வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
அன்பர்களே, 2025 வரும் மே மாதம் 1 வியாழன், 3 சனி, 5 திங்கள், 8 வியாழன், 10 சனி, 12 திங்கள்,
15 வியாழன்

ஆகிய தேதிகளில்
Agasthiyar koodam அகத்தியர்மலை செல்ல
Pothigai Trekking
விருப்பமுள்ளவர்கள் ஆதார் புகைப்படம்
+91 7010685967
ற்கு அனுப்பவும்...
நாளை சித்திரை முதல்நாள் - உலக சித்த மருத்துவ தினம்

சித்திரை முதல் தேதி உலக சித்த மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக சித்தர்கள் நாள் என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 14 ல் சித்திரைப் புத்தாண்டு நாளே உலக சித்தர்கள் நாளாகும். சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவுகொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14.

எகிப்து, மெசபடோமியா, சீனா, கிரேக்க மருத்துவங்களுக்கு முற்பட்டது தமிழரின் சித்த மருத்துவம்.

இரத்தத்தின் தன்மை, வேகம், அழுத்தத்திற்கு ஏற்ப துடிக்கும் நாடித்துடிப்பைக் கொண்டு நோய் கணிக்கப்படுகிறது. இதை வளி (காற்று) என்ற வாதம், அழல் (நெருப்பு), பித்தம், ஐயம் (நீர்) என்ற கபத்தை சித்த வைத்தியர்கள் கணிக்கின்றனர்.

அதை 96 தத்துவங்களின்படி ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐம்பூதங்கள், மனம், சித்தம், ஆதாரம், நாடி நரம்புகள், தேகம், செயல்கள், மெய்ஞானத்தால் நோயாளிக்கு ஏற்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன.

பண்டை காலத்தில் சித்த மருத்துவர்கள் நோயாளியின் சிறுநீர், மலம், வியர்வை, ரத்தத்தை கொண்டு சிக்கலான நோய்களை கணித்தனர்.

மொத்தம் 4,448 நோய்கள் மனித சமுதாயத்தை பாதிக்கின்றன. இதில், 500 நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படாது.

பிற நோய்களை மணி என்ற உயர்தர உலோக மருந்துகள், மந்திரம் என்ற யோகமுறை வாழ்வு, அவிழ்தம் என்ற சாதாரண மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும் என்பது சித்த மருத்துவக் கொள்கை.

அகத்தியர், போகர், திருமூலர், யூகி முனிவரின் மெய்ஞானத்தால் விளைந்த ஓலைச்சுவடிகளே இன்றைய சித்த மருத்துவ பாடநூல்கள்.