News J
588 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaஇரண்டு ஆண்டுகால திமுக ஆட்சியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் அவலங்களையும், முறைகேடுகளையும் கண்டித்து ஆளுநரிடம் மனு அளிப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் தலைமையில் பேரணி நடைபெற உள்ளது. இதனையொட்டி அதிமுக கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என்று அனைவரும் சின்னமலையில் உள்ள வேளச்சேரி சாலையில் குழுமியிருக்கிறார்கள்.

via News J : https://ift.tt/tci98Ga
Mediaஅதிமுகவின் பேரணியானது கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் தொடங்கியது. முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர்கள் கண்டன முழ்க்கத்தனை முழங்க தொண்டர்களும் முக்கிய நிர்வாகிகளும் வழிமொழிந்தனர்.தொடர்ந்து கள்ளச்சாராய மரணம், போலி மது அருந்தி மரணம், மது அருந்தும் இடத்தில் கொலை சம்பவம் இப்படி ஒருபுறம் இருக்க, பொய்வழக்கு போடுவது, நீட் தேர்வு விலக்கு ரகசியம், கற்பழிப்புகள், பாலியல் துன்புறுத்தல்கள், கொலை, கொள்ளை என்று  தலைநகரம் கொலைநகரமாகிவிட்டது. அதனைக் கண்டித்து ஆளுநருக்கு மனு அளிக்க உள்ள நிலையில் அதன் முன்னொட்டாக ஸ்டாலின் அரசுக்கு எதிராக கண்டன முழக்கத்தை முன்னாள் அமைச்சர்கள் கூற தொண்டர்கள் பின்னொட்டாக கோஷமிட்டனர்.

via News J : https://ift.tt/cONyRuQ
Mediaதிமுக அரசு இந்த இரண்டாண்டுகளில் செய்த மக்கள் விரோத செயல்கள், முறைகேடுகள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் பொன்றவற்றை புகார் மனுவாக அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளிக்கப்பட்டது. அப்பொது கழகப் பொதுச்செயலாருடன் முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், கேபி. முனுசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் போன்றவர்கள் இருந்தனர். இன்று காலை 10.30 மணியளவில் தொடங்கிய அதிமுக பேரணியானது புகார் மனு அளிப்பதோடு நிறைவு பெற்றது. தொண்டர்படை சூழ, கழக நிர்வாகிகள் திரள, பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை மாநகரமே அதிர்ந்தது.

via News J : https://ift.tt/gh5AQ6v