வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
R•J•N _SG
*வாழைஇலை + புற்றுமண் குளியல்* வாழைஇலை : https://youtu.be/CTUpdHvn4jo புற்றுமண் : https://youtu.be/O6K1IaWQnCI https://youtu.be/66rDx1u8yAc
*இயற்கை வைத்தியம்:*

*மண் சிகிச்சைகள்:*

மண்ணிலிருந்து உண்டாகிற உணவுப் பொருள்களால், நம் உடம்பு உருவாக்கப்பட்டு உள்ளது. ஆகையால் இந்த உடம்பில் ஏற்படும் கோளாறுகளுக்கு மண்ணையே மருந்தாகக் கொண்டு சிகிச்சை அளிப்பது மிகவும் பயன் உள்ளதாகக் கருதப்படுகிறது. அனுபவத்திலும் இது நன்கு மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் சிகிச்சைக்கு உபயோகிக்கப்படுகிற மண் மிகவும் தூய்மையானதாக இருக்க வேண்டும். சுத்தமில்லாத மண்ணை உபயோகிக்கக் கூடாது. குறிப்பாக இரசாயன உரங்கள் போடப்பட்டு இருக்கும் மண்ணை மறந்தும் உபயோகிக்கக் கூடாது.

மண் சிகிச்சைகளுக்குப் புற்று மண்ணைப்போல் தலை சிறந்தது வேறு எதுவுமே கிடையாது. அது கிடைக்காவிட்டால் மேட்டுப்பாங்கான இடங்களில் உள்ள மண்ணை எடுத்துக்கொள்ள வேண்டும். சரிவான இடங்களில் உள்ள மண்ணானது மழை பெய்யும் போதெல்லாம் மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடுகிற மழைநீரால் கழுவப்படுகிறது. ஆகையால் அதுவும் மிகச் சிறந்ததே ஆகும்.

அத்தகைய சுத்தமான மண்ணைக் கொண்டுவந்து ஒரு கல் உரலில் போட்டு இரும்பு உலக்கையால், நன்கு இடித்துத் தூள் ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் தூளை ஒரு மெல்லிய கம்பிச் சல்லடையில் போட்டுச் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிகிச்சைக்கு உபயோகப்படுத்துகிற மண்ணில் சிறிது மணலும் கலந்திருக்க வேண்டியது முக்கியம் ஆகும். இயற்கையிலேயே அது மணல் கலப்பு உள்ள மண்ணாயிருந்தால் மிகவும் நல்லது. களிமண், கரம்பை மண் போன்றவற்றில் சிறிதும் மணல் கலப்பு இராது. அத்தகைய மண்தான் கிடைக்கிறது என்றால், அதனோடு சிறிது மணலை நாம் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலக்கப்படுகிற மணலும் மிகத் தூயதாகவே இருக்க வேண்டும்.

மண்ணின் தூய்மையிலோ, மணலின் தூய்மையிலோ நமக்கு ஐயப்பாடு இருக்குமாயின், அதை நாம் கழுவிச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். எப்படியென்றால், அந்த மண்ணையோ மணலையோ சுத்தமான தண்ணீர் விட்டுக் கரைத்து, ஒரு பாத்திரத்தில் தெளிய வைக்க வேண்டும். பின்னர் அந்தத் தெளிந்த நீரை அறவே இறுத்துவிட்டு, அடியில் தங்கியிருக்கும் மண்ணை அல்லது மணலை வேறு புதிய நீர்விட்டுக் கலக்கித் தெளிய வைக்க வேண்டும். இப்படி மூன்று நான்கு தடவை (தேவைப்பட்டால் இன்னும் அதிகமான தடவை) கரைத்துத் தெளிய வைத்த பிறகு, பாத்திரத்தில் உள்ள தண்ணீரை முற்றிலும் வடித்து எடுத்துவிட்டு, அடியில் தங்கியிருக்கும் மண்ணை அல்லது மணலை வெளியில் நன்கு காயவைத்து எடுத்து சுத்தமான பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட மணலைத்தான் மண் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட மண்ணைத்தான் மண் சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகிற களிமண் அல்லது கரம்பை மண்ணோடு கலந்து கொள்ள வேண்டும்.

