வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
5_6337125027208496821.pdf
ஐம்பெரும் பூத கூறுகளின் தொடர்புகள் அகத்திலும் - புறத்திலும்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
DOC-20221204-WA0118..pdf
7.6 MB
மூச்சுகலை -
யோகிகள் கடைபிடித்த சுவாச அறிவியல் 👌
https://t.me/truthsofsivayoga/9731
Part 2_Breathing Science on Yogicway book
Karuvooraan
குரலொலி நூல் :

"சுவாசமே வாழ்க்கை"
Part 2_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9753

*மூச்சுகலை*
(யோகிகள் கடைபிடித்த
சுவாச அறிவியல்)
நூலாசிரியர்.
ராமசரக்கா யோகி

Part 1_Breathing Science on Yogicway Tamil Voice book 👇
https://t.me/truthsofsivayoga/9734

Voice book Tamil intro : 👇
குரலொலி நூல் அறிமுக பகுதி : 👇
https://t.me/truthsofsivayoga/9733

தமிழ் மின்னூல் 👇
https://t.me/truthsofsivayoga/9731
https://youtube.com/shorts/ynIYdUqL1GQ?feature=share

சுண்டைக்காயின் மகிமை.
(The glory of
Turkey Berry)

கசப்பு சத்துள்ள உணவுப் பொருளை நாம் அவசியம் வாரம் ஒரு முறையாவது
சாப்பிட்டு வர வேண்டும்,

சுண்டைக்காய் -
உடலில் சேரும் கலப்பட எண்ணெய்களின்
கழிவுகளை நீக்குவதுடன்
உடல் நலனையும் நெடுநாள் காக்கவல்லது.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
https://youtu.be/o4IE9D58uGk

அருட்பெருஞ்ஜோதி🔥
🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂
*தைப்பூச ஜோதி சாதனா*
🧎🧎‍♀🧎🧎‍♀🧎🧎‍♀ 🧎🧎‍♀

*3 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்*
👉 *23,24,25* /டிசம்பர் /2022
👉 *திருவண்ணாமலை*

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
👉பயிற்சி கற்றுக்கொண்டு *48 நாட்கள்* தங்கள் இல்லத்திலேயே சாதனா மேற்கொண்டு *தைப்பூச விழாவில் சேவை செய்து
(*பிப்ரவரி 5,6,7* 2023 ) நிறைவு செய்ய வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👉*ஜோதி தியானம்*
👉*மகாமந்திர ஜெபம்*
👉*ஞான மூலிகை இரகசியங்கள்*
👉*அன்னதான சேவை*
👉*அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்*
🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂
*போன்ற பயிற்சிகள் 48 நாட்கள் ஜோதி சாதனா எவ்வாறு செய்வது என்று கற்றுத்தரப்படும்*
🌕🌕🌕🌕🌕🌕🌕🌕
*ஜோதி சாதனா பயிற்சி தொடக்கம்*
23,24,25 வெள்ளி,சனி,ஞாயிறு /2022

👉22 வியாழன் இரவு உணவிற்கு வந்துவிட வேண்டும்

👉 *இடம் - வள்ளலார் சன்மார்க்க சங்கம், வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை, திருவண்ணாமலை*
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
*பயிற்சியின் விதிமுறைகள்*
👉கற்றுக் கொண்ட பயிற்சிகளை டிசம்பர் 26 / 2022 முதல் - பிப்ரவரி 4 / 2022 வரை இல்லத்திலும், பிப்ரவரி 5,6 வடலூர் தைப்பூச விழாவிலும், கடைபிடித்து பிப்ரவரி 7 ம் தேதி திருவறை தரிசனத்தில் நிறைவு செய்ய வேண்டும்

👉சைவ உணவை ஏற்றுக்கொண்டு ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்

👉பயிற்சிக்கு கட்டணம் கிடையாது, 3நாட்கள் தங்குவதற்கு இடம், உணவு வழங்கப்படும். ரூ1000 மதிப்புள்ள வள்ளலாரின் சன்மார்க்க நூல்களுக்கான கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்

👉 *பயிற்சிக்கும் & சேவைக்கும் நன்கொடை ஏற்றுக் கொள்ளப்படும்*
📲📲📲📲📲📲📲📲
*முன்பதிவு அவசியம்*
+91 99526 04433
+91 82484 92553
+91 97914 50868

vallalartrust@gmail.com
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்.
_*துளசி செடி வழிபாடு*_


துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றினால் உங்களுடைய வீட்டில் செல்வ வளம் ஊற்றெடுக்கும். ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும் அளவில்லாமல் சேரும்.

வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சத்தை அளவில்லாமல் பெறுவதற்கு ஒரு சில வழிபாட்டு முறைகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். பின் சொல்லக்கூடிய வழிபாட்டு முறைகளில் உங்களால் எதை பின்பற்ற முடியுமோ ஏதாவது ஒரு வழிபாட்டை பின்பற்றினால் கூட வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். சந்தோஷம் அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும். பண கஷ்டத்தை போக்கக்கூடிய பலன் தரும் வழிகள் இதோ உங்களுக்காக.

துளசி வழிபாட்டிற்கு, சொல்லக்கூடிய எத்தனையோ மந்திரங்கள் நமக்கு சாஸ்திரத்தில் உள்ளது. ஆனால் துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றும் போது, கண்ணா, கிருஷ்ணா, கோபாலா, மாதவா, யாதவா, என்று சொன்னால் மிக மிக நல்லது.  மந்திரங்களை விட இந்த வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். துளசி செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றும் போது இனி இந்த வார்த்தைகளை நீங்களும் மனதார சொல்லுங்கள் நல்லது நடக்கும்.

கோவிலுக்கு சென்றால் அங்கு இருக்கும் மூலவரை மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து நாம் வழிபாடு செய்கின்றோம். கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சன்னிதானத்திற்கு, நாம் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. கோவிலில் ‘சோமாஸ் கந்தர்’ என்ற சன்னிதானம் இருக்கும். இதில் சிவன் பார்வதிக்கு நடுவே முருகர் அமர்ந்திருப்பார். எந்த கோவிலுக்கு நீங்கள் சென்று தரிசனம் செய்தாலும், இந்த சோமாஸ் கந்தர் சன்னிதானத்தை பார்த்தால் அந்த இடத்தில் நின்று குடும்ப நன்மைக்காக வேண்டிக் கொண்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது ஐதீகம்.

வீட்டில் வியாழக்கிழமை தோறும் குபேரரை நினைத்து விளக்கு ஏற்றுங்கள். பூஜை அறையில் ஒரு குபேரரது சிலையை வைக்கலாம். அது உங்களுக்கு பண வரவை கொடுக்கும். கூடவே காமதேனும் கற்பக விருட்சம் அம்பாள் சேர்ந்தது போல கட்டாயமாக ஒவ்வொரு வீட்டு பூஜை அறையிலும் ஒரு திருவுருவப்படம் இருக்க வேண்டும். இது பெரும்பாலும் சுவாமி படங்கள் விற்கும் கடையில் கேட்டாலே தயார் செய்து கொடுத்து விடுவார்கள். அதை வாங்கி பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த காமதேனு கற்பக விருட்ச திருவுருவப்படத்திற்கு பூஜை செய்ய வேண்டும். இந்த படத்தில் இருக்கும் மகாலட்சுமி உங்களுக்கு செல்வ வளங்களை அள்ளி அள்ளி கொடுப்பதாகவும், நீங்கள் அதை கை நிறைய வாங்கிக் கொள்வதாகவும் மனநிறைவோடு வெள்ளிக்கிழமை பூஜை செய்வது வீட்டிற்கு வருமானத்தை இரட்டிப்பாக கொடுக்கும்.

உங்களால் முடிந்தால் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ யாருக்காவது இந்த காமதேனு கற்பக விருச்ச படத்தை பரிசாக அளிக்கலாம். அதை பரிசாக பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலி. அடுத்தவர்களுக்கு ஐஸ்வர்யம் பெருக வேண்டும் என்று இதை பரிசாக கொடுப்பவர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.

