வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*உணவுக்காடு வளர்ப்பு*
&
*மாபெரும் முக்கனி திருவிழா*

*ஈஷா காவேரி கூக்குரல்*

*இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR)*
பெங்களூரு

*தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)*
திருச்சி

*தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்* (NIFTEM )
தஞ்சாவூர்

இணைந்து நடத்தும்..
மாபெரும் திருவிழா

இடம்: புதுக்கோட்டை
நாள்: 23 ஜூன் 2024 ஞாயிறு

முன்பதிவு அவசியம்,

📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
👇
https://bit.ly/FoodForestandMukkaniFestOrg

அல்லது அழைக்கவும்
☎️ 94425 90081
☎️ 94425 90079

பயிற்சி கட்டணம் ₹200
வாதம் வைத்தியம்
Photo
பணம் இருந்தால்...

நகை வாங்கலாம்,
இடம் வாங்கலாம்,
ஆடம்பர பொருள் வாங்கலாம்.

ஆனால்,

ஆரோக்கியமாக,
ஆனந்தமாக வாழ
*இயற்கை வளத்தை* வாங்க முடியாது.

நல்ல மனமிருந்தால்...

நம் சந்ததியர்க்கு,
இந்த உலகத்திற்கு நாம் விட்டு செல்லும் சரியான சொத்து...

இயற்கையான நீர், பிராணன் நிறைந்த காற்று,
இயற்கையான உணவு,
இயல்பான வெப்பம்,
தூய்மையான மனம்.

இவற்றை உருவாக்குவது
இயற்கை வளங்கள் மட்டுமே!

ஆகவே,
குறைந்த பட்சம்...

*ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்*👍

ஆரோக்கியமாக,
ஆனந்தமாக வாழ அடிப்படை தேவையான...

*இயற்கை வளத்தை காப்போம்* 🙏

(கோடை முடிந்ததும் மறந்து விட்டால்...

அடுத்தடுத்த வருடங்கள், இதை விட பெரிதாக அவஸ்தை படுவோம் 🙄)
*💫🔳வீட்டில் கற்றாழை வளர்க்கலாமா?*

கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. நோய் தாக்கும் அபாயம் இல்லை. செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தோல் பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கற்றாழை காற்றை சுத்திகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இதனை வீட்டில் வளர்த்தால் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான சூழலை உருவாக்குகிறது. மேலும் காற்றின் தரம் மேம்படுவதால், சுவாச நோய்களின் ஆபத்து குறைகிறது.கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாகவும், சிகிச்சையாகவும் பயன்படுகிறது. கற்றாழை இலைகளை வெட்டி, தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம். இதை ஜூஸ் செய்து குடிக்கலாம். இந்த ஜெல்லை சருமத்தில் தடவலாம்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல் முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு வகையான சரும பிரச்சனைகளை நீக்குகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையும். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்றாழை செடி மன அழுத்தத்தை போக்குகிறது. மன அழுத்தத்திலிருந்து விரைவாக மீள உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன. ஆன்மிக ரீதியாகவும் மனதை தூய்மைப்படுத்தும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் அவை பாசிட்டிவ் ஆற்றலுடன் அமைதியை ஊக்குவிக்கின்றன. அதனால் எதிர்மறையான விஷயங்களில் மனம் செல்லாது.
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
ஆத்ம வணக்கம்

*சன்மார்க்க சாகாக்கல்வி சாலை*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!

"சத்விசாரம் என்னும் பிரம்ம வித்தை பயிற்சி"
நிகழ்வு தகவல்

இது ஒரு இணையதள வகுப்புடன் (Whatsapp & youtube) மேலும் நேரடி பயிற்சியுடன் இணைந்த ஒரு அரிய நிகழ்வு.

(+ 12 நாட்கள் இலவச மௌன சத்விசார
நேரடி பயிற்சி)

பயிற்சி விவரம்:
3 மாதம் வரை பங்கேற்கும் ஆர்வம் வேண்டும்
( இது ஒரு அனைவருக்குமான இலவசப் பயிற்சி ஆகும்)

📝முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும் ✔️👍🏻

முன்பதிவிற்கான
கடைசி நாள் : 20-06-2024

பயிற்சியில்
உள்ளடங்கும் விசயங்கள்..

