வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
https://youtu.be/NRKwC0udRwA
மரபு வழி சத்தான
உணவான "கருங்குறுவை சாதம்" எனும் கருப்பு கவுனி அரிசியின் உணவின் மருத்துவ நலன்கள்
வாதம் வைத்தியம்
Photo
Free Herbal Workshop &
Siddha Treatment camp

Date : 29 Jan 2023 Sunday
Time :10am to 5pm
Place : Mamsapuram 626110.

அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
ஆத்ம நமஸ்காரம்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே..
சித்த மருத்துவ
பயிலறங்கம் &
மருத்துவ முகாம்

https://youtu.be/mQZLENvDP5o

வருகிற 29-01-2023 ஞாயிறு அன்று ஞானபிதா பாரம்பரிய மூலிகை மருத்துவகத்தின் சார்பாக மம்சாபுரம் பக்கத்தில் காந்திநகர் ஊர் அருகில் உள்ள நமது "இயற்கை வயல்"லில் மருத்துவ பயிலறங்க
நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் செய்முறையாக இதுவரை யாரும் செய்யாத ஹேர் ஆயில் முறையும்
&
சிவனார் வேம்பு
குழித்தைல முறையும்
&
சோற்றுக் கற்றாழை ஜெயநீர் செய்முறையும் &
முக்கிய மருத்துவ முறைகளும் சொல்லிக் கொடுக்கப்படும்.

காலை 10 மணி முதல்
மாலை 05 மணி வரை
நிகழ்ச்சி நடைபெறும்.

நிகழ்ச்சியின் போது காலை முதல் மாலை வரை ஆஸ்த்துமா நீங்கும் ஒருவகை துளசியின் மூலிகை காப்பியும்
மதியம்
அறுவை உணவும்
இலவசமாக கொடுக்கப்படும்.

இனி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை
Month Last Sunday
தொடர்ந்து "இலவச மூலிகை பயிற்சி" Free Herbal Workshop நடைபெறும்.

வைத்தியர் மட்டுமல்லாது சித்தமார்க்க வழி பயணிப்போர் யோகிகள் சித்தவித்தியார்த்திகள்
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

நிகழ்விடத்தில்
இயற்கை வேளாண்மையில் தயாரான நாட்டு செக்கு தேங்காய் எண்ணெய் மற்றும் அதிலிருந்து தயாரித்த ஹேர் ஆயில் அரை லிட்டர் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் எங்களிடம் கிடைக்கும்.

நிகழ்விற்கு வருகை
தர விருப்புபவர்கள்
*வருகை உறுதி* யை
எமது தனி வாட்ஸ்அப்
எண்ணில் +91 9345168098
தெரிவிக்கவும்.

ஆத்ம நன்றிகள்

பிரம்மஸ்ரீ.
கோவிந்தன்
+91 9345168098

https://www.facebook.com/govindhan.govindhan.9256

https://youtu.be/LuFofRLBaW4

சிவானந்தா
சித்த வைத்திய சாலை
&
ஞானபிதா பாரம்பரிய
மூலிகை மருத்துவ
ஆராய்ச்சி மையம்
(காந்திநகர் அருகில்)
மம்சாபுரம் பேரூராட்சி,
ஶ்ரீ வில்லிபுத்தூர் Tk.
விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம் City.
Tamil Nadu 626110, India
வாதம் வைத்தியம்
Photo
🙏💱 *ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் கம்பு! சிறுதானியம் கம்பை மிஸ் செய்யாதீங்க* 💚❤️

விருந்து என்றால், மேற்கத்திய உணவு வகைகளை விரும்பும் இளைய தலைமுறைக்கு, இந்த சிறுதானியத்தை கட்டாயம் கொடுங்கள். சிறுதானியத்தில் ஒன்றான கம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தொடர்ந்து கம்பு உணவை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். பலவேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்ட கம்ப்பில், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, பி காம்ப்ளெக்ஸ், கால்சியம், மெக்னீசியம்என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.

கம்பில் உள்ள சத்துக்கள்

கம்பில் உள்ள அதிக அளவிலான புரத சத்து, உடலிற்கு வலுவளித்து ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. 100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளது. புரதச்சத்து இந்த அளவு வேறு எந்த தானியத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கம்பு உணவுகள்

குறைந்த அளவு கொழுப்பு கொண்ட கம்பைக் கொண்டு செய்யப்படும், கம்மங்கூழ், புட்டு, ரொட்டி, தோசை, அவல் என விதவிதமான பதார்த்தங்களை சாப்பிடுங்கள்.

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் கம்பு

கம்பில் உள்ள வளமான நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்து, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்.எனவே உடல் உடல் எடையினை குறைக்க விரும்புவார்கள் தினசரி கம்பு சேர்த்து கொள்வது நல்லது.

உடல் சூட்டைத் தணிக்கும் கம்பு

நமது இன்றைய உணவுமுறை காரணமாக உடல் சூடு பிரச்சனை அதிகரித்திருப்பதால், பல்வேறு நோய்கள் நம்மை பாதிக்கின்றன. கம்பு, உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து உணவில் கம்பு சேர்த்து வந்தால்உடல் சூடு தணியும்என்பது குறிப்பிடத்தக்கது.

மலச்சிக்கலை போக்கும் கம்பு

இன்று பலருக்கும் இருக்கும் மலசிக்கல் பிரச்சனையைத் தீர்க்க, கம்பில் உள்ள நார்சத்து அவசியமானதாகும்.

