வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது - காரணம் என்ன தெரியுமா?

பொதுவாக ஒரு மனிதன் சராசரி எட்டு மணி நேரம் தூங்க வேண்டியது அவசியமாகும். ஆனால் தற்போது உள்ள காலக்கட்டத்தில் வேலை பளுக்காரணமாக குறைவான நேரமே தூங்குகிறோம். அப்படி தூங்கும் போது சரியான திசையை தேர்வு செய்து தூங்கினால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

கிழக்கு திசையை குழந்தைகளுக்கான திசை என்றே சொல்லலாம். உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களை கிழக்கு திசையை நோக்கி தலை வைத்து படுக்க சொல்லும் போது அவர்களின் மூளை சுறுசுறுப்பாக செயல்படும். அவர்களின் நினைவாற்றல் நாளுக்கு நாள் அதிகரிப்பதை கண்கூடாகக் காணலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், கணக்கு சம்மந்தமான தொழிலில் ஈடுபடுபவர்கள் இந்த கிழக்கு திசையை நோக்கி தலை வைத்துப் படுப்பது நல்லது.

தெற்கு திசை நமக்கு அதிர்ஷ்டத்தை தேடித்தரக்கூடிய திசையாகும். தெற்கு திசையில் தலை வைத்து வடக்குப்பக்கம் கால் நீட்டி படுத்தால், கண்டிப்பாக நம்முடைய தூக்கம் மிகவும் நிம்மதியாக இருக்கும். மனக்குழப்பம், மனஇறுக்கத்துடன் இருந்தாலும் தெற்கு திசையை தேர்வு செய்து படுக்கும் போது நல்ல மாற்றத்தை காண முடியும். தெற்கு திசையில் தலை வைத்துப் படுக்கும் போது நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெற்கு திசை ஆயுளை அதிகரிக்கும் திசை என்றும் சொல்லலாம்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுக்கும் போது நல்ல பேர் மற்றும் புகழ் கிடைக்கும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறிக் கேட்டிருப்போம். இதற்கு புராணக்காரணம் மற்றும் அறிவியல் காரணம் உண்டு.

புராணக்காரணம் : ஒருமுறை சிவபெருமான் பார்வதி தேவியை பார்க்க வரும்போது விநாயகர் அவரை உள்ளே அனுமதிக்க மாட்டார். இதனால் கோபம் அடைந்து, சிவபெருமான் விநாயகர் தலையை துண்டித்து விடுவார்.

அதிர்ச்சி அடைந்த பார்வதிதேவி பூதகணங்களிடம் வடக்கு நோக்கி தலை வைத்துப் படுத்திருக்கும் யாருடைய தலையையாவது வெட்டி எடுத்துவர சொல்வார். அதுப்படியே பூதகணங்களும் வடக்குப்பக்கம் தலைவைத்துப் படுத்திருந்த யானையின் தலையை வெட்டி எடுத்து வந்து விநாயகருக்கு வைப்பார்கள். இப்படி புராணத்தில் நடந்திருக்கும் காரணத்தால், வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று கூறுவார்கள்.

அறிவியல் காரணம்:

பூமியில் வடக்கு திசை அதிகமாக காந்தசக்தி கொண்ட திசையாகும். எனவே, இந்தப்பக்கம் தலை வைத்துப் படுக்கும் போது காந்தசக்தி மூளையைத் தாக்கக்கூடிய தன்மையைக் கொண்டதால் வடக்குதிசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்று சொல்வார்கள்.
செப்பு பாத்திர இயற்கை வைத்தியம் :- :-)

செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன!!!
செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன.
ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது.
இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு உலோகத்திற்கு உண்டு என, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தங்கத்திற்குக் கூட, இது போன்ற திறன் கிடையாது.
இந்த நீர் மிகவும் தூய்மையாக இருப்பதால், நீரைப் பருகிய 45 நிமிடத்தில், செல்களால் உறிஞ்சப்படுகிறது.
உடலில், “மெலானின்’ என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிப்பதால், “விடிலிகோ’ என அழைக்கப்படும் வெண்படையும் குறைகிறது.
செப்பு பாத்திரங்கள் நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சமையல், தண்ணீர் சேகரிக்கும் பாத்திரமாக சாதாரணமாக எல்லார் வீடுகளிலும் பயன்படுத்த பட்டு வந்திருக்கிறது. அலுமினியம், எவர்சில்வர் போன்றவை செப்பின் பயன்பாட்டை குறைத்து விட்டது.
செப்பில் ஊற்றி வைக்கும் நீரில் ஓரிரண்டு துளசி இலைகளை போட்டு வைத்திருந்து குடித்தால் மிகவும் நல்லது.
உடம்பில் ஏதேனும் ஓரிடத்தில் செம்பு என்னும் உலோகமானது இருக்குமானால் அது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது.
பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது.
மற்ற உலோகஙகளுக்கு இல்லாத சிறப்பு செப்பக்கு மட்டும் கொடுக்கபட்டிருப்பது ஏன் என்றால் செப்பு தன்னை சுற்றி இருக்கும் பரபஞ்ச ஆற்றல் அனைத்தையும் தனக்குள் ஈர்க்கவும் வல்லது வெளியிடவும் வல்லது. இதனால் தான் நமது முன்னோர்கள் சமைக்க, அருந்த, பூஜிக்க என்று அனைத்து தேவைகளுக்கும் செப்பு பாத்திரங்களை பயன்படுத்தினார்கள்.
செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணஙகள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கும் பயன்படுத்தும் பொது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. எனவே பூஜை என்று வரும் போது செப்பு பாத்திரங்களை பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது.
தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும்.
தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள் அளவுக்கு அதிகமாக அடங்கியுள்ளது. கீல்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
நம் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியின் அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. இரத்த சோகையை எதிர்க்க இரும்பு மிக முக்கியமான கனிமமாகும். இதற்கு தாமிரமும் சிறிய அளவில் தேவைப்படும்.
கர்ப்ப காலத்தில் உங்களையும், உங்கள் குழந்தையும் பாதுகாக்க உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி விசேஷ சவாலை சந்திக்கும். அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய் படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.
தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும்.
தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான இரத்த ஓட்டம் கிடைக்கும்.
நம் முன்னோர்கள் அறிவியல் சார்ந்த விடயங்களையே நமக்கு சொல்லி இருக்கிறார்கள்.அவர்கள் வழி நடப்போம்,. :-)