வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
இணையவழி
*யோக சொற்பொழிவு :*
எதிர்வரும்..

*24 SEPTEMBER 2022*
ஞாயிறுகிழமை
24/9/22 @ 2pm
இந்திய நேரம் : IST *2PM to 4.00 PM* (2Hrs)

Yogic Preacher
*பிரம்மஶ்ரீ. சிவன்சுரேஷ்*
வேளச்சேரி அவர்களின்
கருத்துரையாடல் *Online Streaming* நிகழ்வு..👇

*Join yourself Link :*
https://t.me/Siva_Siva_Anbe_Sivam?livestream
*உடல்,உயிர்,மனம் - பாதுகாப்பு*
பற்றிய பிரம்மஞான-ஆத்மஞான கருத்துக்களை சார்ந்த
தலைப்பில்...
பங்கு கொள்கிறார்.

*மெய் ஆன்மீகம்* தேடும்
அன்பர்கள் அனைவரும்..

*டெலிகிராம் சேனலில்* 👇 இணைந்து..
www.t.me/Siva_Siva_Anbe_Sivam
கலந்து கொண்டு
தங்களது.. *ஐயங்களையும்*
நிகழ்வின் இறுதியில் *மக்கள் கருத்து* பகுதியில் பகிர்ந்திடவும்
வேண்டுகிறோம் 🙏🏻🌷🔮

*Join yourself Link :*
https://t.me/Siva_Siva_Anbe_Sivam?livestream

🙏ஆத்ம நன்றிகள்🙏
முந்தைய ரெகார்டெட் பதிவுகளுக்கு..
https://t.me/Siva_Siva_Anbe_Sivam/3228

https://t.me/truthsofsivayoga/8853

https://t.me/c/1664274024/1628
🙏🏻🌞🙏🏻
~ சிவ சிவ *அன்பே சிவம்* - Telegram சேனல் நிர்வாக குழு.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
இருமைகள்..!

பிறப்பு - இறப்பு
நன்மை - தீமை
புண்ணியம் - பாவம்
பகல் - இரவு
ஒளி - இருள்
நேர்மறை (+ve) - எதிர்மறை (-ve)
யின் - யாங்
வெப்பம் - குளிர்ச்சி
விருப்பு - வெறுப்பு
உண்டு - இல்லை
அறிவு - அறியாமை
பணிவு - திமிர்
உண்மை - பொய்
சரி - தவறு
நினைவு - மறதி
பழமை - புதுமை
மகிழ்ச்சி - துக்கம்
இலாபம் - நஷ்டம்
வேண்டும் - வேண்டாம்
ஆக்கம் - அழிவு

இவ்வாறு, ஏராளமான இருமைகளான எதிர் வினைகளை எடுத்துக் கூறிக்கொண்டே போகலாம்.

இதிலே, ஒன்று இருக்க, அதற்கு வேறாக மற்றொன்று எங்கிருந்து அதற்கு எதிராக வந்தது...?

இந்த முரண்பாடுகள் ஏன்...? என்றாவது இதைப்பற்றி யோசித்துப் பார்த்திருக்கின்றோமா...?

இப்பொழுது யோசியுங்கள்...!

ஆம்! இந்த இருமைகளை அறிந்தால்தான் இறைவ(தன்)னை அறிய முடியும்.

இதைப்பற்றி மேலும் விரிவான விபரங்களுக்கு மேழே உள்ள PDF புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படிக்கவும்.

நன்றி! 🙏
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
*சிவ சிவ!🙏*

*ஓம் அகத்தீசாய நம!🙏*

*🌸தர்மத்தை பற்றி அகத்தியர் மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

*🌸யார், யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமாே அது நடந்து காெண்டேயிருக்கிறது. அந்தக் கடுமையான விதியிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மைப் பாெருத்தவரை, தர்மம், தர்மம், தர்மம், தர்மம், தர்மம், தர்மம். இது ஒன்றுதான்.*

🙏 *-சுபம்-* 🙏

*🙏 குரு திருவடி சரணம்!🙏*
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
30/10/2022 - ஞாயிறு ( Sunday )
A discussion on Telegram Channel

IST : 2pm ~ 3.30pm

Topic :
பிரம்ம வித்தைகளில் தவறாமல் நிலை பெறுவது எப்படி?

Discussion Conductor :
பிரம்மஶ்ரீ. விக்னேஷ்-திருச்சி

டெலிகிராம்
குரூப் லிங்க் 👇
https://t.me/+EcrhCUzAz5BhYWFl

TELEGRAM DISCUSSION
on
VIDEO CHAT /
VOICE CHAT

Telegram Channel+Group 👣👇
www.t.me/truthsofsivayoga
(Join channel 1st,
2nd join
discussion group )

Indian Time :
வாரம்தோறும்
சனி/ஞாயிறுகளில்
2pm ~ 3.30pm
Singapore Time :
4.30 ~ 6pm
#வெண்பூசணிச்சாற்றின்_பயன்கள்...

அரை கப் வெண்பூசணிச் சாற்றுடன் அரை கப் தண்ணீர் கலந்து தினமும் காலையில் பருகி வர கிடைக்கும் நன்மைகள்:

1. சோம்பலை நீக்கி புத்துணர்வை கொடுக்கும்.

2.மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.

