Mediaகள்ளக்குறிச்சி மாவட்டத்துல நடந்த பல்வேறு நிகழ்ச்சிகள்ல பங்கேற்கிறதுக்காக, வாரிசு அமைச்சர் வந்துருக்காரு. அவர் கலந்துக்கிற கூட்டத்துல எல்லாம் மக்கள் பெருந்திரளா கலந்துக்கிட்டாங்கன்னு கணக்கு காட்டுறதுக்காக, உபிஸ் எல்லாம் கூட்டத்துக்கு ஆள்பிடிக்குற வேலையில ஈடுபட்டிருக்காங்க. சரக்கு வாகனம், டெம்போன்னு வாகனங்கள வாடகைக்கு பிடிச்சவங்க, தலைக்கு இவ்வளவு தாரோம்னு ரேட் பேசி கூட்டம் சேத்துருக்காங்க… இளம்பெண்கள், வயதானவங்க மட்டுமில்லாம சிறுமிகளையும் விடாம தலைக்கு100 ரூபா கொடுத்து கூட்டத்துக்கு வண்டி ஏத்தி அனுப்பியிருக்காங்க.என்னப்பா இது100 ரூபா தாறீங்க? தக்காளி கிலோ 160 ரூபாய்…. சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய்…இப்படி காய்கறி ஒவ்வொண்ணும் ஆனைவில, குதிர விலைக்கு விக்குது… இந்த 100 ரூபாலாம் கட்டுப்படியாகுமான்னு வயதான பெண்கள், கேள்வி கேக்க… திமுககாரங்க திருதிருன்னு முழிச்சிருக்காங்க…இப்படியெல்லாம் தலைக்கு விலை வச்சித்தானே, திமுக கூட்டத்த சேர்க்க வேண்டியிருக்கு… நல்லது செஞ்சாதான் மக்கள் தானாவே உங்களப் பார்த்து வருவாங்களே… அதுக்குத்தானே வழியே இல்லன்னு தெரிஞ்சிடுச்சே…. இனிமேலாவது கட்டுப்படியாகுற ரேட்ட கொடுங்கப்பா… அவங்களுக்கு அந்த ஒருநாள் பொழப்பாவது நல்லபடியா போகட்டும்னு நாங்க சொல்லல…. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
via News J : https://ift.tt/dbscl2W
via News J : https://ift.tt/dbscl2W
👍1
Mediaகிலோ தக்காளி எவ்வளவு என்று கேட்டால் ஒரு நிமிடம் தலையே சுற்றிவிடும் இல்லத்தரசிகளுக்கு… வெங்காயம், இஞ்சி, காய்கறி என்று எதைக்கேட்டாலும் விண்ணை முட்டும் அளவிற்கு விலை சொல்லும் கடைக்காரர் மீது கோபத்தை கொப்பளித்துவிட்டு, சரி, நீங்க என்ன பண்ணுவீங்க, அரசாங்கமே அந்த லட்சணத்தில் இருக்கு என்று அரசையும் கரித்துக்கொட்டிக்கொண்டிருக்கின்றனர் தமிழ்நாட்டு இல்லத்தரசிகள்..ஆனால் இதையெல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத விடியா திமுகவின் முதல்வர் ஸ்டாலினோ, பீகார் , பெங்களூரு என்று அரசியல் டூர் போய்க்கொண்டிருக்கிறார்… உள்ளூரிலேயே மக்கள் பிரச்சனையைத் தீர்க்க வழிதெரியாதவர் அங்கே நாட்டு பிரச்சனையை என்ன செய்யப்போகிறார் என்று கிண்டலும், கேலியுமாய் பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கிறது தமிழகம் முழுக்க…இந்தவேளையில்தான், விலைவாசியை கட்டுப்படுத்த தவறிய விடியாத இந்த ஆட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தமிழகம் முழுவதும் மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது அதிமுக…. இதில் முன்னாள் அமைச்சர்களே, வெங்காய மாலை, தக்காளி மாலை சகிதமாக, மேடையில் வந்து முதல்வர் ஸ்டாலினின் திராணியற்ற ஆட்சியை கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்… இதில் ஹைலைட்டே என்னவென்றால், இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுகவினருக்கு நிகராக, பொதுமக்களும் கலந்து கொண்டு தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்…ஜிம்மின் சென்று, ஒர்க்கவுட் செய்யும் ஸ்டாலினுக்கு ரேஷன் கடையில் கால் கடுக்க காத்திருக்கும் மக்களின் பிரச்சனைகள் எப்படி புரியப்போகிறது? ஈசிஆர், ஓஎம்ஆர் என்று சைக்கிளில் செல்லும் முதல்வர் கொஞ்சம் தன் சைக்கிளை மார்க்கெட் பக்கம் திருப்பியிருந்தால் விலைவாசி உயர்வு என்றால் என்ன என்பது தெரிந்திருக்கும்… ஆனால் , அவர்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வியூகம் அமைக்கிறேன் என்று டூர் டூர் ஆகப் போகிறாரே ஒழிய தமிழ்நாட்டு மக்களின் பஞ்சம் பட்டினி அறியவில்லையே…முன்னாள் அமைச்சர்களை எப்படி கைது செய்யலாம், எதிர்க்கட்சிகளை எப்படி முடக்கலாம் என்று மட்டுமே சதாசர்வகாலமும் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு முதல்வர்… ஊழல் செய்த அமைச்சர்களை எப்படி காப்பாற்றுவது என்று மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கும் ஒரு முதல்வர் எப்படி மக்கள் பிரச்சனைகளை சிந்திப்பார் என்று குமுறுகிறார்கள் இதையெல்லாம் உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் இல்லத்தரசிகள்…இந்தவேளையில்தான், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், எப்போது நாடாளுமன்ற தேர்தல் வரும், எப்போது எங்களுக்கு உண்மையான விடியல் கிடைக்கும்? என்கிற கேள்வியையே முன்வைத்தனர். அந்த அளவுக்கு இந்த விடியா திமுக ஆட்சியின் இரண்டாண்டு கால அரசில் கொடுமைகளை சந்தித்திருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்ஆக, விலைவாசி உயர்வால் கொதித்தெழுந்து, இந்த விடியா திமுகவை வீட்டுக்கு அனுப்பத் தயாராகிவிட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள்… அதன் வெளிப்பாடுதான் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இன்று நாம் பார்த்த எழுச்சி என்பதுதான் நிதர்சனம்.
