வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
https://youtu.be/lr-A22Pu2fQ https://youtu.be/-szFdHdu0SA
காலையில் ஒரு கிராம்பின் மேல்மொட்டை நீக்கிவிட்டு லேசாக மென்று உமிழ்நீரை விழுங்கி வருவதால், காலப்போக்கில் உண்டாகும் நன்மைகள்:

1 - வலுவான, அபரிதமான நினைவாற்றல்.

2 - இரும்பு இதயம்

3- சுவாச மண்டலம் சுத்தமாகி, இருமல், சளி குணமாகும்.

4-மூட்டுகள் சிறப்பாக இயங்கும்.

5 - கிருமிகள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து வயிற்றை சுத்தம் செய்து வாய் சுத்தமாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.

6 - பற்களின் நோய் தொற்று குணமாகும்.

7 - கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.

8 - பார்வைதிறன் அதிகரிக்கும்.

9 - குரல்வளை மற்றும் டான்சில்ஸ் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கிறது

10 - இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
ஜீவமாளிகையில் ஜீவன் |ஞான உரை - 76 | @channelartindia
channel art india
உடல் எனும்
*ஜீவ மாளிகை* கூட்டில்
*ஜீவன்*
உலவும்
நிலைகளை
நிலையாமைகளை
பற்றி..

கழுகுமலை.
கழுகாசலதேவன்
ஐயா பகிரும் ஞான கருத்துக்கள்
👌🗣️🎧👍
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
*சென்னை 602002*
பிரம்மசூத்திரகுழு
*வளாகத்தில்..*
https://youtu.be/X1LNHXXelb8

*2023 ஏப்ரல் 23* லில்
*சித்தி சாதனா*
*1Day நிகழ்வு* நிகழுவதற்கு..

சித்தர்-அருளால்
வாய்ப்புகள் உருவாகி வருகிறது.

*நிகழ்விடம் :*
https://maps.app.goo.gl/jWziGUBV3vGMTvvY7

Siddhi - *Saadhana*
Practical *Workshop* (1Day)
சித்தி - *சாதனா*
*பயிலறங்க* நிகழ்வு
(ஒருநாள்)

*ஆத்ம* 🙏வணக்கங்கள்

*ஊர்த்துவகதி*
வசமாக்கும் *உபாயங்கள்* -
(யோக சாதனத்தில்
*வாசி கதி*
சித்திக்க சில *கற்பசாதனா* செயல்முறை
நுட்பங்களை/
தேர்ந்த சித்தர் பழக்கங்களை *வாழ்வியலை*

*சித்தர்கள்* வழியில்-உடலை *யோகியர்* போல *பேணு* வதற்கான
வழிகளை
*கற்கும் முயற்ச்சி* )

கண்டிப்பாக
*பிரம்ம சூத்திரகுழு*
அன்பர்கள் &
*சித்தவித்தை* பெற்றவர்கள் மட்டும்

[ *70பேர் வரை* ] தேர்ந்த *சிவயோக சாதனை* யாளர்களுக்கானது.

அவர்கள்
(முன்பதிவு செய்தவர்கள்) மட்டுமே
பங்குபெற இயலும்.👍
(**வேறு வகை
வாசியோகங்கள்
பழகுவோர்களும், 70வயது தாண்டிய முதியோர்க்கும்,
நேரடியாக வருவோர்க்கும்
*அனுமதி இல்லை* .)

*வாசி மௌன* சாதனங்களில்..
அடியேனாகிய
பிரம்மஶ்ரீ. ★கருவூரான்★

*கற்பமுறை* சாதனா
நுட்பங்களையும்,
*கைபாக - செய்பாக*
அனுபவ
முறைகளையும்..

*கபம்* / *கோழை* யை
*அகற்றி* *வாசிகதி* லயமாகிடும் *நோக்கில்* ..

யோகியர்/சித்த மார்க்க வழியில் *முன்னேற்ற*
மடைந்திட
சிரத்தை/
அதீத நாட்ட
முடையவர்களுடன்
நேரிடையாக
ஒரு *பகிர்தல்* /
பயிற்றுவிக்கும் ..

ஒரு நாள்
(2023 @ *April 23 ஞாயிறு*
8am to 5pm)
நிகழ்வாக..