3.வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்தும்.

4.உடல் உஷ்ணத்தை குறைக்கும்.

5.உடல் எடையை கட்டுப்படுத்துவதுடன் எடை அதிகரிப்பினால் ஏற்படும் கால் மூட்டுவலியைக் குறைக்கும்.

6. உடலில் அமிலத்தன்மையை சமன்படுத்த பெரிதும் உதவுகிறது.

7. வெண்பூசணிச்சாற்றுடன் சம அளவு தண்ணீர் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மூன்று மணி நேரத்திற்கு வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுப் புண்ணுக்குச் சிறந்த மருந்தென்றும் தொடர்ந்து பல நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் முழுமையாகக் குணமாகிவிடுமென்றும் குறிப்பிடுகின்றனர்.

8. மலச்சிக்கல் குறையும். குறிப்பாக நாடாப் புழுக்களுடன் இதரக் குடற்புழுக்களை வெளியேற்றும்.

9. கலோரி குறைந்த உணவென்பதால் சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உணவு எனப்படுகிறது. கழிவு நீக்கியாகச் செயலாற்றி சிறுநீர் வெளியேற்ற உதவுகிறது.

10. தூக்கமின்மைக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நீர்க்கோர்வை, இருமல்,
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
வாதம் வைத்தியம்
Audio
லண்டனிலிருந்து
வந்திருந்து
சிறுமலை
"சித்தி சாதனா"
(Oct 2022)
நிகழ்வில் பங்கேற்ற அனுபவத்தை

சித்த
வித்தியார்த்தி
பெண்மணியாக
தனது மன உணர்வுகளை
பகிர்ந்துள்ளார்
👆இங்கே 🗣️🎧
குரலொலியாக.

ஆத்ம 🙏🏻 நன்றிகள்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
உடல்_நலவாழ்வும்_மூலிகை_மருத்துவம.pdf
9.1 MB
உடல்_நலவாழ்வும்_மூலிகை_மருத்துவம.pdf
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
குரு வாசகம் # 01
வாதம் வைத்தியம்
Photo
மறந்துபோன மருத்துவ உணவுகள்!!

'ராத்திரியெல்லாம் புள்ளை இருமிக்கிட்டே இருந்தானே... மதியம், பச்சரிசி, வெந்தயம், துருவிய தேங்காய், ஒரு கை உரிச்ச வெள்ளைப் பூண்டைப் போட்டுக் குழையக் கஞ்சி வெச்சு, சூடாக் குடும்மா!

தொட்டுக்கிறதுக்கு, ஒரே ஒரு வரமிளகாய் வெச்சு, கொள்ளுத் துவையல் அரைச்சிரு!'' என்று திருகையில் (எந்திரம்) உளுந்தையோ, அரிசியையோ போட்டு ரவையாக உடைத்தபடி, கண்டாங்கிச் சேலை கட்டிய அப்பத்தாக்களும் ஆயாக்களும் சொல்லிய காலமெல்லாம் கடந்து, நைட்டியில் பாட்டிகள் உலவியபடி, பேரப்பிள்ளைகளுக்கு உணவு, மருந்து எதுவானாலும் இன்டர்நெட்டில் தேடிக் கொடுக்கும் காலம் இது என்பதால், 'மறந்துபோன’ மருத்துவ உணவுகளை நினைவூட்டும் நேரம் இது!

அஷ்டாம்சக் கஞ்சி
தேவையானவை: கோதுமை, கழுவிக் காயவைத்த கேழ்வரகு, பொட்டுக் கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்துவைத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்கவைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது.
மருத்துவப் பலன்கள்: வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக் கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.

பூண்டு - மிளகுக் குழம்பு
தேவையானவை: உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும். பூண்டுக்கு, கொழுப்பைக் குறைக்கும் தன்மை உண்டு.

அமிர்தப் பொடி
(இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)
தேவையானவை: தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், நொறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.
செய்முறை: கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்துவைத்துக்கொள்ளவும். வெயிலில் காயவைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்துவைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்கவைத்து அதில் புளி உப்பு பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.

மருத்துவப் பலன்கள்: நோயிலிருந்து மீண்ட பிறகு, ஏற்படும் பசி மந்தத்தைப் போக்கும். எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்னை இருந்தாலும், அதைப் போக்கி உடலைத் தெம்பாக்கும். குழந்தைகளுக்குப் பசியின்மை இருந்தால், சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து தரலாம்.

கொள்ளு குழம்பு
தேவையானவை: கொள்ளு - அரை ஆழாக்கு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு, மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், தனியா தூள் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சம்பழ அளவு, கொத்துமல்லித் தழை - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.
அரைக்க: சின்ன வெங்காயம் - 2 கையளவு, தக்காளி - 4, பூண்டுப் பல் - 6.
செய்முறை: கொள்ளை முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைக்கவும். ஊறவைத்த கொள்ளை, நன்றாக வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதையும் போட்டுச் சுண்ட வதக்கவும்.

இதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்க்கவும். அரைத்த கொள்ளு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கெட்டியாகும் வரை கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: ஊளைச்சதை குறைய மாதம் இருமுறை கொள்ளுக்குழம்பு சாப்பிட்டுப்பாருங்கள். கொழுத்த உடம்பு குறையும்.