via News J : https://ift.tt/mXgYSjz
via News J : https://ift.tt/mXgYSjz
Mediaபட்டா நிலத்தை மயானமாக பயன்படுத்த முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற முழு அமர்வு தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது. அதன் சாராம்சத்தை பின்வருமாறு காண்போம்.தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி பட்டா நிலத்தை மயானமாகப் பயன்படுத்த முடியாது. மேலும், மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வானது தீர்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது.நடந்தது என்ன?…திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நொச்சிலி கிராமத்தை சேர்ந்த பாபு நாயுடு என்பவர், உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில், “எங்களது கிராமத்தில், இறந்தவர்களின் உடலை எரிக்கவும், அடக்கம் செய்யவும் தனியாக மயானம் உள்ளது. ஆனால் எங்களது கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி என்ற பெண்மணி, இறந்த அவரது கணவரின் உடலை சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.chennai highcourtஇந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பட்டா நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் உடலை தோண்டியெடுத்து, மயானத்தில் அடக்கம் செய்வதற்கான நட வடிக்கையை மாவட்ட நிர்வாகம் குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும். இதற்கான செலவுத்தொகையை ஜெகதீஸ்வரியிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.பட்டா நிலத்தில் பிணத்தை புதைக்க முடியுமா? முடியாதா?இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஸ்வரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் அடக்கம் செய்ய முடியுமா? முடியாதா? என்பது குறித்த இந்த வழக்கு மீதான விசாரணை தலைமை நீதிபதி உத்தரவுப்படி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜி.ஜெயச்சந்திரன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பஞ்சாயத்து சட்ட ரீதியாக மயானம் என ஒதுக்கப்பட்ட அல்லது, அறிவிக்கப்பட்ட இடத்தில்தான் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். பட்டா நிலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது. எனவே, சட்ட விரோதமாக பட்டா நிலத்தில் புதைக்கப்பட்ட மனுதாரரின் கணவரின் உடலைத் தோண்டியெடுத்து மயானத்தில் புதைக்க வேண்டும். பொது சுகாதாரத்துக்கு எதிராக, விதிகளை மீறி பட்டா நிலங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்திருந்தால் அதை மாற்றுவதற்கான செலவுத் தொகையையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
via News J : https://ift.tt/7mRHSCQ
via News J : https://ift.tt/7mRHSCQ
Mediaதமிழக அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தியதாக அதிமுக எம்.பி. சி.வி. சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து சாலை மறியல், விழுப்புரத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்ததை கண்டித்து கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியது உள்ளிட்ட வழக்குகள் அதிமுக எம்.பி, சி.வி.சண்முகம் மீது தொடரப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி அனந்த் வெங்கடேஷ், 6 வழக்குள் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லையெனக் கூறி அவற்றை தள்ளுபடி செய்தார்.
via News J : https://ift.tt/OTFIpyn
via News J : https://ift.tt/OTFIpyn
Mediaதமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 377 எச்.ஐ.வி பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், மத்திய சிறைச்சாலை மருத்துவமனைகள் மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், இவற்றில் 186 மையங்களை மூட வேண்டும் என்று மத்திய அரசின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்துக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஏற்கனவே, உலக சுகாதார நிறுவனம், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆலோசனை மையங்களையும், பரிசோதனைக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில், மத்திய அரசின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கிறது.எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூடினால், தமிழகத்தில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் முற்றிலும் முடங்கிவிடும். அதேபோல, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வும், எய்ட்ஸ் தொற்றாளிகளுக்கு கிடைக்கும் ஆலோசனைகளும் கூட தடைபட்டுவிடும்.மேலும், 2500 தொழிலாளர்களின் வேலை பறிபோகும் நிலையும் ஏற்படும். எனவே, சிறந்த மருத்துவ சேவைகளையும், மருத்துவத்துறையின் நோக்கங்களையும் சிதைக்காமல் இருக்க தமிழக அரசானது இடமளிக்கக்கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்களும் சில அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எய்ட்ஸ் மையங்களை மூடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.மூடப்படும் 186 மையங்கள்…! ஆர்ப்பாட்டம் செய்யப்போகும் ஊழியர்கள்..!இந்த எச்.ஐ.வி. நம்பிக்கை மையங்களில், 186 எச்.ஐ.வி. பரிசோதனை மையங்களை மூட மத்திய அரசு சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 அரசு மருத்துவமனைகளில் நம்பிக்கை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் வேலூர் நகர்புற மருத்துவமனை மற்றும் மாவட்ட காசநோய் மையம் ஆகியவற்றில் செயல்படும் நம்பிக்கை மையங்களை மூட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை மூடினால் வேலூர் நகரில் எச்.ஐ.வி பரிசோதனைக்கு வரும் மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். எனவே நம்பிக்கை மையங்களை மூடும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் மு.ஜெயந்தி கூறியதாவது:- தமிழகத்தில் 186 மையங்களை மூட வேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் சுற்றரிக்கை கடந்த 5-ந் தேதி அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் 27 ஆம் தேதி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
via News J : https://ift.tt/aPW0CxV
via News J : https://ift.tt/aPW0CxV
Mediaஇன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னையை சேர்ந்த இரண்டு சிறுமிகளை இளைஞர் ஒருவர் கேரளாவிற்கு விமானம் மூலம் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்…இன்ஸ்டாகிராமில் பழகி ஆசை வார்த்தைகள் கூறி கடவுளின் தேசத்திற்கு சிறுமிகளை கடத்த முயன்ற புகாரில் போலீசார் இந்த ரோமியோவை தேடி வருகிறார்கள்.சென்னை முகப்பேர் பகுதியில் வசித்து வருபவர் மோகன்லால் தசாரமின், இரண்டு மகள்களும் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மேலும், மாணவிகள் இருவரும் இன்ஸ்டாகிராமில் பல மணி நேரம் மூழ்கி கிடந்ததாக சொல்லப்படுகிறது. இதனை பெற்றோர் பலமுறை கண்டித்தும், சிறுமிகளால் இன்ஸ்டாகிராமில் இருந்து விடுபட முடியவில்லை.Teenagers require 'very little skill' to become cybercriminals, report reveals | The Independent | The Independentஇந்த நேரத்தில் சிறுமிகளிடம், மேத்தா பாரத் என்னும் பெயரில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர், ஆசை வார்த்தைகளை கூறி மூளைச்சலவை செய்துள்ளார். சிறுமிகளை சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் கேரளா மாநிலத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார் அந்த ரோமியோ. இளைஞரின் ஆசை வார்த்தையில் மயங்கிய சிறுமிகள் இருவரும், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கேரளாவுக்கு செல்ல சென்னை விமான நிலையம் சென்றுள்ளனர்.இதனிடையே, மோகன்லாலுக்கு பள்ளியில் இருந்து போன் செய்து, அவரது பிள்ளைகள் பள்ளிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்லால், தனது மகள்களை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சிறுமிகள் பயன்படுத்திய இன்ஸ்டாகிராம் ஐடியையும் கொடுத்துள்ளனர். இதன் பேரில் திருமங்கலம் காவல் சரக உதவி ஆணையாளர் வரதராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.What Is Anonymous? And All about Hacktivistsஇதனிடையே சென்னை விமான நிலையத்திற்கு சென்ற இரண்டு சிறுமிகளும்,
அங்கு புதிதாக வாங்கிய தொலைபேசியில் இருந்து சம்பந்தப்பட்ட இளைஞரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலையம் விரைந்த தனிப்படை போலீசார், கேரளாவிற்கு செல்ல காத்திருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலத்திற்கு வரச்சொன்ன அந்த All in All அழகுராஜா மேதா பாரத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகளை பெற்றோர் முறையாக கண்காணிக்காவிட்டால் இதுபோன்ற அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
via News J : https://ift.tt/61rKc5p
அங்கு புதிதாக வாங்கிய தொலைபேசியில் இருந்து சம்பந்தப்பட்ட இளைஞரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதையடுத்து விமான நிலையம் விரைந்த தனிப்படை போலீசார், கேரளாவிற்கு செல்ல காத்திருந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் சிறுமிகளை ஆசை வார்த்தை கூறி கேரள மாநிலத்திற்கு வரச்சொன்ன அந்த All in All அழகுராஜா மேதா பாரத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் பிள்ளைகளை பெற்றோர் முறையாக கண்காணிக்காவிட்டால் இதுபோன்ற அசம்பாவித நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
via News J : https://ift.tt/61rKc5p
Mediaசென்னை மாநகராட்சியின் தெற்கு பகுதியில் உள்ள மடிப்பாக்கம் குடியிருப்புகள் நிறைந்த பகுதி ஆகும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் உட்பட பல்வேறூ தரப்பினரும் இங்கு வசிக்கின்றனர்.மாநகராட்சியின் 14 வது மண்டலமான பெருங்குடிக்கு உட்பட்ட பகுதியில் வரும் மடிப்பாக்கத்தில் தற்போது மழைநீர் வடிகால், பாதாளச் சாக்கடை மேம்பாடு ஆகிய கட்டிட்டப் பணிகள் நடந்து வருகின்றன. அதன் காரணமாக, மடிப்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, போக்குவரத்து அதிகம் உள்ள பொன்னியம்மன் கோயில் தெரு, ஏரிக்கரை தெரு, மடிப்பாக்கம் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.அதாவது பொன்னியம்மன் கோயிலை ஒட்டிய தெரு பல மாதங்களாக சேதமடைந்த நிலையில்தான் உள்ளது. மடிப்பாக்கம் – மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடப்பதால் பெரும்பாலான வாகனங்கள் பொன்னியம்மன் கோயில் தெரு வழியாகவே வேளச்சேரி, மேடவாக்கம், தாம்பரம் பகுதிகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. சாலைகள் தரமற்றதாக இருப்பதால் தினமும் அச்சத்துடனே வாகனங்களை ஓட்டுகிறோம் என்று வாகன ஓட்டிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.Medavakkam - -Madipakkam road will be renovated? | மேடவாக்கம் - -மடிப்பாக்கம் சாலை புதுப்பிக்கப்படுமா? | சென்னை செய்திகள் | Dinamalarமேலும் அப்பகுதியினைச் சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றூம் அதை சுற்றியுள்ள தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்காக சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளனர். மழை பெய்தால், சாலைகளில் எங்கு பள்ளம் உள்ளது என்பதுகூட தெரியாத அளவுக்கு நிலைமை மோசமாகிவிடும். அதிக அளவில் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், முறையான திட்டமிடலுடன் பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக மடிப்பாக்கம் ஏரியை சுற்றி நடைபாதையும், சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏரிக்கரை தெருவுக்கு காலை, மாலை வேளைகளில் ஏராளமானோர் வந்து செல்வது வழக்கம். இந்தத் தெருவில் பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக சாலைகளை தோண்டி போட்டனர். பல மாதங்கள் ஆகியும் திட்டப் பணிகள் முடிந்தபாடில்லை. மழைக்காலம் தொடங்கிவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகிவிடும். எனவே, பருவ மழை தொடங்குவதற்கு முன்பு பணிகளை மாநகராட்சி விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் அரசு ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.மடிப்பாக்கம் | மழைநீர் வடிகால் பணிகள் தாமதம்: தடுப்புகளும் இல்லாததால் அசம்பாவித பீதியில் மக்கள் | Rainwater drainage works issue in madipakkam ramnagar - hindutamil.inமாநகராட்சி அதிகாரிகளின் தகவல் படி, “மடிப்பாக்கம் பகுதியில் நீண்டகால அடிப்படையிலான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. “பொன்னியம்மன் கோவில் தெரு, மடிப்பாக்கம் பிரதான சாலை, ஏரிக்கரை தெரு ஆகிய இடங்களில் பெருநகர் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டு, குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்து, மாநகராட்சியிடம் ஒப்படைத்த பிறகு, புதிதாக சாலை அமைக்கப்படும். எனினும், திட்டப் பணிகளை விரைந்து முடித்து, மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தேவைக்கேற்ப, பழுதடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைத்து தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தினை முன்வைத்தார்கள்.