‘ஓம் ரீங் வசி வசி, தனம் பணம் தினம் தினம்’ இந்த வார்த்தைகளை தினமும் சொல்லுங்கள். பணம் உங்களுக்கு வசியம் ஆகும். தினமும் சொல்ல முடியவில்லை என்றாலும் வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி வைத்துவிட்டு இந்த வார்த்தைகளை சொல்லும்போது பண வசியம் ஏற்படும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும்‌. மேல் சொன்ன விஷயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.✍🏼🌹
*'சுவை' எனும் 'நஞ்சு'* :

*"உங்கள் ஆரோக்கியம் உங்கள் நாவு தேடும் சுவையால் கெடும்".*

*இம்முறை தமிழகப் பயணத்தில் நான் பார்த்து மிகவும் அஞ்சிய விடயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.*

*அது வேறொன்றும் இல்லை எங்கு நோக்கிலும்*
*உணவு, உணவு, உணவு.*

*தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது.*

*எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌*

*அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.*

*உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவை ஏளன உணவு பொருளாகப் பார்க்கப்படுகிறது. பல உணவகங்களில் இவை இல்லை.*

*ரொட்டி வகைகளும், கறி வகைகளும் மட்டுமே இரவு உணவில் பெரிதும் பரிமாறப்படுகிறது*.

*மதிய வேலைகள் கூடச் சோற்றை விடப் பிரியாணி வகைகள், பரோட்டா வகைகள் அதிகம் காணப்படுகிறது.*

*இந்த வரிசையில் காலை உணவு மட்டும் பெரிதும் பாதிக்கப்படவில்லையென நம்புகிறேன்.*

*விரைவில் அதனையும் ஓட்ஸ், பர்கர், சாண்ட்விச், நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளால் நிரப்பப்படலாம். தொடர் தொலைக்காட்சி விளம்பரங்கள் அதனைத் தான் புகுத்திக் கொண்டிருக்கிறது.*

*ஒரே ஒரு வகை உணவு பரிமாறப்பட்ட என் சொந்தங்கள் வீட்டில் அனைத்திலும் இரண்டு மூன்று வகை சேர்த்து பரிமாறப்படுகிறது.*

*இந்த மாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் கடந்த ஐந்து வருடங்களில் நடந்தேறியிருக்கிறது.*

*அதனை அவர்கள் உணரவே இல்லை. யூடியூப் போன்ற வலையொலிகளின் உணவு நிகழ்ச்சிகள் இதற்குக் காரணம் என்று சொல்லலாம்*.

*ஒரு கடையில் 99 வகை பரோட்டாக்கள் கிடைக்குமென்ற பலகையைப் பார்த்து இதுவரை குழம்பிக் கொண்டே இருக்கிறேன்.*

*ஐஸ்கிரீமை கூடப் பொரித்து தின்கிறார்கள். சிஸ்லர் என்னும் நெருப்பு கல்லில் ஐஸ்கிரீம் பரிமாறப்படுகிறது. ஏன்.*

*உலகில் உள்ள அனைத்து வகை உணவுகளும் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. பிசா(சு), சவ(ம்)ர்மா போன்ற கடைகள் எல்லா ஊரிலும் தென்படுகிறது.*

*திக்கு எங்கிலும் பேக்கரி, அதிலும் விற்கப்படும் பொருட்கள் அங்குச் செய்வதில்லை, யாரோ ஒருவர் செய்து அனைத்திற்கும் வழங்குகிறார்.*

*சுவை என்பது கூடப் பழைய சுவை இல்லை, அதிகப்படியாக டால்டா கலப்பு போன்றவை இருக்கிறது. நாக்கில் வைத்தவுடன் கரைய வேண்டும்.*

*ஊரில் எவனுக்கும் பல் இல்லை கடிக்கவேண்டிய அவசியமில்லை என்கிறது அடுமனை. கடினமாகக் கடிக்கும் பொருள்கள் விற்பனையில் இல்லை.*

*இனிப்பு வகைகள் கேக்கு வகைகள் பெருகிவிட்டது. இனிப்பு பெருகிவிட்டு நிலத்தில் பல் மருத்துவமனையும் பெருகி இருக்கிறது.*