1) சுத்த சன்மார்கத்தைப்
பற்றிய சத்சங்கம்.

2) சன்மார்க்கத்தைப் பின்பற்றும்போது நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை (சிவம்) இறை அருளால் சமநிலையோடு நோக்குகின்ற மனோபலத்தைப் பெற்று இன்புற்று வாழ வழி வகுக்கும்.

3)
ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதனால் இறைவனுடைய அருளைப் பெற்று நான் ஏழை என்கின்ற நோய், உடல் நோய், மற்றும் மன நோய் இதில் இருந்து எவ்வாறு விடுதலைப் பெறலாம் என்ற தெளிவு கிடைக்கும்.

4)
தன்னை அறிந்தவன் தன் தலைவனாகிய தனிப்பெரும் தலைவர் அருட்
பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அறியலாம்.

5)
பொறுமை, சகிப்பு, அமைதி இவையே பேரானந்த சிவபோக ஜீவ முக்திக்கான வழி.

6)
தன்னில் விஷமாய் சேர்ந்திருக்கின்ற கப நீரை (வாத, பித்த, கபம்) வெளியேற்றும் முறையாகிய "பிரம்மரி பிராணயாமம்"
(18 சப்த வாசி கதிகள்) பயிற்சி.

7)
வாசியை தன்னைத் தானே உணர வைக்கக்கூடிய "புஜகி கரண பிராணயாம" பயிற்சி.

8)
குண்டலினியை உணரக்கூடிய "ஊர்த்துவ கதி" பயிற்சி.

9)
தியானம் = நிஷ்டையில் நெடுநேரம் அமரக்கூடிய "நெடுந்
தவப்பயிற்சி".

10)
சாதி சமய மத வேறுபாடுகளைக் களைத்து சன்மார்க்க ஒழுக்கநெறியில் நடந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற வாழ்வியலை கற்று ஒன்றென்று இரு, நன்றென்று இரு, மரணம் இல்லா பெறுவாழ்வு பெற்று இன்புற்று வாழ்க.


நிகழ்ச்சி வழங்குபவர்&
வழி நடத்துபவர்
& ஸ்தாபகர் :

யோகி-ருத்ரானந்த சம்புவராயர் ஐயா.

ஆசிரம முகவரி :
பிரம்ம வித்தை சித்த ஆசிரமம் & அறக்கட்டளை.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், ஜவ்வாது மலை, கோவிலூர் கிராமம்.

Whatsapp No:
+91 9940480449
Cell No:
+91 6381897979

Youtube Channel: https://youtube.com/@yogi-rudranandartv1992

அருட்
பெருஞ்ஜோதி அருட்
பெருஞ்ஜோதி! தனிப்
பெருங்கருணை அருட்
பெருஞ்ஜோதி !!🙏
திருமூலர் வழி சீடர்.. ஸ்ரீ போக நாதரின் "ஞான வாசகம்"

"ஒரு பானையின் பயன்பாடு அதனின் வெறுமை எனும் தன்மையில் உள்ளது"

"The Usefulness of the Pot lies in its Emptiness"
~Lao Tzu.
🙏🙏
~சேகரமும், பகிர்வும் :
பிரம்மஸ்ரீ. கரூவூரான்.
www.t.me/truthsofsivayoga/
*தைராய்டு பாட்டி வைத்தியம்..!*

ஆம்பிளைங்கள விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம், அவங்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கிறது தான்.

நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்புல தேவையில்லாத இடங்கள்ல நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாகுது.

இதுனால மாதவிடாய் தாமதமாகுறதுக்கும் கூட இது ஒரு முக்கிய காரணம்.

இதையெல்லாம் நம்ம பாட்டி வைத்தியத்துல சரிபண்ணிடலாம்..

பயப்படத் தேவையே இல்ல...

துளசி,
கண்டங்கத்திரி,
தூதுவளை,
ஆடாதோடை
இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட,
அதிமதுரம்,
கருஞ்சீரகம்,
ஜடமாஞ்சி,
வில்வவேர் தலா 5 கிராம்,
சின்ன வெங்காயம்-4,
இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கஷாயம் செஞ்சு சாப்பிட்டா..

