வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
🇨🇭#புற்று_நோயை…

🇨🇭#குணப்படுத்தும்

💚#நித்தியகல்யாணி💚

🌺 நித்தியகல்யாணி

தமிழகமெங்கும் தானே வளர்கிறது. அழகுத் தாவரமாக தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. இதனை………

👉சுடுகாட்டுப் பூ,

👉கல்லறைப் பூ,

👉பெரிவீன்க்கில் மதுக்கரை,

முதலிய பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.

💊 #மருத்துவப்_பயன்கள் 💊

🌺நித்தியக் கல்யாணி நாடி நடையைச் சமப்படுத்தவும், சிறுநீர்ச்சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதன்ப பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது. இது இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தாம். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். அரிய உள்ளடக்கங்கள் மேலும் இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமானதுதான். ரவ்பேசின் (RAUBASIN) செர்பென்டைன் (SERPENTINE) ரிசெர்பைன் (RESERPINE) இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இப்பயிர் மருத்துவத் துறையின் வணிகத்தில் முக்கியத்துவம் அடைகிறது.

🇨🇭#புற்றுநோய்க்கு_மருந்து💊

🌺இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும்.

🌺லுக்கேமியா மற்றும் லும்போமா புற்றுநோய்களை குணப்படுத்தும் மருந்துகளில் நித்தியகல்யாணியில் உள்ள ஆல்கலாய்டுகள் பயன்படுகின்றன. இதில் உள்ள அஜ்மாலின் கூட முக்கியமான வேதிப்பொருளாகும். ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine) இது தவிர மருந்து செடியான சர்ப்பகந்தியின் உற்பத்தி குறைவாக உள்ளதாலும் அதில் இருந்து கிடைக்கக்கூடிய முக்கிய மருந்து வேதிப் பொருள் நித்திய கல்யாணியிலிருந்து கிடைப்பதாலும் இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை விரட்டுவது மட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் தீர்க்கும் மருந்தாகும்.

பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது.

💊#மார்பகப்_புற்றுநோய்💊

பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது. இவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு கண்டறியும் முறைகள் உள்ளன. இந்த வகை புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நமது நித்தியகல்யாணியைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். முதலில் இதற்கு நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும்.

👉செய்முறை

நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும்.

இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.

🇨🇭 #புற்றுநோயால்🇨🇭 அவதிப்படுபவர்கள்…… நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும்.
👉செய்முறை

💊 நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைத்த பொடியிலிருந்து ஆறு கிராம் கிராம் வரை எடுத்து 400 மில்லி தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைத்து, தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.

💊நித்தியகல்யாணி பூவை தனியாக எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து, குடிப்பதன் மூலம் ஆரம்பகால புற்று நோய்க்கு மருந்தாக கொடுக்கலாம். இதனுடன் இன்னும் சில மூலிகைகள் சேர்த்து கொடுத்தால் நன்றாக வேலை செய்யும்.

💊அதிமதுரம், நெல்லிக்காய் பொடி, முருங்கவிதை பொடி , சுண்டைக்காய் பொடி, துளசி பொடி, வட இந்தியாவில் கடுக்கி என்றும் நம்மூரில் கடுகுரோகினி என்றும் அழைப்பர், இதை அனைத்தும் சில விகிதத்தில் சேர்த்து உண்பதால் ஆரம்பகால புற்று நோய்க்கு நல்ல மருந்தாக அமையும்.

💊முழுச் செடியையும் வேர், இலை, தண்டு என எடுத்து சிறிது சிறிதாக வெட்டி நிழலில் காய வைத்து பொடி செய்து பருகுவதன் மூலம், ஆரம்ப கால புற்றுநோய் மற்றும் நான்காம் கட்டத்தை அடைந்த புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

💊நித்திய கல்யாணி செடியின் வேரை நன்றாக சூரணமாக்கி , காலை மாலை இருவேலையும் வெந்நீரில் இட்டு, டீ போன்று பருகி வருவதன் மூலம் , சிறு நீரில் வரும் சர்க்கரை அளவு கட்டுபடும். சிறுநீர் சமந்தமான நோய்கள் சரியாகும். பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் , அதிக உதிரப்போக்கு , நாட்கள் தள்ளிபோவதும் சரியாகும்.

💊நித்திய கல்யாணி பூவை தண்ணீரில் இட்டு பாதியாக காய்ச்சி, வடிகட்டி ஒரு நாளைக்கு 4 வேளைகள் குடிப்பதன் மூலம் , அதிமூத்திரம், பசியின்மை, அதிக பசி, உடல்பலவீனம்,
அதிக தாகம் இவை அனைத்தும் குணமாகும்.