ஒரு *ஞான தானம்*
சென்னை.
போளி வாக்கத்தில் சிவராஜயோக பாடசாலை வளாகத்தில்
நிகழ்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய
மேலதிக *தகவல்களுக்கு* :
பிரம்மஶ்ரீ. *விக்னேஷ்*
(Whatsapp
text/voice only)
+91 85261 44047
&
+91 98412 90421
வாதம் வைத்தியம்
Photo
நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்...
"மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார்.

"உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும்.

நன்றி 🙏🏻🌷🙏🏻
...
வாதம் வைத்தியம்
Photo
🌺 *வெந்தயமா……*

எங்களுக்கு_தெரியுமேன்னு சொல்றீங்களா..

ஆமா. நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சது தான்..

அதற்கான பதிவு தான் இது.. பாருங்க..

முயலுங்க..
பலன் சொல்லுங்க..

நம் வீட்டுச் சமையலறையில் ஏராளமான மருத்துவ குணம் நிறைந்த மற்றும் மிகுந்த கசப்பைக் கொண்ட ஓர் பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் நம் உடல் எடையைக் குறைக்கவும் உதவும்..

வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன், மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரைகளை உடைத்தெறிந்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் தேவையற்ற கொழுப்புக்களைக் கரையச் செய்யும்.

வெந்தயம் வயிற்றை நிரப்பி, அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும்.

வெந்தயத்தில் உள்ள ஆரோக்கியமான கார்போஹைட்ரேட், உடல் பருமனடைவதைத் தடுக்கும்.

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைத் தடுத்து, உடலின் மெட்டபாலிச அளவை ஊக்குவிக்கும். இதன் காரணமாக அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

*வெந்தயத்தை* *#முளைக்கட்டச்_செய்வது_எப்படி*

*முறை 1*

* முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

* பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறைவெப்பநிலையில் வைக்க வேண்டும்.

* பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் செய்து வர, வெந்தயம் முளைக்கட்டியிருப்பதைக் காணலாம்.

*முறை 2*

வெந்தயத்தை எடுத்துக் கழுவிட்டு, முதல் நாள் இரவு தண்ணில ஊறப் போட்டுருங்க. மறு நாள் நல்லா ஊறியிருக்கும். அப்ப அந்தத் தண்ணியை வடிச்சிட்டு, மெல்லிசு துணி இருந்தா அதுல கட்டி, அதே பாத்திரத்தில் போட்டு இறுக்கமா மூடி வச்சிருங்க. துணியோட ஈரம் காயாம அப்பப்ப, ஒரு மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம் லேசா தண்ணி தெளிச்சுக்கிட்டே இருக்கணும். மறு நாள் துணியை தொளைச்சுக்கிட்டு முளை விட்டிருக்கும் பாருங்க, பாத்தாலே அவ்ளோ சந்தோஷமா இருக்கும்!

*சரி, துணி* *இல்லாட்டினா என்ன* *பண்றது* ?

அப்பவும், ஊற வெச்ச தண்ணீரை வடிச்ச பிறகு, சும்மா அதே பாத்திரத்தில் அப்படியே போட்டு, நல்லா மூடி வச்சிருங்க. மூணு அல்லது நாலு மணி நேரத்துக்கொரு தரம், பயறைக் கழுவி, தண்ணீரை வடிச்சுட்டு வைக்கணும். மறு நாள் பார்த்தீங்கன்னா, பயறு முளை விட்டு இரண்டு மடங்கா ஆயிரும்!

பயறை 10 நாட்கள் நிழலில் காய வைக்கவும்.

ஒரு நாள் சூரிய வெளிச்சத்தில் காய வைக்கவும்.

நன்று காய்ந்த பின் மிஷினில் திரித்துக் கொள்ளவும்.

அரைத்த வெந்தய பொடியை
காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து கொள்ளவும்.


*எப்படி_பயன்படுத்துவது* …

*முளைக்கட்டிய* *வெந்தயம்*

வெந்தயத்தை முளைக்கட்ட வைத்தால், அதில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் ஏராளமான அளவில் நிறைந்திருக்கும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

*வெந்தயம்*

உஷ்ணம் குறைக்கும்
வெந்தய - மோர் பானம்

*தேவையான* *பொருட்கள் :*

வெந்தயம்- 1 கப்
மிளகு-1/4கப்
சுக்கு-சிறு துண்டு
மோர் - 1 கப்

*செய்முறை :*

• வெந்தயம், மிளகு(4:1) சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

• ஒரு டம்ளர் மோருடன் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்து அருந்தி வந்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்.