எல்லாம் சரியாப்போகும்..

*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்வோம்.*
*மூங்கில் அரிசி.. மூக்கை துளைக்கும் வாசனை! கருவுறுதலை மேம்படுத்துமே! சத்தான மூங்கில் அரிசியின் பயன்*


_மூங்கில் அரிசியை போன்ற சிறந்த சத்துக்கள் நிறைந்த அரிசியை காண முடியாது.. பழங்குடி மக்களின் மிக மிக முக்கிய உணவாக கருதப்படும் இந்த மூங்கில் அரிசி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?_

_மூங்கில் மரத்திலிருந்து பெறப்படுகிறது மூங்கில் அரிசி.. பச்சை கலரில் இருந்தாலும் கமகமவென வாசனை நிறைந்ததாக இருக்கும்.. வாசனையாக இருக்கும். அதேநேரத்தில் இனிப்பாகவும் இனிக்கும். அதாவது கோதுமையின் ருசி போலவே இருக்கும். இந்த பச்சை கலர் விதையைதான், உலர்த்தி அரிசியாக பயன்படுத்துகிறார்கள்... எப்போதுமே இந்த அரிசிக்கு மவுசு சற்று அதிகமாகவே உள்ளது._

_கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது மூங்கில் அரிசி.. ஆனால் சிறிதும் கொழுப்பு இருக்காது.. ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியை தாராளமாக பயன்படுத்தலாம். உடலின் சர்க்கரை அளவை இந்த உணவு கட்டுக்குள் வைக்கிறது.._

மூங்கில் அரிசி: உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களும், சுவாச பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும் இந்த அரிசியை பயன்படுத்தலாம்.. மூங்கில் அரிசியில் வைட்டமின் B6 நிரம்பியிருப்பதால், எலும்புகள், பற்களுக்கு உறுதி தருகிறது.. இந்த அரிசியை சாப்பிட்டு வருபவர்களுக்கு பற்களில் சிதைவு, பற்களில் துவாரம் போன்ற பிரச்சனைகள் வராது.

கருவுறுதலை மேம்படுத்துவதற்கும், பெண்களின் கருப்பைக்கு வலு தருவதற்கும் இந்த மூங்கில் அரிசி பெரிதும் உதவுகிறது.. மாதவிலக்கு கோளாறுகளையும், கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை களையக்கூடியது இந்த அரிசி.. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. ஆண்களுக்கு தாது விருத்தியடைய செய்யவும் இந்த அரிசி பயன்படுகிறது.

அதிக சத்துக்கள்: குரங்கு, யானை, காட்டு விலங்குகளுக்கு, மூங்கில் அரிசி என்றால் அதிக விருப்பமாம்.. அதேபோல, மன்னர் காலத்தில், படைவீரர்கள் அதிக சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த அரிசியைதான் பயன்படுத்துவார்களாம்.

சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியில் காய்கறி சூப் போல செய்து சாப்பிட்டால், உடலுக்கு நன்மைகள் கூடும். மூங்கில் அரிசியை சுத்தம் செய்து, அரை மணி நேரம் ஊற வைத்து, வழக்கமாக சோறு வடிப்பது போலவே, இதையும் வடித்து எடுத்து கொள்ள வேண்டும். வடித்த கஞ்சியை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கஞ்சி: ஒரு வாணலில், வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், உப்பு தூள், மிளகுதூள் சேர்த்து வதக்கிவிட வேண்டும். பிறகு வடித்த கஞ்சியுடன், சிறிது தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

காய்கறி பாதி வெந்ததுமே, வடித்து வைத்த மூங்கில் அரிசியை இதில் கொட்டி, சிறிது நேரம் கொதித்ததும், கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.. இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் கஞ்சியாகும். எனவே மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த அரிசியை எடுத்து கொள்வது நல்லது.✍🏼🌹
சிறுதானிய_பாரம்பரிய_டிபன்_வகைகள்_Copy_240222_101150_11.pdf
966.7 KB
சிறுதானிய_
பாரம்பரிய_
டிபன்_100 வகைகள்
மின்னூலாக