*அண்ணாச்சி கடைகளிலும் பாய் கடைகளிலும் தமிழ் பொருள்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வட இந்திய பொருள்கள்தான் விற்பனைக்கு இருக்கிறது.*

*ஏன் தின்பண்டங்கள் கூடக் கல்திராம்ஸ் பாக்கெட்டுகள் தான் இருக்கிறது. ஒரு காலத்தில் தூ என்று துப்பிய சுவை. இன்று விமான நிலையம் முதல் பொட்டிக்கடை வரை மக்களுக்கு வழக்கப்படுத்தி விட்டனர்.*

*இதற்கு அடிப்படைக் காரணம் பெருகிவரும் D-MART போன்ற கடைகள் தான். அவர்கள் பெருமளவில் கொள்முதல் செய்தால் மட்டுமே குறைந்த விலைக்குக் கொடுக்க முடியும். ஆகையால் அவர்கள் பெரும் வணிக நிறுவனங்களின் பொருட்களைத் தான் விற்கிறார்கள்.*

*அதன் நாகரீக தோற்றத்தைப் பார்த்து. அங்குச் சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்று மக்கள் செல்லத் தொடங்குகிறார்கள்.*

*அந்த மக்களைத் தங்கள் கடைக்கு அழைக்க அண்ணாச்சிகளும் அதே பொருளை விற்பனை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.*

*இதனால். தமிழ் பொருட்களை உற்பத்தி செய்த பல குடும்பங்கள் அழிந்து இருக்கும். எங்கள் ஊரில் கூட மெட்ரோ என்ற பெரும் கடை மற்ற அனைத்தையும் உண்டு வளர்கிறது.*

*100 ரூபாய் டிக்கெட்டை வாங்கி நான்கு மணி நேரம் செல்லும் ரயில் பயணத்தில் பத்துக்கு மேற்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது. மக்கள் அதற்கு நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்கிறார்கள்.*

*உணவிற்காகச் செய்யும் செலவு வீண் செலவாக யாரும் கருதுவதில்லை. அதுதான் இந்த வணிகத்தின் அடிப்படை மூலதனம்.*

*உணவை மக்கள் முதலில் விழி வழி உண்கிறார்கள், கண்களால் தின்கிறார்கள். பிறகு கண்டதையெல்லாம் வாங்கி பிடித்ததை தின்றுவிட்டு பிடிக்காததை தூக்கி எறிகிறார்கள்.*

*முன்பெல்லாம் வெளியே செல்லும் நேரத்தில் வீட்டுக்கு வந்து சமைக்க நேரம் இல்லாத காரணத்தினால் வெளியே உணவருந்தும் பழக்கம் இருந்தது.*

*ஆனால் இப்போது எந்த நேரத்திலும் அதனை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து விடுமென்று பட்டி தொட்டிகளில் எல்லாம் swiggy zomoto தூதுணவு வந்துவிட்டது.*

*இங்குப் பசி பேசப்படுவதில்லை, ருசி மட்டுமே பேசப்படுகிறது,*
*ஒவ்வொரு நிலப்பகுதியின் உணவும் அந்தந்த நில சூழலுக்கு ஏற்ற மாதிரி உருவாக்கப்பட்டது.*

*ஆனால் அவை அனைத்தையும் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்ப்பது. மனிதர்களின் மரபணுவைச் சிதைக்கும் பெரும் போர்.*
*அறுசுவை உணவு கூட அடுத்த நாள் மலம் ஆகிவிடும் என்று கமலஹாசன் ஒரு பேட்டியில் கூறியது எனக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வருகிறது.*

*தமிழர்கள் காலம் கடந்துதான் தமிழ் மொழியில் கலந்திருக்கும் பிற மொழி சொற்களை அகற்ற போராடினார்கள், அது இன்றளவும் வெற்றி பெறவில்லை என்பதனை ஊரெங்கும் இருக்கும் எழுத்து பலகையும், மக்கள் பேச்சும் தெளிவுபடுத்துகிறது.*