• கோடை காலத்தில் இதை அவ்வப்போது அருந்திவர உஷ்ணம் குறையும்.

*🍁வெந்தய லேகியம்*

வெந்தயம்,

மிளகு,

திப்பிலி,

பெருங்காயம்

இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட……

சீதக்கழிச்சல், வெள்ளை,மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.

*🍁வெந்தயம்_மருத்துவம்*

மாதவிலக்கில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கைத் தடுப்பதற்கு
3 கிராம் வெந்தயத்தைத் தேனில் கலந்து இரண்டு வேளை தரலாம்.

வெட்டை நோயால் தொடை மடிப்புகளில் வரும் அரையாப்புக்கட்டி, கழலைக் கட்டிகள், பொதுவான வீக்கம் ஆகியவற்றைக் குணமாக்க வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துப் பற்றுப்போடலாம்.

5 கிராம் வெந்தயத்தைப் பவுடராக்கிச் சிறிது சமையல் உப்புடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, அஜீரணம், வாயுத்தொந்தரவு, இரைப்பை பலவீனம் ஆகியவை குணமாகும்.

6கிராம் வெந்தயம், சர்க்கரை ஆகிய இரண்டையும் பாலில் கொதிக்க வைத்துப் பாயசமாகக் குடித்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

9 கிராம் வெந்தயத்தைத் தண்ணீரில் அரைத்துத் தினசரி ஒரு வேளை சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

*சர்க்கரை* *வியாதியைக்கு*

பாகற்காய்,

நாகப்பழக் கொட்டை,

வெந்தயம்

ஆகியவைகளைச் சமஅளவில் கலந்து பவுடராக்கி ஒரு டீஸ்பூன் அளவில் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவரவும்.

பாகற்காய்,

நாகப்பழக் கொட்டை,
வாதம் வைத்தியம்
Photo
வேப்பிலை,

பிரிஞ்சி இலை,

வெந்தயம்

ஆகிய 5 பொருட்களையும் பவுடராக்கி வேளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் இரண்டு வேளைதருவார்கள்.

கருஞ்சீரகம் 12 கிராம்,

காசினி விதை 6 கிராம்,

வெந்தயம் 6 கிராம்

அளவில் சேர்த்துப் பவுடராக்கி மூன்று கிராம் வீதம் காலை- மாலை இரண்டு வேளை சாப்பிடவும். தொடர்ந்து 6 மாதங்கள் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும்.

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.

*வெதுவெதுப்பான* *வெந்தய நீர்*

வெந்தயத்தை பொடி செய்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டீஸ்பூன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் வெந்தயப் பொடியை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் நன்மை கிட்டும்.

*நீரில் ஊற வைத்த* *வெந்தயம்*

ஒரு கையளவு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டிவிட்டு, வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
இப்படி சாப்பிட்டால், நாள் முழுவதும் வயிறு நிறைந்து, பசியுணர்வு கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதன் காரணமாக கண்ட உணவுகளின் மீது நாட்டமும் குறையும்.

*வெந்தயம் மற்றும்* *தேன்*

ஒரு டம்ளர் நீரில் வெந்தயப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, காலையில் எழுந்ததும் குடித்தாலும், உடல் எடை குறையும்.

*வெந்தய டீ*

வெந்தயத்தைக் கொண்டு டீ தயாரித்துக் குடித்தால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதுடன், உடல் எடையையும் குறைக்க உதவும்.

குறிப்பாக இது செரிமானத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அதிலும் வெந்தய டீயுடன் பட்டைத் தூள் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.

*மேலும்_படிங்க………*

வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும்.

கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.

வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.

நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.

வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.

மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சில நோய்கள் தணியும்.

வெந்தயம், வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.

வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.

வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.

வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி, நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் வயிற்றுவலி, உடல்சூடு, வெள்ளைப்படுதல், கழிச்சல் போன்றவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும்.