via News J : https://ift.tt/LyJNehA
via News J : https://ift.tt/LyJNehA
Mediaஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சிறப்பு சுற்றில் இடங்கள் பெற்றூ கல்லூரிகளில் சேராத மாணவர்கள், ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுத முடியாது என மருத்துவ கலந்தாய்வுக் குழுவான எம்சிசி தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூறிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல் கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகமான டி.ஜி.எச்.எஸ் மற்றும் எம்சிசி இணையம் வழியே நடத்தி வருகிறது.MBBS/BDS Seats in India through NEET 2023அதன்படி நடப்பு ஆண்டுக்கான கலந்தாய்வு http//mcc.nic.in/ என்ற இணையதளத்தின் வழியாக நேற்று தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9-ம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், காலி இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு செப்டம்பர் 21-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.என்ன என்ன மாற்றங்கள்..!இந்நிலையில் நடப்பாண்டிற்கான கலந்தாய்வு நடைமுறையில் மூன்று முக்கிய மாற்றங்களை மருத்துவக் கலந்தாய்வுக் குழு மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் சுற்றில் இடங்கள் பெற்றவர்கள், மூன்றாம் சுற்று வரை அதனை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரண்டாம் சுற்று வரை மட்டுமே அந்த வாய்ப்பு இருந்தது.அடுத்ததாக, காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் சேராதவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட முந்தைய விதிகளில் அது இரண்டு ஆண்டாக இருந்தது.மூன்றாவதாக, கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழங்களின் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழங்கள் வசமே ஒப்படைக்கப்ப்ட்டு வந்தன. தற்போது அது திருப்பி அளிக்கப்படமாட்டாது என மருத்துவக் கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
via News J : https://ift.tt/43gPOHq
via News J : https://ift.tt/43gPOHq
Mediaகாஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இளம் பெண்ணுக்கு கழிவறையிலேயே பிரசவம் ஏற்பட்டு, பச்சிளம் குழந்தை கழிவறை தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையை கழிவறை தொட்டிக்கு காவு கொடுத்த ஆத்திரத்தில் இளம் பெண்ணின் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தான் இவை.காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது கர்ப்பிணி மனைவியான முத்தமிழ் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். பிரசவ வார்டில் இருந்த முத்தமிழ் கழிவறைக்கு சென்றபோது, அங்கேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கழிவறை தொட்டியில் விழுந்ததால் செய்வதறியாது திகைத்த முத்தமிழ், கத்தி கூச்சலிட்டதால் செவிலியர்கள் தாமதமாக வந்து குழந்தையை மீட்டனர்.அங்கு குழந்தை மருத்துவ நிபுணர்கள் இல்லாததால், குழந்தையை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவெடுத்தனர். இதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்த நிலையில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஆம்புலன்ஸ் வந்துள்ளது.இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட பச்சிளம் குழந்தை வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் இறந்த பச்சிளம் குழந்தை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கே மீண்டும் கொண்டு வரப்பட்டது.பச்சிளம் குழந்தை இறந்ததால் ஆத்திரமடைந்த முத்தமிழின் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சென்ற போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களிடமும் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து குழந்தையின் சடலத்தை வீட்டிற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்தி உள்ளிட்ட எவ்வித அரசு உதவிகளும் தேவையில்லை என கோபத்துடன் கூறிய முத்தமிழின் உறவினர்கள், இறந்த பச்சிளம் குழந்தையை இருசக்கர வாகனத்திலேயே எடுத்து சென்றனர். முத்தமிழ்க்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அவருடன் இருக்க யாரையும் அனுமதிக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் தான் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
via News J : https://ift.tt/FdLvIVs
via News J : https://ift.tt/FdLvIVs
Mediaகாதலி கிடைக்காமல் சிங்கிளாக இருப்போரின் மனக்கவலையை போக்கும் விதமாக ஜப்பான் அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இதனால் ஜப்பான் சிங்கிள்ஸ் உற்சாகத்தில் மூழ்கியிருக்கிறார்கள்.. அது என்ன சிங்கிள்ஸ்களுக்கான ஸ்பெஷல் திட்டம்? பார்க்கலாம்.ஒரு சிலருக்கு காதல் கைகொடுத்தாலும், பலருக்கு காதல் எட்டாக்கனிதான்.. நம் நாட்டில் Arrange marriage என்ற ஒரு விஷயம் இருப்பதால் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது. ஆனால் சில வெளிநாடுகளில் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை சற்று அதிகம்தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானில் சிங்கிள்ஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வயதாகியும் தனியாக சுற்றுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிப்பதால், ஜப்பான் அரசாங்கமே இதை கவனத்தில் எடுத்துள்ளது.“வாடகைக்கு காதலர்கள் திட்டம்”பெரும்பாலான மக்கள் சிங்கிளாக இருப்பதால், மனச்சோர்வுக்குள்ளாகி தவறான முடிவுகளை எடுக்க நேரிடுவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிங்கிள்ஸ்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும், அவர்கள் தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்கவும் “வாடகைக்கு காதலர்கள்” திட்டத்தை ஜப்பான் அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் சிங்கிளாக இருக்கும் ஆணோ, பெண்ணோ தனக்கு வேண்டிய காதலர்களை வாடகைக்கு எடுக்கும் வகையில் ஜப்பான் அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.How to Find Love in Japan | All About Japanஆனால் இந்த திட்டத்திற்கான கட்டணம் தான் சற்று அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. காதலரை வாடகைக்கு எடுக்க விரும்புவோர் ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.3000 என்ற விகிதத்தில் குறைந்தது. இரண்டு மணிநேரத்திற்கு வாடகைக்கு எடுக்க வேண்டுமாம். இது தவிர கேர்ள் பிரண்டை தேர்வு செய்யத் தனியாக ரூ.1,200 கட்ட வேண்டுமாம். முதல் முறை இந்த சேவையைப் பயன்படுத்தும் போது இலவசமாக கேர்ள் பிரண்டை தேர்வு செய்யலாம். ஆனால், அதன் பிறகு தேர்வு செய்ய ரூ.1,200 கட்ட வேண்டும்.இதுக்கு என்ன ரூல்ஸ்..!இந்தத் திட்டத்தில் ரூல்ஸும் ரொம்பவே கடுமையாக தான் இருக்கிறது. வாடகை காதலராக இருக்கும் ஒருவர் நேரடியாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள கூடாதாம். செயலி மூலமே தொடர்பு கொள்ள வேண்டுமாம். மேலும் வாடகை காதலர்களாக உள்ளவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து விலை உயர்ந்த பரிசுகளையோ அல்லது டிப்ஸ் போன்றவற்றை வாங்கக் கூடாது என கட்டுப்பாடுகள் இருக்கிறதாம்.சிங்கிள்ஸ்களின் மனக்கவலையை போக்க ஜப்பான் அரசு கொண்டு வந்த இந்த திட்டம் சிங்கிள்ஸ் மத்தியில் ஆதரவு கிடைத்தாலும், பலர் வாடகை காதலர் திட்டத்திற்கு எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
via News J : https://ift.tt/LG1967H
via News J : https://ift.tt/LG1967H
Mediaஉலக கிரிக்கெட் ரசிகர்களே ஒரு திருவிழாவாக கொண்டாடும் ஒரு கிரிக்கெட் தொடர் எது என்றால் அது இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதிக்கொள்ளும் ஆஷஸ் தொடர்தான். இரண்டு நாடுகளின் தேசிய விளையாட்டும் கிரிக்கெட் என்பதால் போட்டிப் போட்டுக்கொண்டு களத்தில் இறங்கி சண்டை செய்வார்கள். அந்த அளவிற்கு ஆக்ரோசமான போட்டியாக இந்தத் தொடர் இருக்கும். இதற்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. இதற்கென்று ஒரு தனிக் கதையே இருக்கிறது. அது என்ன கதை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!முட்டிக்கொண்ட போர்…!Ivo Bligh: The First Ever Ashes Winning Captain – Almanack | Wisden1877 ஆம் ஆண்டில் தான் முதன் முறையாக கிரிக்கெட் தொடரானது துவங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் முதன்முறையாக 1882 ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக டெஸ்ட் போட்டி தொடங்கியது. அப்போது இந்த டெஸ்ட் போட்டிக்கு ஆஷஸ் என்கிற பெயர் கிடையாது. அந்த முதல் தொடரில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றது. பின் அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு பயணப்பட்டு சென்ற ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து மண்ணில் வைத்தே அந்த அணியை வென்று வரலாற்று சாதனைப் படைத்தது. ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி தாயகம் திரும்பியது. இந்தப் போட்டித் தொடர்தான் “ஆஷஸ்” என்கிற மிகப்பெரிய ஒரு டெஸ்ட் தொடர் உருவாக தூபம் போட்டிருக்கிறது.ஆஷஸ் பிறந்த கதை..!What is the history of the Ashes urn? | Daily Mail Onlineஇங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரெஜினால்ட் ஷெர்லி ப்ரூக்ஸ் தான் வேலை செய்த பத்திரிகையில் இங்கிலாந்தின் தோல்வி குறித்து மிகவும் நையாண்டித் தனமாக குறிப்பிட்டு எழுதியிருந்தார். ” 29 ஆகஸ்ட், 1882இல் ஓவல் மைதானத்தில் வைத்து இங்கிலிஷ் கிரிக்கெட் மறைந்துவிட்டது, அதன் உடல் தகனம் செய்யப்பட்டு அந்த சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது” என்று இரங்கல் செய்தியாக இங்கிலாந்தின் தோல்விக் குறித்து செய்தி ஒன்றினை வெளியிட்டார். இது இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் இடையே பெருத்த மன வருத்தத்தை அந்நாளில் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த தோல்விக்கு பழி தீர்க்கப்படும், இங்கிலாந்தின் சாம்பலை மீண்டும் தாயகத்திற்கே கொண்டு வருவேன் என்று அன்றைய இங்கிலாந்து கேப்டன் ஐவோ ப்ளிக் கூறினார். சொன்ன சபதத்தை நிறைவேற்றியும் காட்டினார். அதே ஆண்டில் மீண்டும் ஆஸ்திரேலியா பயணப்பட்ட இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. அதில் 2-1 என்ற கணக்கில் வென்று இங்கிலாந்து வெற்றி வாகை சூடியது.கோப்பையைப் பற்றி சொல்லப்படும் கதை…!இங்கிலாந்தின் சாம்பல் எடுத்து வரப்பட்டதால், அதன் நினைவாக டெரகோட்டாவால் செய்யப்பட்ட சிறிய பத்து செண்டிமீட்டர் அளவுள்ள கோப்பை ஐவோ ப்ளிக்-கிற்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இந்தக் கோப்பை உருவாக்கம் பற்றி இரு வேறு கருத்துகள் உள்ளன. அதாவது, முதலாவது ஆஷஸ் தொடரில் பயன்படுத்தப்பட்ட ஸ்டெம்ப்களின் பைல்ஸ்களை எரித்து உருவாக்கப்பட்டது என்றும், தொடரில் பயன்படுத்தப்பட்ட பந்தை எரித்து உருவாக்கப்பட்டது என்றும் இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றன.1927-ல் ஐவோ ப்ளிக் இறந்த பின்னர் அவரது மனைவி இந்த கோப்பையை முதன் முதலாக மெல்போர்ன் கிரிக்கெட் ஸ்டேடியத்திடல் ஒப்படைத்தார். ஆனால் தற்போது இந்தக் கோப்பை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ளது. இந்தக் கோப்பைக்காகத் தான் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இங்கிலாந்து அணியும் – ஆஸ்திரேலியா அணியும் மோதிக்கொள்கின்றன. வெற்றி பெறும் அணிக்கு இந்தக் கோப்பை தரப்படுகிறது. தற்போதைக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தான். அவர்களிடம்தான் ஆஷஷ் கோப்பையானது உள்ளது. தற்போதைய ஆஷஸ் போட்டிகள் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் லீடிங்கில் உள்ளது.
via News J : https://ift.tt/asfZ7Hy
via News J : https://ift.tt/asfZ7Hy
Mediaசட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற
காவலில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சரா நீடிப்பார் என கடந்த16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இந்த நிலையில், சிறையில் உள்ள செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன், கொளத்தூரை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், ஆகியோர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் அதிகாரத்தை இழந்து விட்டதாகவும், அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அவர்கள் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். இந்த நிலையில், ஒரு மாதத்துக்கு மேல் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? என வாதம் முன் வைக்கபட்டது. மேலும் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வாக நீடிக்கலாமே தவிர, எந்த துறையும் இல்லாத அமைச்சராக நீடிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் அமைச்சர்களாக நீடிக்கவில்லை என்றும், சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்ற வழக்கு இதுவே தான் முதல்முறை என்பதையும் சுட்டிக்காட்டி பேசிய ஜெயவர்த்தன் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, இதுபோன்ற வழக்கு வேறு எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.அரசியலமைப்பு சட்டப் பிரிவு163 ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுநர் கூறியிருக்கின்ற நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்,பி ஜெயவர்த்தன் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
via News J : https://ift.tt/EVfvoqY