*மண் கட்டு:*

சுளுக்குகள், கட்டிகள், காயங்கள், சீழ்பிடித்த புண்கள், தீச்சுட்ட புண்கள், பிளவைகள், எலும்பு முறிவுகள், விஷக்கடிகள் போன்றவற்றிற்கு இந்தச் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.

இதனைக் கையாள வேண்டிய முறை எப்படி யென்றால்,

வேதனை உள்ள இடத்திலும், அதைச் சுற்றிலும் அரை அங்குல கனத்துக்கு ஈரமண்ணை அப்பி, அதன் மேல் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை நான்கு ஐந்து தடவை இறுக்கிச் சுற்றிக் கட்டுப்போட்டுவிட வேண்டும்.

வேதனை, விஷக்கடியினால் ஏற்பட்டதாய் இருந்தால், அந்தக் கட்டு இன்னும் சற்று இறுக்கமாக இருக்க வேண்டும்.

ஆனால், வேதனை குறைந்தவுடன் கட்டை அவிழ்த்துவிட்டு, முன்போல அவ்வளவு இறுக்கமாக இராமல் சிறிது தளர்ச்சியாக, மறுபடியும் கட்டுப்போட வேண்டும்.

திறந்த புண்களாய் இருந்தால், அவற்றின்மீது நல்லெண்ணெயில் நனைத்த ஒரு துணியைப் போட்டு மூடிவிட்டு, அந்தத் துணியின் மேல் மண்ணை வைத்துக் கட்ட வேண்டும். மண் இல்லாமலே வெறும் கனமான துணியைத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, அரை அங்குல கனத்துக்கு மடித்து வைத்தும் கட்டலாம்.

பொதுவாக, பழுத்து உடையாத கட்டிகளுக்கு மண் கட்டும், பழுத்து உடைந்த கட்டிகளுக்கு வெறும் ஈரத் துணிகட்டும் போடுவது நல்லது.

மண்கட்டுச் சிகிச்சையை அரைமணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரையில் நீடிக்கலாம். அதன் பிறகு கட்டை அவிழ்த்துவிட்டு, அந்த இடத்தைக் கழுவி விரைவில் ஈரமில்லாது துடைத்துவிட வேண்டும்.

கீல்வாயுவினால் மூட்டுகளில் ஏற்படும் வலியைப் போக்குவதற்கு இந்தச் சிகிச்சை விரைவில் பயன் அளிக்கக் கூடியது ஆகும். தோலில் ஏற்படுகிற நாள்பட்ட நமைச்சல் வியாதிகளுக்கு இது மிக நல்லதாய் இருக்கும்.

*மண் பற்று:*

சுத்தமான மண்ணைச் சிறிது கொதித்த தண்ணீர் விட்டுக் குழப்பி, அதை உடம்பில் பற்றாகப் போட வேண்டும். அல்லது, அவ்வாறு குழப்பப்பட்ட மண்ணை அரை அங்குல கனத்துக்கு ஒரு கெட்டியான துணியின் மீது தடவி அதை ஒரு பிளாஸ்திரியைப் போல் உபயோகிக்கலாம்.....
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
துளசி
ஒரு தொட்டியில் நல்ல வளமான மண்ணை இட்டு நிரப்பி துளசியையும், தொட்டால் சிணுங்கியையும் அருகருகே வைத்து தோட்டத்திலோ, மாடியிலோ அதிகம் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, நெய் விளக்கு ஏற்றி, பூஜை செய்து 21 முறை வலம் வரவேண்டும். தினமும் நெய்வேத்தியம் படைக்காவிட்டாலும் ஒவ்வொரு வெள்ளியன்றும். காலை மாலையில் நீராடி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, இளநீர் அல்லது பானகம், வெண்பொங்கல் வைத்து பூஜை செய்து வா. தினமும் குளித்து விட்டு விளக்கேற்றி 21 முறை வலம்வருவதை மறக்காதே. இதை நம்பிக்கையோடு தவறாமல் செய்து வந்தால் உன் பிரச்சனைகள் நீங்கும் என்றார். நீங்க வேற துளசிதான் எங்க வீட்ல எப்பவும் இருக்கே, என்றேன். இருக்கும், தொட்டால் சிணுங்கி இருக்காது. அதுதான் துளசியின் கணவனான ஜலந்திரன் என்கிற அசுரன். ஈஸ்வரனிடம் அழியாத வரங்களைப் பெற்றவன். தேவலோகத்தையே அழித்து நாசம் செய்தவன். மனைவி மேல் பாசம் கொண்டவன். மகா விஷ்ணுவின் தந்திரத்தால் ஜலந்திரன் தலை துண்டிக்கப்பட்டு துளசியின் மடியில் விழுந்ததாகப் புராணம் சொல்கிறது. துளசியின் மேல் மனமிரங்கி இருவரையும் மூலிகைகளாக வரம் அளித்து அருளியதாகச் சொல்லப்பட்டுள்ளது. இரு மூலிகைகளுக்கும் அனேக அற்புத சக்திகளைத் தந்தருளியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. திங்கள் பூஜை செய்து வலம் வந்தால், எண்ணங்கள் யாவும் ஈடேறும். ஐந்து வாரங்களில் பலன் தெரிய ஆரம்பிக்கும். தொடர்ந்து செய்து வந்தால் பலன் நிலைக்கும். வெள்ளி அன்று வலம் வந்தால், குடும்ப ஒற்றுமை, போக பாக்கியம், லட்சுமி கடாட்சம் யாவும் உண்டாகும். செவ்வாய், சனிக் கிழமைகளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும். வியாழக் கிழமை வலம் வந்தால் விரோதிகள் வசியமாவார்கள். அந்தந்த கிழமைகளின் பலன்கள் யாவும் சித்திக்கும். குரு எனக்குச் சொன்னார். நான் உனக்குத் தந்தேன் அலட்சியமாக எண்ணாதே என்றார். நானும் சரி என்று சொல்லி விட்டேன். அவரும் விடை பெற்றுப் போய்விட்டார். சதுரகிரி மலைக்குப் போகிறோம், நம் காலடியில் எத்தனையோ மூலிகைகள் படுகின்றன. ஆனால் அவைகளுக்குள்ளே எத்தனையோ அபூர்வ சக்திகள் ஒழிந்து கிடக்கின்றன என்பது எத்தனை பேருக்குத் தெரியும். முதலில் இதெல்லாம் ஏமாற்று வேலை என்றுதான் நினைத்தேன். எனக்கு மிகவும் நெருங்கிய பழைய சட்ட மன்ற உறுப்பினரும், வக்கிலுமான ஒரு சகோதரர் வெளியூருக்கு போகும் போதெல்லாம் காரை நிறுத்தி பல மூலிகை அற்புதங்களைச் செய்து காட்டுவார். நான் பிரமித்து விடுவேன். ஒரு டம்ளரில் தண்ணீரை ஊற்றி எடுத்து வா, என்பார். எடுத்து போனால் ஒரு செடியின் இலையைப் பிழிந்து சில துளிகளை அந்த தண்ணீரில் விடுவார். சில நொடிகளில் அந்தத் தண்ணீர் ஐஸ் போல வெள்ளையாக கட்டியாக ஆகிவிடும். நானும் தண்ணீரைப் போல உறைந்து போய் வாயைப் பிளப்பேன். ஒரு மூலிகையின் வேரை நன்றாக மென்று சவைத்துத் துப்பச் செய்வார். பிறகு ஒரு கல்லைக் கொடுத்து கடிக்கச் சொல்வார். கல் தூள் தூளாகிவிடும். நம் பல்லுக்கு ஒன்றுமே ஆகாது. இப்படிப் பலப்பல விந்தைகளை நேரில் அனுபவித்திருந்ததால், இவர் சொன்னதையும் நம்பாமல் இருக்க முடியவில்லை. அப்படி தொட்டால் சிணுங்கி செடியில் என்னதான் இருக்கிறது என்று ஆராயப் போனால் அதில் பல விஷேசமான சக்திகள் சொல்லப்பட்டுள்ளன. அது மின் சக்தி உள்ள ஒரு மூலிகை என்றும், அதை ஒரு மண்டலம் தினமும் தொடுபவன் மன ஆற்றல் பெருகும் என்றும், சொன்னது பலிக்கும், நினைத்தது நடக்கும் என்றும், ஆன்மையைப் பெருக்கும், சிற்றின்ப ஆசையைத் தூண்டும் என்றும், சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வாகிய மூலிகை என்றும், மந்திர சக்தி உடையது என்றும் பல விஷேச சக்திகள் சொல்லப்பட்டுள்ளன. துளசி வெப்ப மூட்டும், இது வெப்பத்தை குறைக்கும். துளசி மின்சாரத்தில் அடி பட்டவர்களைக் காக்கும், இது மின் சக்தியைத் தூண்டும் இப்படி ஒன்றுக் கொன்று எதிர் இயக்கங்களைக் கொண்ட பெண்பால் ஆண்பால் மூலிகையான கணவனும் மனைவியுமாக துளசியும், தொட்டால் சிணுங்கியும் திகழ்கிறது. இத்தனை இலட்சம் மூலிகைகளில் இவை இரண்டிற்கும் இப்படி ஒரு தொடர்பு இருப்பதை சித்தர்கள் எப்படித்தான் கண்டுபிடித்தனரோ என்று ஆச்சர்யம் தோன்றுகிறது. இதில் இனியும் ஒரு விந்தை என்ன வென்றால் பெண்பாலான துளசி சூரியனின் அம்சம். ஆண்பாலான தொட்டால் சிணுங்கி சந்திரனின் அம்சம். நம் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் ஆண்பால், சந்திரன் பெண்பால். மூலிகையில் அந்த சூக்குமம் அப்படியே மாறி நிற்கும் காரணத்தை சித்தர்களே அறிவார்கள்.
பருத்தி பால் வாரம் ஒருமுறை அருந்துவதால் கிடைக்கும் பலன்களும் உடல் வலிமையும் https://youtu.be/sDrpKwIYxpg
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
|| திருமந்திர ஞானம் ||

