ல
பிறந்த பிறவிக்கும் நல்லதே காரணம்
அந்த விரத நாளில்
மனிதனால்
எந்த உயிரும் பாதிக்காததால்...*
--------- ----- -------------

7. காட்டில் கூட
ஆடு மாடு
யானை குதிரை ஒட்டகம்
இவைகளை
மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை.
புலி சிங்கம்
போன்ற அசைவ உணவு உண்ணியே
மிருகம் என்று கூறுகின்றோம்.
ஆக, சைவ உண்ணிகளுக்கு
மிருகம் என்ற பெயர்
காட்டில் கூட இல்லை..*
------ ------- ------

8. உடலால்
மனித பிறவி சைவம்...
உயிரால்
மனித பிறவி சைவம்...
குணத்தால்
மனித பிறவி
அசைவம் மற்றும் சைவம்.

9.ஆடு, மாடு, மான், யானை
போன்றவை
உடலால் சைவம்
உயிரால் சைவம்
மனதாலும் சைவம்.
---- ----- ----

*ஆகவே, மனித பிறவியின் உணவு #சைவமாக இருத்தலே மனிதனின் #தர்மமாகிறது.*
என்பதால்
*அறிவில் சிறந்த நம் முன்னோர்கள் மனித பிறவிக்கு சிறந்தது சைவம் என வழிகாட்டி சென்றார்கள்.*

🙏🙏🙏🙏🙏🙏