காவலில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சரா நீடிப்பார் என கடந்த16ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இந்த நிலையில், சிறையில் உள்ள செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி, அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன், கொளத்தூரை சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன், ஆகியோர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயவர்த்தன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கும் அதிகாரத்தை இழந்து விட்டதாகவும், அரசு ஊழியர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தாலே அவர்கள் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர். இந்த நிலையில், ஒரு மாதத்துக்கு மேல் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? என வாதம் முன் வைக்கபட்டது. மேலும் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ.வாக நீடிக்கலாமே தவிர, எந்த துறையும் இல்லாத அமைச்சராக நீடிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மணிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோர் அமைச்சர்களாக நீடிக்கவில்லை என்றும், சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்ற வழக்கு இதுவே தான் முதல்முறை என்பதையும் சுட்டிக்காட்டி பேசிய ஜெயவர்த்தன் தரப்பு மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, இதுபோன்ற வழக்கு வேறு எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.அரசியலமைப்பு சட்டப் பிரிவு163 ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுநர் கூறியிருக்கின்ற நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாகவும் வாதிட்டுள்ளார். அதிமுக முன்னாள் எம்,பி ஜெயவர்த்தன் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசுத் தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
via News J : https://ift.tt/EVfvoqY
Mediaதிமுகவில் இருந்து விலகிய ஏராளமானோர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்…கொங்கணாபுரம் ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பி.வி.கருப்பு வைரம் தலைமையில் கழகத்தில் இணைந்தனர்…மக்களின் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அதிமுகவில் நாள்தோறும் ஏராளமானோர் புதிதாகவும், மாற்றுக்கட்சியில் இருந்தும் விலகி தங்களை அதிமுகவில் உறுப்பினர்களாக சேர்த்து வருகின்றனர். இந்தநிலையில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் பிவி. கருப்பு வைரம் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் வெங்கடேசன், ராஜாமணி, பிரகாஷ், கருப்பண்ணன், அரசு உள்ளிட்ட ஏராளமானோர் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி, கொங்கணாபுரம் ஒன்றியக் கழகச் செயலாளர் ராஜேந்திரன், பேரூர் கழகச் செயலாளர் பழனிசாமி, கோரணம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
via News J : https://ift.tt/6C8g7Du
via News J : https://ift.tt/6C8g7Du
Mediaசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஐ.சி.எஃப்-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் மற்றும் தெற்கு ரயில்வேயில் கடந்த 1998 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பல்வேறு பணிகளுக்கு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு, இதுவரை பணி வழங்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும் அப்ரண்டீஸ் பயிற்சி முடிப்பவர்களுக்கு பொது மேலாளரே நேரடி பணி நியமனம் செய்யலாம் என்ற உத்தரவு கடந்த 2016 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. பல்வேறு மாநிலங்களில் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்கள், பொது மேலாளர் ஆணையுடன் பணியில் சேர்ந்துள்ளபோது, தெற்கு ரயில்வேயில் மட்டும் இதுபோன்ற பணி நியமனங்கள் செய்யப்படுவதில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பணி வழங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
via News J : https://ift.tt/0cxpenb
via News J : https://ift.tt/0cxpenb
Media80 கோடியில் துவங்கி 210 கோடி ரூபாய்க்கு வந்துள்ள மதுரை நூலகம் சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா வலியுறுத்தியுள்ளார்.அடுத்த பகீர்.. மூத்த உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு பதவி தர வேண்டும்.. ராஜன் செல்லப்பா சூசகம்! | Emergency meeting led by AIADMK MLA Rajan Chellappa in ...மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மதுரையில் திறக்கப்பட்டுள்ள நூலகத்தில் திமுக தலைவர்களின் புத்தகங்கள் மட்டுமே வாங்கி வைத்திருப்பதாகவும், மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கியது போல் தெரியவில்லை என்று விமர்சித்தார்.
via News J : https://ift.tt/c80qle9
via News J : https://ift.tt/c80qle9
👍1
Mediaபுழல் சிறையில், எந்தக் கைதிக்கும் இல்லாத வகையில் ஒரே ஒரு கைதிக்கு மட்டும், வாரத்திற்கு 3 நாட்கள் சிக்கன், பால், பழம், ஃபேன், கட்டில் – மெத்தை என சொகுசு வசதிகள் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் எல்லாம் சிட்டாய் பறக்க… யாருங்கோ அந்த கைதி ? எனுக்கே அவரே பாக்கணும் போல இருக்கே என்ற ரமணா பட வசனம் தான் சமூகவலைதளம் முழுக்க ஒரே பேச்சு..அவர் யார் தெரியுமா? கைதி எண், 001440 – இத எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதா? ஆம் ஆம்… இது அதுல்ல என்று நீங்கள் நினைப்பது புரிகிறது…
காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு ஷிப்ட் ஆகியிருக்கும் இலாகா இல்லாத மந்திரி செந்தில் பாலாஜிக்குத்தான் இத்தனை வசதிகளும் … அதுவும் புழல் சிறைச்சாலையில் ….வளையலை விற்று, அன்றாட தேவைகளை குறைத்துக்கொண்டு எப்படியாவது அரசுப் பணி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் பணம் கொடுத்தவர்கள், இன்னமும் தங்களுக்கு பணமும், நீதியும் கிடைக்கும் என்று தவித்துக்கொண்டிருக்க, குற்றம் செய்தவரோ சொகுசாக சிறையில் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்.. ஆட்சி இப்படி இருந்தால், நீதி எப்படி கிடைக்கும்?இப்படி உச்சநீதிமன்றத்தாலேயும், உயர்நீதிமன்றத்தாலுமே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை இன்னமும் தனது அமைச்சரவையில் இலாகா இல்லாமல் வைத்துக்கொண்டு இருப்பதோடு, அவருக்கு பர்ஸ்ட் கிளாஸ் வசதிகளையும் சிறையில் ஏற்படுத்தித்தருகிறது ஒரு அரசு.. அதுவும் சிறையில் இருக்கும் மருத்துவமனையை ஆல்டர் செய்து வசதிகளைத் தருகிறது ஒரு அரசு என்றால், அந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்ததை நினைத்து தலையில் அடித்துக்கொள்வதா? அல்லது இன்னும் என்னவெல்லம் நாம் பார்க்கவேண்டி வருமோ என்று அங்கலாய்த்துக்கொள்வதா?ஒருவேளை, திமுக அமைச்சர்கள் கைதாவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான், சிக்கன், முட்டை என்று சிறைச்சாலைகளில் தரமான உணவு வழங்க ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறாரா விடியா முதல்வர் ஸ்டாலின் ? என்ற கலாய் மீம்ஸ்கள் எல்லாம்கூட உலா வருகின்றன..சோற்றுக்கு வழியின்றி, காய்கறி வாங்கமுடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்க, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்க, அதையெல்லாம் சரி செய்ய திராணியற்ற இந்த அரசு, செந்தில் பாலாஜியை இன்னமும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பது ஏன்? ஒருவேளை அவரிடம் உள்ள சிதம்பர ரகசியம் கசிந்துவிடக்கூடாது என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறதா ?செந்தில் பாலாஜிக்கு மட்டும், சொகுசு அறை ஒதுக்கப்பட்டு ஸ்பெஷலான கவனிப்பை சிறை நிர்வாகம் கொடுப்பது ஏன்? சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு சலுகைகள் எதற்கு? என்ற கேள்விகள்தான் தற்போது தமிழக மக்களின் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது.
via News J : https://ift.tt/MLmSGfv
காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு ஷிப்ட் ஆகியிருக்கும் இலாகா இல்லாத மந்திரி செந்தில் பாலாஜிக்குத்தான் இத்தனை வசதிகளும் … அதுவும் புழல் சிறைச்சாலையில் ….வளையலை விற்று, அன்றாட தேவைகளை குறைத்துக்கொண்டு எப்படியாவது அரசுப் பணி கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் பணம் கொடுத்தவர்கள், இன்னமும் தங்களுக்கு பணமும், நீதியும் கிடைக்கும் என்று தவித்துக்கொண்டிருக்க, குற்றம் செய்தவரோ சொகுசாக சிறையில் ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கிறார்.. ஆட்சி இப்படி இருந்தால், நீதி எப்படி கிடைக்கும்?இப்படி உச்சநீதிமன்றத்தாலேயும், உயர்நீதிமன்றத்தாலுமே பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட, குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை இன்னமும் தனது அமைச்சரவையில் இலாகா இல்லாமல் வைத்துக்கொண்டு இருப்பதோடு, அவருக்கு பர்ஸ்ட் கிளாஸ் வசதிகளையும் சிறையில் ஏற்படுத்தித்தருகிறது ஒரு அரசு.. அதுவும் சிறையில் இருக்கும் மருத்துவமனையை ஆல்டர் செய்து வசதிகளைத் தருகிறது ஒரு அரசு என்றால், அந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவந்ததை நினைத்து தலையில் அடித்துக்கொள்வதா? அல்லது இன்னும் என்னவெல்லம் நாம் பார்க்கவேண்டி வருமோ என்று அங்கலாய்த்துக்கொள்வதா?ஒருவேளை, திமுக அமைச்சர்கள் கைதாவார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டுதான், சிக்கன், முட்டை என்று சிறைச்சாலைகளில் தரமான உணவு வழங்க ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறாரா விடியா முதல்வர் ஸ்டாலின் ? என்ற கலாய் மீம்ஸ்கள் எல்லாம்கூட உலா வருகின்றன..சோற்றுக்கு வழியின்றி, காய்கறி வாங்கமுடியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்க, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்க, அதையெல்லாம் சரி செய்ய திராணியற்ற இந்த அரசு, செந்தில் பாலாஜியை இன்னமும் தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பது ஏன்? ஒருவேளை அவரிடம் உள்ள சிதம்பர ரகசியம் கசிந்துவிடக்கூடாது என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறதா ?செந்தில் பாலாஜிக்கு மட்டும், சொகுசு அறை ஒதுக்கப்பட்டு ஸ்பெஷலான கவனிப்பை சிறை நிர்வாகம் கொடுப்பது ஏன்? சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு சிறப்பு சலுகைகள் எதற்கு? என்ற கேள்விகள்தான் தற்போது தமிழக மக்களின் மனதை அரித்துக்கொண்டிருக்கிறது.
via News J : https://ift.tt/MLmSGfv
Mediaமணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவர சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற இழிசெயலை இனி யாரும் செய்யத் துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இதுபோன்ற இழிசெயலை இனி யாரும் செய்யத் துணியாத…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 21, 2023
via News J : https://ift.tt/9qRUvba
நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும்.
இதுபோன்ற இழிசெயலை இனி யாரும் செய்யத் துணியாத…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 21, 2023
via News J : https://ift.tt/9qRUvba
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/manipur.jpg">Media</a>இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த மோதலின் தொடக்கம் தொடங்கி, கடந்த சில நாட்களாக தலைப்பு செய்தியாகும் வகையில் சம்பவங்கள் நடந்து வருவது வரை டைம் லைனில் பார்ப்போம்.<strong>மணிப்பூரில் நடப்பது என்ன?</strong>இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் மொத்த மக்கள் தொகை 30 முதல் 35 லட்சம் தான். இங்கு, குக்கி, நாகா உள்ளிட்ட 34 அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினப் பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஓர் அணியிலும், மெய்தேயி எனப்படும் மக்கள் ஒரு அணியாகவும் திரண்டுள்ளனர். மாநில மக்கள் தொகையில், 64 சதவீதத்தை மெய்தேயி மக்கள் நிரப்பியுள்ளனர்.பட்டியல் சாதியினரான மெய்தேயி மக்கள், குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலம் வாங்க அனுமதிக்கப்படாததால், தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க அவர்கள் கோரி வருகின்றனர்.<a href="https://www.newsbugz.com/wp-content/uploads/2023/07/Manipur-Women-Parade-Issue.jpg">Manipur Women Parade Issue: PM Modi Breaks Silence - News Bugz</a>ஆனால், பெரும்பான்மையாக இருக்கும் மெய்தேயி சமூகத்தினரை பழங்குடியினராக அறிவித்தால், அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் தங்களுக்கு உரிய இடஒதுக்கீடு கிடைக்காமல் போய்விடும் என அனைத்து பழங்குடியினர் சங்கமும் வாதத்தை முன்வைக்கிறது. இதுதான் தற்போதைய பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது.<strong>2013:</strong>தங்களைப் பழங்குடிகளாக அறிவிக்கக்கோரி மெய்தேயி மக்கள் 2013 ஆம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகளைத் தாக்கல் செய்து வருகின்றனர்.<strong>ஏப்ரல் 19, 2023:</strong>மெய்தேயி மக்களின் கோரிக்கை மனுவை விசாரித்த மணிப்பூர் உயர்நீதிமன்றம் அவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது<strong>ஏப்ரல் 27, 2023:</strong>இந்த நிலையில், சுராசந்த்பூரில் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சியின் மேடைக்கு மர்மகும்பல் தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது<strong>ஏப்ரல் 28, 2023:</strong>வன்முறை தலைதூக்கியதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 5 நாள்களுக்கு இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.<strong>மே 3, 2023 :</strong>உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தலைநகர் இம்பாலில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூர் மாவட்டத்தின் டோர்பாங்கில் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் “ஆதிவாசி ஏக்தா மார்ச்” என்ற பெயரில் பேரணி நடத்தியது.<strong>மே 3, 2023:</strong>பழங்குடியினர் பேரணியின்போது விஷ்ணுபூர், சுராசந்த்பூர் மாவட்டங்களில் மெய்தேயி பிரிவினர் எதிர் போராட்டங்களை மேற்கொண்டதால் வன்முறை வெடித்தது. இது தலைநகர் இம்பாலிலும் எதிரொலித்தது. மெய்தேயி சமூகத்தினர், பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்து அவர்களது வீடு, தேவாலயங்கள், சமுதாய கூடங்களுக்கு தீ வைத்தனர்.<strong>மே 4, 2023:</strong>பிரபல பெண் குத்துச்சண்டை வீரர் மேரிகோம், “என் மாநிலம் பற்றி எரிகிறது. தயவுசெய்து உதவுங்கள்” என மத்திய அரசுக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை விடுத்தார்.