"அண்டம் சுருங்கில் அதற்கோர் அழிவில்லை,

பிண்டம் சுருங்கில் பிராணன் நிலை பெறும்,

உண்டி சுருங்கில் உபாயம் பல உள,

கண்டம் கறுத்த கபாலியும் ஆகலாமே!"

சித்த மகாகுரு.
ஶ்ரீ திருமூலர் பெருமானின் திருமந்திரம் மூவாயிரம் சுருதியின் நூலின் பாடலிலிருந்து 👆இப்பாடல் ஞானத் தெளிவிற்காக.

சிறு விளக்கம் :
சரியை கிரியை தாண்டிய
யோக - ஞான வழியில் பயணிப்போர்..

உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண் குழியுமாயினும், அதனால்,
உடலுக்கு ஓர் அழிவும் வந்து விடாது.

மாறாக, உடம்பு தானாக இழைத்தால் ஜீவ மையனாகிய
பிராணன்
தன் வசப்பட்டு தனக்குள்ளாக பெருஞ்ஜோதி போல நிலைபெருக்கி
அவஸ்தைகளற்ற
காய சித்தி கைகூடும்.

ஆகவே, உணவு குறையின், உயிராகிய
ஜீவ ஒளி மங்காதிருக்க,
நலம் பெறுதற்குரிய வழிகள் பலவும் தானாக வந்தமையும்.

அதனால், உண்டி எனும் உட்கொள்ளல்-
கழிவகற்றல் என்பதை அகற்றி
தன் ஊண் சுருக்கியவன்,

சாகா நிலையாகிய
பிறவாமையாலும்-
இறவாமையாலும், பேரின்ப நிறைவாலும்..

அண்ட சராசர இருள்வெளியை
ஆளும்.. பைரவ
சிவத்தை போல../
கண்டம் கருத்த
கபாலியாக
தான் ஆதி இறைவனாகலாம்!

என யோக ரகசியத்தை
தெளிவு செய்கிறார்
சித்தர் பெருமான்
திருமூல நாதர்.

https://t.me/truthsofsivayoga/6794
🙏ஆத்ம நன்றிகள்🌟
Photo from Raajan @ Singapore/Karur
தினமும் இந்த டீயை ஒரு கப் குடிங்க: அப்பறம் பாருங்க அதிசயத்தை

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத தன்மை செம்பருத்தி பூவிற்கு உள்ளது.

தினமும் செம்பருத்தி டீயில் தேன் கலந்து பருகிவந்தால் ஆரோக்கியமான உடலுக்கு ஏற்ற பல்வேறு ஊட்டச்சத்துகளை தருகின்றது.