💊மனநோய்களை குணமாக்கும்💊

மனநோய்கள் அல்சீமர் என்று அழைக்கப்படுகின்ற நினைவு இழப்பு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகின்றது. இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

💊நீரிழிவுநோய் கட்டுப்படும்💊

நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.

🇨🇭நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நித்தியகல்யாணியை பயன்படுத்தலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.

💊நித்திய கல்யாணியின் ஆறு இலைகள் மற்றும் 15 பூக்களை 800 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டியவுடன், அதாவது 400 மில்லியானவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குடிநீரை பருகவேண்டும்.

💊 #நீரிழிவு……

நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர்ச் சர்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.

💊 ஐந்தாறு பூவை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிதாகம், அதிமூத்திரம், உடல் பலவீனம், அதிகபசி, பசியின்மை தீரும்.

💊வேர்ச்சூரணம் 1 சிட்டிகை வெந்நீரில் 2, 3 முறைகொடுக்கச் சிறுநீர்ச் சர்கரை குறையும். நோய் கட்டுப்படும்.

💊#கருப்பை_புற்றுநோய்

கருப்பை புற்றுநோய் தற்காலத்தில் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் பற்றும் நோயாக இருக்கின்றது. இவ்வகை புற்று உண்டாவதற்கு பலவகை காரணிகள் உள்ளன. பெரும்பாலும் இவ்வகை புற்று நோய்கள் வந்தால் கருப்பையை அகற்றி விடுவதையே நிரந்தர தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை பாரம்பரிய வைத்தியமான நித்திய கல்யாணியின் துணை கொண்டு முழுபலன் பெற முடியும்.

பதினைந்து கிராம் அளவுள்ள நித்திய கல்யாணிப் பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.
💊#நிலையில்லா_மாதவிடாய்

மாதவிடாய் என்று உலகின் எல்லா பெண்களுக்கு நிகழும் ஒரு மாதாந்திர சுழற்சியாகும். இது பொதுவாக மாதமொருமுறை நிகழும். இவ்வாறு காலம் தவறாமல் நிகழ்வது நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்பதை உறுதிபடுத்துகின்றது. இவ்வாறு மாதந்தவறாமல் நிகழும் மாதவிடாய் நாட்கள் தவறி நடக்க ஆரம்பிப்பது ஆபத்தின் அறிகுறியாகும். பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி 20 நாட்களோ அல்லது முப்பத்தைந்து முதல் நாற்பத்தைந்து நாட்களோ ஆனால் இது "நிலையற்ற மாதவிடாய்" என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நிகழும் முறையற்ற மாத விடாய் கோளாறுகளை முழுவதுமாக நீக்க நித்திய கல்யாணி என்னும் பேரமுதத்தை பயன்படுத்தலாம்.

நித்திய கல்யாணியின் வேரை இருபது கிராம் அளவிற்கு எடுத்து சுத்தப்படுத்தி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த குடிநீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதை காலை மாலை இருவேளை 40 மில்லி முதல் 100 மில்லி வரை நோயின் தன்மைக்கேற்ப வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களது மாதவிடாய் சுழற்சி நேர்த்தியாகிவிடும்.

💊#இரத்த_சோகை

இதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட வியாதிதான். மற்றவர்களுக்கும் (ஆண்களுக்கும்) வருமென்றாலும் பிரசவித்த தாய்மார்களுக்கே அதிகம் வரும் ஒரு சத்துக்குறைவு நோயாகும். இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் அளவில் குறைந்து உடலின் பிற பகுதிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கொண்டு செல்ல இயலாமல் போய்விடும். இதனால் உடல் சோர்வு மயக்கம், முதலியவை ஏற்படும். பெண்களின் பிரசவத்தினால் ஏற்படும் இரத்த இழப்பினாலும் இந்த நோய் ஏற்படும்.

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த நித்தியகல்யாணியின் நான்கு பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் முக்கி வைக்க வேண்டும். இதனை ஓர் இரவு காற்றோட்டமாக வைத்துவிட வேண்டும். காலையில் இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் குடித்த பின்னர் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தேவைக்கேற்றபடி இதனை தொடரலாம்.

💊#இரத்த_புற்றுநோய்

இரத்த புற்று நோய் என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஒரு சிதை மாற்றமேயாகும். இவை பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் அசாதாரண பெருக்கத்தால் அறியப்படுகின்றது.