நீரிழிவு நோயாளிக்கு சிறந்தது கம்பு

குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் (glycemic index) கொண்ட கம்பை தொடர்ந்து பயன்படுத்தினால், நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

தினசரி உணவில் கம்பு எடுத்துக் கொள்ளலாமா?

கம்பு தினசரி சாப்பிட்டால், உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால், வாரம் இரண்டு நாட்கள் மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும். கம்பஞ்சோறு, தினை சாதம், கேழ்வரகு அடை, வரகரிசி, சோளம், குதிரைவாலி என்று சிறு தானியங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடப் பழகினால், வாழ்க்கை முழுக்க ஆரோக்கியமாக இருக்கலாம்.
சனிக்கிழமை வரும் தை அமாவாசை: முன்னோர்களின் ஆசி கிடைக்க விரதம் இருந்து செய்ய வேண்டியவை...*

ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் என வரையறுத்து அறிவுறுத்தியுள்ளது சாஸ்திரம். அமாவாசை, தமிழ் மாதப் பிறப்பு, கிரகணம், புரட்டாசி மகாளய பட்ச புண்ணிய காலமான 15 நாட்கள் என மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்யவேண்டும். மாதாமாதம் அமாவாசை வந்தாலும், ஒரு வருடத்தில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்களிலேனும் மறக்காமல், முன்னோர் எனப்படும் பித்ரு ஆராதனை செய்யவேண்டும்.இந்தநாளில், தர்ப்பணம் முதலான சடங்குகள் செய்து, நம் முன்னோரை ஆராதித்து வணங்கவேண்டும். எள்ளும்தண்ணீரும் முன்னோருக்கு விட்டு, தர்ப்பண மந்திரங்களைச் செய்யவேண்டும். தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். நமக்கு ஆசீர்வாதம் செய்வதற்காகக் காத்திருப்பார்களாம் பித்ருக்கள். எனவே, இந்தநாளில் மறக்காமல் முன்னோர் வழிபாட்டைச் செய்வோம். இந்த ஆண்டு தை அமாவாசை 21-ம் தேதி (நாளை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இந்தநாளில், முன்னோரை ஆராதித்து, பூஜைகள் செய்து, நம் வேண்டுதலை அவர்களிடம் வைத்து முறையிடுவோம். அவர்களை நினைத்து நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குவோம். முக்கியமாக, தயிர்சாதப் பொட்டலம் தருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.இதனால் மகிழ்ந்த முன்னோர்கள் கருணையுடன் நம்மை ஆசீர்வதிப்பார்கள். நம் வீட்டின் தரித்திரங்களெல்லாம் விலகிவிடும். இல்லத்தில் இருந்த தீயசக்திகள் தெறித்து ஓடிவிடும். கடன் தொல்லையில் இருந்து மீள்வோம். கவலையும் பயமும் காணாமல் போகும் என்பது உறுதி! தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல ஏழைகளுக்கு தானம் அளிப்பதும் சிறப்பானது. கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் சிறப்பானது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.நமது மூததையர்கள், முன்னோர்களை நாம் எப்போதும் மறக்கக்கூடாது. தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் தரவேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும். நம்முடைய முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

🙏🌹🙏🌷🙏
*இதுவரை யாரும் சொல்லி தராத 35 வகையான காய்கறிகள் பயன்படுத்தி மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ... 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

*காய்கறிகளின் மந்திரி சபை*

💺 *பிரதமமந்திரி* :
💪 அரசாணிக்காய்
🌞 தசை மண்டலம்
💺 *உள்துறை அமைச்சர்* :
👇 பீர்க்கங்காய்
🌞 நிணநீர் மண்டலம்
💺 *வெளியுறவு துறை அமைச்சர்* :
👆 வெண்பூசணிக்காய்
🌞 ஜீரண மண்டலம்
💺 *பொருளாதார அமைச்சர்* :
தேங்காய்
🌞 எலும்பு மண்டலம்
💺 *போக்குவரத்து அமைச்சர்*:
👊 வாழைக்காய்
🌞 இரத்த ஓட்ட மண்டலம்
💺 *கல்வித்துறை அமைச்சர்* :
கொத்தவரங்காய்
🌞 நரம்பு மண்டலம்
💺 *சுகாதார அமைச்சர்* :
👋 கோவைக்காய்
🌞 தோல் மண்டலம்
💺 *நீர்வளத்துறை அமைச்சர்* :
சுரைக்காய்
🌞 சிறுநீரக மண்டலம்
💺 *மின்சாரத்துறை அமைச்சர்* :
👍 முருங்கைக்காய்
🌞 சுவாசமண்டலம்
💺 *பாதுகாப்பு அமைச்சர்* :
👌 எலுமிச்சை
🌞 நாளமிள்ளா சுரப்பி மண்டலம்
💺 *மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்* :
👏 வெண்டைக்காய்
🌞 நாளமுள்ள சுரப்பி மண்டலம்
💺 *தகவல் தொடர்புத்துறை அமைச்சர்* :
புடலங்காய்
🌞 புலன்கள் மண்டலம்

🙏 *இவர்கள் இறைவனால் மக்களின் நலனுக்காக நியமிக்கப்பட்டவர்கள்*.
😈 *மருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது*