வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
கலிக்கம் பயன்கள்
https://youtu.be/4NNdVvTOo24?si=Gi3TQXbe-ga0JnSH
உண்ணக்கூடியது எதுவோ?
*காயும், பழமும்.*

உண்ணக்கூடாதது?
*வறுத்ததும், பொரித்ததும்.*

பருகக்கூடியது எதுவோ?
*கூழும், கஞ்சியும்*

பருகக்கூடாதது?
*பாலும், தயிரும்*

சேர்க்கக்கூடியது எதுவோ?
*இஞ்சியும், மிளகும்.*

சேர்க்கக்கூடாதது?
*மிளகாயும், வெங்காயமும்.*

சமைக்கக்கூடியது எதுவோ?
*தாணியமும், பயிறும்.*

சமைக்க்கூடாதது?
*பருப்பும், இறைச்சியும்.*

தவிர்கக்கூடியது எதுவோ?
*செருப்புடன் நடப்பது.*

தவிர்கக்கூடாதது?
*நடப்பதும், பளு தூக்குவதும்.*

தேவையானது?
*சூரிய ஒளி*

அவசியமானது?
*எண்ணெய் தேய்த்து குளிப்பது.*


முக்கியமானது ?
*விளக்கொளி தியானம்*

புரதசத்துக்கு?
*கொத்தவரங்காய்*

மாவுச்சத்துக்கு?
*அரசாணிக்காய்*

கொழுப்புசத்துக்கு?
*கொப்பரைத்தேங்காய்.*

விட்டமினுக்கு?
*முருங்கை*

மினரலுக்கு?
*கத்திரிக்காய்*

நார்சத்துக்கு?
*புடலை*

நீர்ச்சத்துக்கு?
*வெண்பூசணி*

பிரசருக்கு?
*வெண்டைக்காய்*

கொலஸ்டிராலுக்கு?
*கோவைக்காய்*

தைராய்டுக்கு?
*எலுமிச்சை*

சுகருக்கு?
*பீர்க்கங்காய்*

ஹார்ட்டுக்கு?
*வாழைக்காய்*

நோய்களுக்கு?
*காய்கறி*

காய்கறிக்கு?
*விவசாயம்*

💎💫💎💫💎💫💎
1. காலையில் உரிய நேரத்தில் நீங்கள் காலை உணவு சாப்பிடாத போது வயிறு பயப்படுகிறது.

2. 24 மணிநேரத்தில் 10 டம்ளர் தண்ணீர் கூட குடிக்காத போது சிறுநீரகம் பயப்படுகிறது.

3. இரவு 11 மணி வரை தூங்காமல் விழித்திருந்து, சூரிய உதயம் ஆகும்போது விழிக்காதிருக்கும் போது பித்தப்பை பயப்படுகிறது.

4. ஆறிப்போன, பழசாகிப் போன உணவுகளைச் சாப்பிடும் போது சிறுகுடல் பயப்படுகிறது.

5. நிறைய வறுத்த மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடும் போது பெருங்குடல் பயப்படுகிறது.

6. சிகரெட் மற்றும் பீடி போன்ற புகை, அழுக்கு மற்றும் மாசடைந்த சுற்றுச்சூழல் காற்றை நீங்கள் சுவாசிக்கும்போது நுரையீரல்கள் பயப்படுகின்றன.

7. அதிகப்படியான வறுத்த உணவு, ஜங்க், துரித உணவுகளை உண்ணும் போது கல்லீரல் பயப்படுகிறது.

8. அதிக உப்பு மற்றும் அதிக கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைச் சாப்பிடும் போது இதயம் பயப்படுகிறது.

9. சாப்பிடச் சுவையாகவும் மற்றும் தடையின்றி கிடைக்கிறது என்பதாலும் அதிக இனிப்புப் பண்டங்களை வெளுத்து வாங்கும்போது கணையம் பயப்படுகிறது.

10. இருட்டில் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தில் வேலை செய்யும்போது கண்கள் பயப்படுகின்றன.

11. எதிர்மறை (நெகடிவ்) எண்ணங்களைச் சிந்திக்க ஆரம்பிக்கும் போது மூளை பயந்து போகிறது.

உங்கள் உடலின் பாகங்களில் அக்கறை கொள்ளுங்கள். அவற்றை பயமுறுத்தாதீர்கள். இந்த உடல் பாகங்கள் அனைத்தும் சந்தையில் எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் மிகவும் விலை உயர்ந்தவை. அநேகமாக உங்கள் உடலும் ஏற்றுக் கொள்ளாது. எனவே உங்கள் உடல் பாகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Media is too big
VIEW IN TELEGRAM
சைவ விருந்து வைத்தால் கோபித்துக் கொள்பவர்கள் கட்டாயம் கேட்க வேண்டியது...!
கர்மாவின் வகைகள்

சஞ்சித கர்மா:-
பல கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை தீவினை ஆகிய மொத்தக் கர்மாக்கள்.


பிராரப்த கர்மா:-
இது சஞ்சித கர்மாவின் ஒரு சிறு பருதிபாகும்.
ஒவ்வொரு ஆன்மாவும் தற்போதைய பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டிய நல்வினை-தீவினை கர்மாக்கள்.

ஆகாமிய கர்மா :-
ஓர் ஆன்மா தற்போதைய பிறவியில், புதியதாக சேர்க்கும் நல்வினை - தீவினை தொகுப்புகள்.
ஒவ்வொரு பிறவியின் முடிவிலும் ஆகாமிய கர்மாக்கள் சஞ்சித கர்மாக் குவியலுடன் இணையும்.