செம்பருத்தி டீயை பருகிவதனால் உடலில் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

செம்பருத்தி டீ, இதயம் சுருங்கி விரிவதற்கு போதிய வலிமையைத் தருகிறது, இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது.
சூடான செம்பருத்தி டீ, ஒரு கப் காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிப்பதால் நல்ல பலனைக் காணலாம்.
செம்பருத்தி டீயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
ஒருநாளில் இரண்டு அல்லது மூன்று முறை செம்பருத்தி டீயைப் பருகுவதால், காய்ச்சலை அதிகரிக்கும் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
செம்பருத்தி டீயைக் கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்வதால் அல்லது இதனை உட்கொள்வதால், உடலில் உள்ள அணுக்கள் விரைந்து தூய்மைப்படுத்தப்படுகின்றன.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி போன்றவற்றைப் போக்க செம்பருத்தி டீயைப் பருகலாம்.
கர்ப்ப காலங்களில் செம்பருத்தி டீ பருகுவதால், ஹார்மோன்கள் சமச்சீராக இருக்க உதவுகின்றன, இதனால் கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது.
மனிதனின் ஆயுட்காலம் குறுகிக் கொண்டே போவதற்கான காரணங்கள் பின்வருவனவையே ஆகும்...

1. உடல் பயிற்சி இன்மை / உடல் உழைப்பின்மை
2. இரவில் கண் விழித்திருத்தல்
3. காலை உணவை தவிர்த்தல்.
4. ஆரோக்கியமற்ற உணவுகளின் மீதுள்ள நாட்டம்.
5. பணத்தை நோக்கிய ஓட்டம்
6. பழைய உணவுகளை சூடாக்கி சூடாக்கி உண்ணல்
7. கவலைகளை கட்டிக் கொண்டு இருத்தல்.

வாழ்வில் உணவை முதன்மை படுத்துங்கள். உணவை தரமாக்குங்கள். கண்டதையும் கொட்ட நம் உடல் குப்பை தொட்டி அல்ல.

நேரத்துக்கு உறங்குங்கள். இரவு உறக்கத்தின் பொழுது தான் நம் உடல் தன்னை தானே சீராக்குகிறது*
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சூடாக நீர் அருந்துங்கள்.

தினமும் ஒரு பழத்தையேனும் வெறும் வயிற்றில் உண்ணுங்கள்.

போதியளவு நீர் அருந்துங்கள்.

இளநீர் போன்றவை மிக நல்லது

பச்சையாக உண்ணக்கூடிய தேங்காய், ஊற வைத்த நிலக்கடலை, வெள்ளரிப் பிஞ்சு, கேரட், சின்ன வெங்காயம், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் முடிந்ததை தினமும் உண்ணுங்கள்.

காலை உணவை தவிர்க்காது ஆரோக்கியமானதை தேர்வு செய்து உண்ணுங்கள்.

அளவாக உண்ணுங்கள்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

தொடர்ந்து உட்கார்ந்து கொண்டு இருப்பதை குறையுங்கள்.

உடற்பயிற்சி உணவை போல் அத்தியாவசியமான ஒன்று.

மூன்று வேளை உண்பதால் இரண்டு வேளை அவசியம் 20 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள்.

இறுக்கமாக இருக்காது சிரித்து பேசி மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்கள் வட்டத்தை இயந்திரத்தோடு குறுக்கிக் கொள்ளாதீர்கள்.

அழுது வடியும் சீரியல்களை பார்த்து உங்கள் இதயத்தை வாட்டாமல், சிரிக்க வைக்கும் காட்சிகளை கண்டு களியுங்கள்

ஆளைக் கொல்லும் கவலைகளைப் புறந்தள்ளி ஆளுமையைத் தரும் தன்னம்பிக்கையை ஆடையாக அணியுங்கள்.
Photo from Raajan @ Singapore/Karur
👁️ புருவ பூட்டை
திறக்கும் சாவி :👇
*வாசி & மௌன* சாதனம் மட்டுமே.
(சித்தவித்தை = ஊர்துவகதி & நிஷ்டை)

கதி முறை தான் வாசி சாதனம்
நிஷ்டை முறை தான்
மௌன சாதனம்.

அனுபவநிலை
அனைத்தையும்
உணர்த்தும்.