இந்த புற்று நோயை நித்திய கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

💊#ஆஸ்துமா

இது நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் நோயாகும். இதனால் மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாகும். சுவாசக் குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் தடித்தும், நுரையீரல் தசைகளில் ஏற்படும் வீக்கம் இவைகளே ஆஸ்துமா எனப்படுகின்றது. இந்நோயின் காரணமாக ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லட்சம் பேர் வரை இறக்கிறார்கள்.

இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

💊 #விஷ_ஜுரம்

மிகக் கடுமையான நாட்பட்ட காய்ச்சலை குணமாக்கக்கூடியது இந்த நித்தியகல்யாணி. நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

💊 நித்திய கல்யாணி இலையை💊 பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

👉தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை. ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.

🔴 #கவனத்தில்_கொள்ள #வேண்டியவை

நித்திய கல்யாணி செடியை நேரடியாக உட்கொள்வது தீவிர நச்சுத்தன்மையை உடலில் உண்டாக்கும். கருத்தரித்த தாய்மார்கள் நித்தியகல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனையைப்
பெற்று பயன்படுத்துதல் நலம்.

🇨🇭#
*இந்து மரபில் தேங்காயை ஶ்ரீபழம் என உயர்த்திச் சொல்வது ஏன்?*


மிக எளிமையான ஒரு பொருள் தேங்காய். ஆனால் இந்த தேங்காய்க்கு இருக்கும் மகத்துவம் அளப்பரியாதது ஆன்மீக ரீதியாகவும் சரி, ஆரோக்கிய ரீதியாகவும் சரி தேங்காய் அற்புத நலன்கள் நிரம்பியது.

தேங்காய் என்பதை சமஸ்கிருதத்தில் நரிகேல்லா என்பர். இதனை ஶ்ரீ பழம் என்றும் அழைப்பர். எனில் புனித பழம் என்று பொருள். இறைவனுக்கு அர்பணிக்கப் படுவதாலேயே மஹா பழம் என்றும் அழைப்பர். வேத புராணங்களில் பெருமளவிலான குறிப்புகள் தேங்காய் குறித்து இல்லையெனினும், புராணங்கள், இதிகாசங்களில் தேங்காய் குறித்து ஏராளமான செய்திகள் உண்டு.


இந்த பழத்தின் மூலம் இந்தோனேசியாவில் உருவானது முதலாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்தது தேங்காய்.


இந்து மரபில் பெரும்பாலான மங்கள காரியங்கள், தொடக்க நிகழ்ச்சிகள், சுப காரியங்கள் என அனைத்து இடத்திலும், வழிபாடுகளிலும் தேங்காயை பயன்படுத்துவது வழக்கம். சில வீடுகளில் வாசலில் கூட தேங்காயை கட்டியிருப்பதை நம்மால் காண முடியும். தேங்காய் என்பது குலம் தளைப்பதன் அறிகுறி. எனவே பிள்ளை வரம் வேண்டுவோர் தென்னைக்கு நீர் வார்த்தால் விரைவில் சந்தான பாக்கியம் கிட்டும் எனவும் சொல்லப்படுகிறது.

வட இந்தியாவில் தென்னை மரமும், வில்வமும் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதற்கு இணையாக தென்னிந்தியாவில் தேங்காயை மக்கள் வணங்கி போற்றுகின்றனர். எந்தவொரு வழிபாட்டிற்கு முன்பும், தேங்காயை இரண்டாக உடைத்து இறைவனுக்கு படைப்பது வழக்கம்.


இந்த வழக்கத்திற்கு பின்னிருக்கும் தத்துவம் யாதெனில், தேங்காயை உடைப்பது நம்முடய நான் எனும் அகந்தையை இறைவனின் முன் உடைப்பதற்கு ஒப்பானது. ஆன்மீக பாதையில் செல்கிற போது முக்தி எனும் பேரானந்த நிலையை அடைய பெரும் தடைக்கல்லாக இருப்பது நம்முடைய அகந்தையே. எனவே அகந்தையை உடைப்பதை ஒத்தது தேங்காய் உடைப்பது.

இதற்கு பின் சொல்லப்படும் மற்றொரு கருத்து யாதெனில், முன்னொரு காலத்தில் சில கிராமப்புற தெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்ற உயிர்பலி கொடுப்பது வழக்கமானதாக இருந்தது. உயிர் பலியை தவிர்க்கவும் அல்லது உயிர்பலிக்கு நிகரான ஒரு அம்சமாகவும் தேங்காயை கருதியதாகவும் சில செய்திகள் கிடைக்கின்றன.

தேங்காய் என்பது தீய அதிர்வுகளை ஈர்த்து கொண்டு நல்ல அதிர்வுகளை தானிருக்கும் இடத்தில் பரப்பும் நன்மை கொண்டது. அது மட்டுமின்றி ஒரிரு பகுதி என்றில்லாமல், தன்னுடைய அனைத்து பகுதிகளாலும் நன்மையை மட்டுமே அனைவருக்கும் தரும் மஹாபழமே தேங்காய்.

ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் 🙏
வாதம் வைத்தியம்
Photo
🌼🌱சித்த மருத்துவ புத்தகம் விற்பனைக்கு - " குணபாடம் "

🙋‍♂️😀 நோயின்றி வாழவும் வந்த நோய்கள் நிரந்தரமாக குணமாகவும் சித்த மருத்துவமே சிறந்தது.
நம் வாழ்க்கைக்கு உபயோகமான அகஸ்தியரின் குணபாடம் பற்றி திரு பஞ்சவர்ணம் அய்யா இன்றைய தமிழில் கலைக் களஞ்சியமாக (Encyclopedia) வெளியிட்டுள்ளார்.

அகஸ்திய மாமுனி ஓலை சுவடியில் எழுதி வைத்திருந்த 510 மூலிகைகளை கண்டறிந்து இந்த களஞ்சியத்தில் 5 புத்தகமாக தொகுத்துள்ளார்.

மூலிகை தாவரத்தின் இரு சொல் பெயர், இதர மொழிகளின் பெயர் அதை மருந்தாக்கும் முறை, அந்த மருந்து குணமாக்கும் நோய்கள், ஆகியவை உள்ளடங்கிய வகைகளை இன்றைய தமிழ் மொழியில் நாம் புரிந்து கொள்ளும் அளவில் மிகச் சிறப்பாக தனித்தன்மையுடன் வடிவமைத்துள்ளார்.

வருமுன் காக்க முடியும். வராமலே தடுத்து நிறுத்த முடியும்.
எந்த மூலிகை எந்த நோய்க்கு, வரும் முன் காப்பதற்கும், வந்த பின் குணப்படுத்தும் என்ற அறிவு வளர இந்த குணபாடம் அறிவு களஞ்சியமாக இருக்கும்.

5 பகுதிகளை கொண்ட இந்த புத்தகம் ரூபாய் 2,500 என்ற அடிப்படை விலையில் கிடைக்கும். கொரியர் செய்யப்படும். குணப்பாடம் புத்தகத்தை பெற தொடர்புக்கு
WhatsApp / Call: 93842 96661
Email: info@makindia.co.in

#gunapadambook #siddhabook #siddhamdicine #agasthiyar #siddha
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
திருநெல்வேலியில்...
"வேதசத்தி வற்ம மருத்துவம்"
2 நாள் அடிப்படை பயிற்சி
Vethasatthi Medical Varmalogy
(2DAYS Basic Workshop - TAMIL)

திருமூலர் வேதசத்தி அகாடமி,
கோயம்புத்தூர்  நடத்தும்...
அரியதோர் பயிலரங்கம்

நாள் : 6 -7 ஏப்ரல்  2024
நிகழ்விடம்:
Francis Xavier Engineering College திருநெல்வேலி. தமிழ்நாடு.

முன்பதிவு அவசியம்
Limited Seats only

More info on web :
https://varmam.org/workshops/workshopschedule.php

Registration Link:
https://vethasatthi.myinstamojo.com/

(*Fees includes course material,
hands on training and Lunch*)

For Contact :
+91 87780 96842
+91 94422 49293
www. varmam.org

&

@ NASHIK:
Vethasatthi Medical Varmalogy
3 days – Basic Workshop - English

Date : 19,20,21 April 2024

Venue: Arya Inn Hall,
Karamblekar Towers, 1st Floor,
Mumbai - Agra Road,
Above Datta Tyres,
Near Deccan Petrol Pump, Cidco,
Nashik – 422009. Maharashtra State.

Pre Registeration Need
Contact : +919442259293

VETHA SATHTHI on YouTube
https://youtu.be/bcsBVYx4DJw?si=muOOFPPbx-L0QuCS
வர்ம யோகி.
Dr. N.Shanmugam
(Tamil Professor)
அவர்களின் நேர்காணல்
காணொளி

&

வேதசத்தி வற்மகலை (மருத்துவ நோக்கில் அனைவரும்
கற்கும் எளிய வர்ம வகுப்பு )
https://varmam.org/workshops/workshopschedule.php