கலவரத்தின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட கால அவகாசத்துடன் மொபைல் இன்டர்நெட் சேவைகளை ரத்து செய்தது மணிப்பூர் மாநில அரசு.<a href="https://gumlet.assettype.com/newslaundry/2023-05/f4f3ff10-db37-440e-b24a-9b01e2ec62b6/AI___Manipur_Voilence_2.jpg?w=1200&h=675">Behind Manipur flare-up, ST list clamour, migration anxieties</a><strong>மே 5, 2023:</strong>வன்முறை வெறியாட்டம் அதிகரித்த நிலையில், மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட மாநில அரசு உத்தரவிட்டது.<strong>மே 7, 2023:</strong>வன்முறையின்போது காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் வன்முறையாளர்களால் திருடப்பட்டன.<strong>மே 26, 2023:</strong>மணிப்பூர் தலைநகர் இம்பாலின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.<strong>ஜூன் 1, 2023:</strong>வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி மணிப்பூர் டிஜிபி டங்கல் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக டிஜிபியாக ராஜிவ் சிங் நியமிக்கப்பட்டார்.<strong>ஜூன் 16, 2023:</strong>தலைநகர் இம்பாலில் உள்ள மத்திய அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.<strong>ஜூன் 24, 2023:</strong>மணிப்பூர் அமைச்சர் சுசிந்த்ரோ சிங்கரேல் என்பவருக்குச் சொந்தமான குடோனை வன்முறையாளர்கள் தீக்கிரையாக்கினர் .<strong>ஜூலை 15, 2023:</strong>நாகா பழங்குடியைச்…
Mediaநிர்வாக திறனற்ற விடியா திமுக அரசால், விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.அதிமுகவின் நல்திட்டங்கள்..!சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் கோரணம்பட்டி கஸ்பா பகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கழக கொடியினை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றினார். அதில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும் ஒரே கட்சி அதிமுக என்றும், இந்தியாவிலேயே அதிக தார் சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற பெயரை பெற்றது அதிமுக ஆட்சியில்தான் என்றும், கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமையுடன் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டத்தை விடியா அரசு முடக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய கழக பொதுச் செயலாளர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் முதியோர் உதவித் தொகை திட்டம், தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை உள்ளிட்ட எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களை சாக்கு போக்கு சொல்லி விடியா அரசு நிறுத்தி வைத்துள்ளதாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா அரசு!மேலும், தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஸ்டாலின் காற்றில் பறக்கவிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். நிர்வாக திறனற்ற விடியா திமுக அரசால், விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருவதாக, கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்தார். மேலும் திமுகவில் பல ஆண்டுகளாக உழைப்பவர்கள் புறக்கணிக்கப்பட்டு, உதயநிதியை மட்டுமே ஸ்டாலின் முன்னிலைப்படுத்துவதாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.மேலும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஏழை மாணவர்களின் வாழ்வில் பால் வார்த்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம் என்றும், ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றவே அதிமுக ஆட்சியில் 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு, மாணவர்களின் கல்வி கட்டணத்தையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு சென்ற ஸ்டாலின், காவிரி விவகாரம் குறித்து பேசாமல், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார் என்றும், ஸ்டாலினை நம்பி விவசாயிகள் பயிர் செய்து வேதனையில் உள்ளதாக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.அதிமுக ஒரு போதும் எந்தக் கட்சிக்கும் அடிமை இல்லை..!அதிமுக ஒருபோதும் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என்றும், அடிமை இல்லாத காரணத்தினால்தான் கூட்டணியில் இருந்தபோதும், மக்களுக்காக நாடாளுமன்றத்தை 22 நாட்கள் இயக்க விடாமல் குரல் கொடுத்தோம் என்று தெரிவித்த கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தங்களை காப்பாற்றிக் கொள்ளவே விடியா திமுக அரசு அடிமையாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார். இறுதியாக பேசிய கழக பொதுச்செயலாளர், மக்களை ஏமாற்றும் ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்களே தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
via News J : https://ift.tt/R6xKbQj
via News J : https://ift.tt/R6xKbQj
Mediaநாட்டில் கடத்தல் வழக்குகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நம்மவர்களுக்கு கடத்தல் என்றதும் சினிமாக்களே ஞாபகத்திற்கு வரும். அப்படி பல கடத்தல் படங்கள் தமிழ் சினிமாவில் அதிகம் வந்துள்ளன. அதிலும் அனைவரின் நினைவிலும் வந்து நிற்கும் திரைப்படம் “அயன்”. அத்திரைப்படம் விமான நிலையத்தில் தங்கம், வைரம், போதைப் பொருட்கள் வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கும் கடத்தப்படுகின்றன என்பதை தெளிவாக காட்டியது. அத்திரைப்பட பாணியிலேயே தற்போது ஒரு கடத்தலும் நடந்துள்ளது. ஆனால் நமது சுங்கத்துறை அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டனர். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.Foreign Currency Worth Rs 10 Crore: Customs' "Biggest Ever" Seizure So Farடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தஜிகிஸ்தான் நாட்டிலிருந்து வந்த பயணிகளிடமிருந்து பத்து கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப் பணமானது சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள எந்த விமான நிலையத்திலும் இவ்வளவு பெரிய கரண்சி கைப்பற்றப்பட்டது இல்லை, இதுதான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் இஸ்தான் புல்லிற்கு விமானத்தில் ஏறச் சென்றபோது அதிகாரிகளால் தடுக்க நிறுத்தப்பட்டார். அப்பயணியின் பொருட்களை விரிவாக ஆய்வு செய்ததில் 10,06,78,410 ரூபாய்க்கு சமமான வெளிநாட்டு கரன்சி (7,20,000 அமெரிக்க டாலர் மற்றும் யூரோ 4,66,200) சுங்கத்துறை வட்டாரம் செய்தி தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் மூன்றுபேர் ஆவார்கள். அவர்களில் ஒரு சிறுவனும் அடக்கம். மேலும் அவர்களின் பயணப் பொதிகளில் வைக்கப்பட்டிருந்த காலணிகளுக்குள் வெளிநாட்டு நாணயம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
via News J : https://ift.tt/3XDUZLx
via News J : https://ift.tt/3XDUZLx