வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Media is too big
VIEW IN TELEGRAM
*பாஷாண_லிங்கம்___இந்திரா_சௌந்தர்ராஜன்*
*குளிக்கும் முன் இந்த பதிவை நினைவில் கொள்ளவும்*
*உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.*
*அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!*
*சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?*
*குளியல் = குளிர்வித்தல்*
*குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.*
*மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.*
*இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.*
*காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.*
*வெந்நீரில் குளிக்க கூடாது.*
*எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.*
*குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.*
*நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.*
*எதற்கு இப்படி?*
*காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.*
*நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.*
*இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.*
*குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.*
*இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??*
*உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.*
*இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.*
*எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக* *வெளியேறிவிடுகிறது.*
*வியக்கவைக்கிறதா... !*
*நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.*
*குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.*
*பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.*
*புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.*
*குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.*
*குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்*
*குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.*
*குளித்தல் = குளிர்வித்தல்*
*குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.*
*இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.*

🌹🌹
வாதம் வைத்தியம்
Photo
👉https://youtube.com/shorts/E9Knmr3S33g?si=U0bYyihALgToo__f

*அருட்பெருஞ்ஜோதி*
🔥🔥🔥🔥🔥🔥🔥
திருவண்ணாமலை மலையடிவாரத்தில்
*உள் ஒளி தியானப் பயிற்சி*
*_1 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்_*
🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️🧘🧘‍♂️

இப்பயிற்சியில்,
🪷 *பிரம்ம முகுர்த்தத்தில் தியான பயிற்சி*

🪷 *வள்ளல் பெருமானார் அருளிய மூலிகை குறிப்புகள்*

🪷 *தியானம் கைகூட வழிமுறைகள்*

🪷 *யோகா மற்றும் சுவாசப்பயிற்சி*

🪷 *திருஅருட்பா பாடிப்பணிதல்*

🪷 *சாதுக்கள் சத்சங்கம்*
🙏🙏🙏🙏🙏🙏🙏
நாள்:
*2/மார்ச்/2025*/*ஞாயிறு*
🔸01 சனி மாலை 6 மணிக்குள் வந்துவிட வேண்டும்🔸

நேரம்:
அதிகாலை *4.30 மணி* முதல் மதியம் *2 மணி* வரை
🪔🪔🪔🪔🪔🪔🪔
இடம் - *வள்ளலார் சன்மார்க்க சங்கம்*,
வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை,
திருவண்ணாமலை
🌟🌟🌟🌟🌟

*பயிற்சியின் விதிமுறைகள்*
🌸 ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

🌸 பயிற்சிக்கு *கட்டணம் ரூ.500/-* செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

🌸 யோகா மற்றும் தியானம் செய்வதற்கு *விரிப்பு*(பெட்ஷீட்/யோகமேட்) எடுத்து வரவும்

🗒️🗒️🗒️🗒️🗒️
*முன்பதிவு அவசியம்*
பதிவு செய்வதற்கான லிங்க்/Registration Form Link
👇🏻👇🏻
https://forms.gle/VarnUoZ8oXfCxQCX6

தொடர்புக்கு:-
📱+91 99526 04433
📱+91 97914 50868

vallalartrust@gmail.com
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்
வாதம் வைத்தியம்
Photo
சக்கரங்களும் ஐந்து விரல்களும்

மனித உடலினுள் கண்ணுக்குத் தெரியாமல் செயல்படுகின்ற‌ சக்கரங்கள், உடலிலுள்ள அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டினையும்
தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

இந்த சக்கரங்கள் உடலின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்திருந்தாலும் அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

இவற்றில் ஏதும் தடைகள், தேக்கங்கள் உன்டானால் பொது உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்படும்.

இந்த பாதிப்புகளை இலகுவாக நிவர்தி செய்யவே முத்திரைகள் பயன்படுகின்றன. இந்த முக்கிய சக்கரங்கள் நமது விரல்களால் கட்டுபடுத்தப்படுகிறது என்று தன்வந்திரி கூறுகின்றார்.

1. மோதிரவிரல் - மூலாதாரம்
2. சுண்டுவிரல் - சுவாதிஷ்டானம்
3. கட்டைவிரல் - மணிபூரகம்
4. சுட்டுவிரல் - அநாகதம்
5. நடுவிரல் - விசுக்தி

மூலாதாரம்

முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்திஆகிறது.

உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது

சுவாதிஷ்டானம்

இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே
அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது.

பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு.
ஆணவத்திற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப்போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு.

ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது.

அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து
விடுகின்றன.

கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான்
செயல்படுகிறது. இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்

இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது.

அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.

தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள், இரத்த ஓட்டம், கல்லீரல், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை.

நம்முடைய புலன்களுக்கு அப்பால்அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான்
அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்குமத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது.

தொலை உணர்தல் தொலைஅறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன.

அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது.

இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக்கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.

பிட்யூட்டரி சுரப்பி இதன்
கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள்,
மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

சகஸ்ரஹாரம்

இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது.

இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும்,நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவுபடுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்யவேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது.

பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.
உடல் முழுவதும் சுத்தப்படுத்துவதற்கும் உடலில் உள்ள குறிப்பாக வயிறு பகுதிகளில் தேவையில்லாத கொழுப்புகளை வெளியேற்றுவதற்கு என்ன செய்வது???

ஒன்றைச் சொல்கின்றேன்!!!
அதிகாலையிலே எழுந்து முருங்கை இலைகளை கூட கசக்கி , அதாவது பின் நல்விதமாகவே அப்படியே நிச்சயம் கரைத்து , பின் அருந்த நன்று!!!
என்பேன் !!
(முருங்கை இலைகளை சுத்தப்படுத்தி அரைத்து அதை வடிகட்டாமல் அப்படியே குடிக்க வேண்டும்).

~அகத்திய சித்தர் ஜீவநாடி மூலம்
கூறும் ஆரோக்கிய ரகசியம்.!
வாதம் வைத்தியம்
Audio
*நமது சிந்தனைக்கு பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் அமுதமொழி – மார்ச் 11, 2025*

நாம் உணவருந்தும்போது உணர்ச்சி வயப்படும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அந்த உணர்ச்சிகரமான வார்த்தைகளுடன் தொடர்புடைய கருத்துக்களே நம்மில் உருவாகும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், நாம் குளிக்கும் போதோ, தியானம் செய்யும் போதோ, உணவருந்தும் போதோ, மற்ற செயல்களைப் பற்றியோ கருத்துக்களைப் பற்றியோ சிந்திக்கக்கூடாது என்பதாகும். நாம் உணவருந்தும் போது அளவுக்குமீறிப் பேசுவதும் நமக்குத் தீங்கு விளைவிக்கும். நாம் உணவு உண்ணும்போது எவ்விதமான பேச்சுக்கும் இடம் கொடுக்கக்கூடாது. அகமகிழ்வுடன் புனிதமான 'ப்ரம்மார்ப்பணம்' மந்திரத்தை மனதாரச் சொல்லி, அதன் பின்னரே நாம் உணவை உட்கொள்ள வேண்டும். இவ்வாறாக, பரப்ரம்மத்திற்கு எவை அர்ப்பணிக்கப்பட்டாலும் அவை அனைத்தும் பரப்ரம்மத்தின் வரப்பிரசாதமாக நமக்கு வரும். ‘அஹம் வைச்வானரோ’ என்ற ஸ்லோகத்தின் பொருள் என்னவென்றால், உன்னுள் மனித வடிவில் இருக்கும் இறைவனே உணவை ஏற்றுக் கொள்கின்றான் என்பதாகும். எனவே, இது நம் உணவை இறைவனுக்கான உணவாக மாற்றுகின்றது. உணவு உண்ணும்போது, நாம் உணர்ச்சி வசப்படாமல், ஆத்திரப்படாமல், மிகவும் அமைதியாக சாப்பிட வேண்டும். நம்மால் ஜபம், தபம் அல்லது யக்ஞயாகாதிகள் போன்றவற்றைச் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தது இந்த முறையிலாவது சாப்பிடுவதை உறுதி செய்தால், நமக்கு நல்ல சிந்தனைகள் வளரும்.

*அத்தியாயம் 18, கோடையருள் மழை 1977*