*தமிழ்மொழி அழிகிறது என்பதுதான் உண்மை. அதேபோல் அந்நிய உணவால் தமிழ் இனம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும்.*

*சுவை எனும் நஞ்சிலிருந்து வெளியேறிப் பசி எனும் இயல்புக்கு மருந்திடும் தமிழர் உணவு வகைகளுக்குத் திரும்ப வேண்டும்.*

*அந்நிய உணவுகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.*

*இது நடக்காவிட்டால். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த பத்து வருடங்களில் ஊரெங்கும் புற்றுநோய் மருத்துவமனை பெருகிவிடும்.*

*இளம் வயதில் மரணம், எடை பருமனான குழந்தைகள், மாரடைப்பு என அனைத்தும் தலைவிரித்தாடும்.*

*(சிந்திக்க வைத்த பதிவு)*

💎
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்?...

பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

https://youtu.be/DuM9c_3wwMg

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

🍀கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

🍀இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

🍀சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

🍀இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

🍀செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

🍀முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

🍀சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

🍀கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

https://youtu.be/k43vhadI7mU

குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
நல்லதை பகிர்வோம்...
நன்றிகள் 👍🙏
வாதம் வைத்தியம்
Photo
*இயற்கையின் மடியில் ஒரு நாள் - பண்ணை சுற்றுலா...*

*இயற்கையை நேசிக்கும், விவசாயத்தை விரும்பும் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்போம் ஒரு நாள் முழுதும்.*

*நாள்:* டிசம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை

*இடம்:* செம்மேடு, கோயம்புத்தூர்

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

🍃 இயற்கை எழில் மிக்க வெள்ளியங்கிரி மலை சாரலில் உள்ள பண்ணை பார்வையிடல்

🏊‍♂️ பண்ணையில் ஓர் ஆனந்த குளியல்

🌙 ஆதியோகி திவ்ய தரிசனம்
(A powerful video imaging show)

🥗 நா ஊறும் நலம் தரும் இயற்கை உணவுகள்

⛹🏻‍♂️ மீண்டும் பள்ளிக் காலம் திரும்பும் விளையாட்டுகள்

பதிவு கட்டணம் ₹ 300

*முன்பதிவு அவசியம்*

சுற்றுலாவில் கலந்து கொள்ள https://forms.gle/mv37tYmv3Vv8ojtDA
இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும்
அல்லது
83000 93777, 94425 90077
என்ற எண்ணை அழைத்து உங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும்.

*விவசாய தகவல்களை தொடர்ந்து பெற கீழ்க்கண்ட லிங்கை https://bit.ly/3M31bLD பயன்படுத்தி உங்கள் மாவட்ட whatsapp குழுவில் இணைந்து கொள்ளவும்.*

நன்றி
மண் காப்போம் இயக்கம்

ஆரோக்கிய வாழ்விற்கு தாய் மண் காக்கும் விவசாயமே தீர்வு!
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌞RJN🌙 @_Singapore / Karur)
📣♦️🗣💬🔊 🌷
💫சித்த வித்தை
Q & A # 10 :👆
https://t.me/truthsofsivayoga/9079
ஐயம் தெளிதல்
21 August 2022 👆

அன்றாட
பிழைப்பே சிக்கலாய்,
பற்றாக்குறையாய்
இருக்கும் போது..
யோக - ஞான
ஆன்ம தேடுதலில்
ஈடுபடுவது தேவையா!?

தேவைதான் எனில்
அப்பாதையில்
முன்னேறி செல்வது
பற்றி கூறுங்கள் ஐயா.

⁉️ஐயம்தெளிதலின்
🗣️தொகுப்பு 👇
https://t.me/truthsofsivayoga/9079

🙏🌷🙏

Q & A # 9 : 👇
@ 10.7.2022

https://t.me/truthsofsivayoga/8706
ஒரு வாசி யோகியர்
உணவு முறை எப்படி நடைமுறையில்
கடை பிடிக்க வேண்டும், குறிப்பாக நுரையீரல் / சுவாசகோச
மாசு இல்லாமல்
இருக்க உபாயம் அறிய செய்யுங்கள் அய்யா 🙏😊