உடல் மெலிந்தவர்கள், வெந்தயம் சேர்த்து தயாரித்த அடையை, கருணைக்கிழங்குடன் சாப்பிட்டால் உடல் பருமனாகும்.

ஈரல் சார்ந்த நோய்களுக்கு வெந்தயம், பெருங்காயம், கறிமஞ்சள், கடுகு ஆகியவற்றை நெய்விட்டு வறுத்து பொடியாக்கி, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெந்தயம், பெருங்காயம், துவரம்பருப்பு சேர்த்து மண்பானையில் தயாரித்த உணவை, சூடாகச் சாப்பிட்டால் உடல் எரிச்சல் குறையும்.

பிரசவித்த பெண்ணுக்கு பால்சுரப்பு அதிகரிக்க வெந்தய
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடித்து, கோதுமை மாவும் கருப்பட்டியும் சேர்த்து தயாரிக்கும் இனிப்புக் களி‘ பால்சுரப்பை அதிகரிக்க செய்யும்.

*கொலஸ்ட்ரால்* *குறையும்* :-
வாதம் வைத்தியம்
Photo
தற்போது கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் நிறைய பேருக்கு உள்ளது. அத்தகைய கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை வெந்தயம் போக்கும். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தில் உள்ள உட்பொருட்கள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். இதற்கு வெந்தயத்தில் உள்ள ஸ்டெராய்டல் சாப்போனின்கள் தான் காரணம். இவை தான் கெட்ட கொலஸ்ட்ராலை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.

*இரத்த சர்க்கரை* *அளவு :-*

உங்கள் வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியெனில் உங்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்புள்ளது. ஆனால் தினமும் வெந்தயத்தை சமையலில் சேர்த்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.

*இதய நோய்கள் :-*

மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இளம் வயதிலேயே இதய பிரச்சனைகள் அதிகம் வருகிறது. இதனைத் தவிர்க்க வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும். ஏனெனில் இதில் உள்ள பொட்டாசியம், சோடியத்தின் செயல்பாடுகளைக் குறைத்து, இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும்.

*தொண்டைப்புண்* *மற்றும் காய்ச்சல் :-*

வெந்தயம் தொண்டைப்புண் மற்றும் காய்ச்சலில் இருந்து விடுவிக்கும். எனவே உங்களுக்கு இப்பிரச்சனைகள் இருக்கும் போது, சிக்கன் சூப்பில் வெந்தயத்தை பொடி செய்து சேர்த்து குடியுங்கள், இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*எடை குறையும் :-*

உடல் எடையால் கஷ்டப்பட்டு வருபவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்ததும் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இதனால் உங்கள் பசி கட்டுப்படுத்தப்பட்டு, உடல் எடை அதிகரிப்பது குறையும்.

*தாய்ப்பால் சுரப்பு* *அதிகரிக்கும் :-*

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், வெந்தயத்தை உணவில் சேர்த்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். ஏனெனில் இதில் உள்ள டையோஸ்ஜெனின், தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டும்.

*மாதவிடாய் கால* *அவஸ்தைகள் :-*

பெண்கள் வெந்தயத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அசௌகரியங்களில் இருந்து விடுபடலாம். எனவே உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி, தசைப் பிடிப்புகள் போன்றவை அதிகம் இருந்தால், இந்த வழியை முயற்சித்துப் பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

*குடல் புற்றுநோய் :-*

வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்களான சாப்போனின்கள், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை முழுமையாக வெளியேற்றச் செய்து, குடல் புற்றுநோயில் இருந்து நம்மை விலகி இருக்கச் செய்யும்.

🍁 *வெந்தய_டீதயாரிப்பது_எப்படி*

*ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.*

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

*நன்மை 1*

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*நன்மை 2*

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

*நன்மை 3*

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

*நன்மை 4*

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்

*நன்மை 5*

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

*நன்மை 6*

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

*நன்மை 7*

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

*நன்மை 8*

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

*நன்மை 9*

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

*நன்மை 10*

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.
வாதம் வைத்தியம்
Photo
*நன்மை 11*

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

*நன்மை 12*

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

*நன்மை 13*

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

*நன்மை 14*

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

*நன்மை 15*

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

*நன்மை 16*

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல