வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சித்தர்களின் அரிய பொக்கிஷங்களில்
ஒன்றுதான்..
தூய ரசத்தை கொண்டு உயர் சித்தர் (Alchemy) முறையில் கட்டிய "ரசமணிகள்"

ஆனால் அதை
சித்தர் கலைகளில்
உயர் நிலை செயல்முறையில்
செய்யப்பெற்று..

உங்கள் வசம் வருவதற்கும்
& உங்களது உடம்பில் எப்போதும் இருக்கவும்..
"குரு" பகவான் அருளும் புண்ணிய இருப்பும்
பூரணமாய் வேண்டும்.!!

இவ்வரிய பொக்கிஷத்தின்
தன்மையறியாது போவதும்,
அலட்சியம் செய்வதும் அவரவர் முன்வினையே தவிர வேறேது!!
https://youtu.be/0uulK-_l9Tk?si=V-gowYQPgHDLD6V1

உடலின்
உஷ்ணம் தணிந்து
பலவித நோய்கள் வராமல் தடுக்கும்
பாரம்பரிய
தமிழ் சித்தர்
வாழ்வியலின்
அரிய குளியல்
கை பாகம்.
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
உணவின் நிறமும்!
அதன் நலமும்..!!
*பிரேம சாயி* யின்
அற்புதங்களை விவரிக்கும்..
📒 நூலாகிய

*பிரேமாவதாரம்*
எனும் 2025ல்
வரவுள்ள தமிழ் புத்தகத்தின்..

முதல் பகுதி/
முன்னுரை பகுதி
இங்கே
🎤குரலொலியில்..🎧
*PREMAVATHARAM VOICE BOOK-TAMIL*
🎤
INTRODUCTION🙏

Website 🌎:
www.premasaiashram.org
நீண்டநாள் படுக்கை புண்களை ஆற்றும் தன்மை கொண்ட குப்பைமேனி இலை !!

எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். பாரம்பரியமாக, குப்பைமேனி இலைச் சாறு குடல் புழுக்களிலிருந்து விடுபட பயன்படுத்தப்படுகிறது.

மார்புச்சளி, கீல்வாதத்தை போக்கும். நெஞ்சுக்கோழையை நீக்கும். இருமலை கட்டுப்படுத்தும். குப்பைமேனி இலையை அரைத்து அதில் மஞ்சள் பொடி சேர்த்து காயமடைந்த இடங்களில் தடவினால் காயம் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தமூலம், வாதநோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டுவலி மற்றும் தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்தும்.

வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை நீக்கும் தன்மை உடையது. தோல் நோய் நீக்கும். உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி நீங்கும்.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மறைந்து முகம் பளபளப்பாகும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.

நோய்வாய்ப்பட்டு நீண்ட நாட்களாகப் படுக்கையில் இருந்தவர்களுக்கு படுக்கை புண் வரும். அப்படி படுக்கை புண் வந்தவர்களுக்கு, குப்பைமேனி இலையை உலர்த்தி பொடி செய்து புண் இருக்கும் இடத்தில் கட்டுப்போட, புண்கள் ஆறும். குப்பைமேனி இலையைப் நீரில் கொதிக்கவைத்து, கஷாயமாகச் செய்து, அதனுடன் உப்பு சேர்த்துக் குடித்துவந்தால், மலம் இளகும்.

இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டிவரப் படுக்கைப் புண்கள் தீரும். இலைச் சூரணத்தைப் பொடிபோல் நசியமிட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள், உப்பு அறைத்துப் பூசி சற்றுநேரம் கழித்து குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
*மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிணிகளை விரட்டும் கடுக்காய்...!*

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் பிணிகளை விரட்டும் கடுக்காய்...!
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
கடுக்காய் ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது. மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும், நினைவாற்றலைப் பெருக்கும்.

மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.

இரவில் படுக்கும்போது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இலகிப் போகும். மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.

கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.

15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.

200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.

10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடிக்க உடல்பலம் ஏற்படும். வயிற்றுக் கோளாறு மாறும்.

நாவறட்சி, தலை நோய், ஈரல் நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண்நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.