வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
👌அற்புதமான..
AVVAI - ஔவை
பாரம்பரிய
ORGANIC 👍🏻
சித்தர் மருத்துவ மூலிகை பற்பொடியின்
முக்கியத்துவம் பற்றிய

https://t.me/truthsofsivayoga/1479

குரலொலி பகிர்வு
👆👌👍🏻
திருச்சி யில்..
சோமரசம்பேட்டை
பிரம்மஶ்ரீ. பாலு
+919865851934
அவர்களிடமும்..

சிங்கப்பூரில்
Dolphin Impex லும்
கிடைக்கிறது.
+65 84400602

🙏🌿🙏
More mfrs. info :
https://avvainaturals.com
*Avvai Naturals*
(MARAIVAZHI VAITHYASALAI)
3/2, Near Sriguru Institute of Technology,
Varatha Aiyankar Palayam, Kondaiyam Palayam.PO,
Saravanampatti via,Coimbatore,
TN 641110.
Phone : +918344221 222. +919952535444.
Email : avvainaturals@gmail.com
உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.

உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.

வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு.

தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு.

சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு.

கையில் பணம் இருந்ததால் பூச்செடிகள் நடு.

உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு.

எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு.

பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.

சந்தோஷமாக இருக்கும்போது வேப்ப மரம் நடு.

கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.

வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.

இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.

ஒரு நாள் நாமிருக்க மாட்டோம்..
நாம் நட்ட மரங்கள் இருக்கும்..
நம் பேர் சொல்லிக்கொண்டு!
❤️🙏
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் பயனுள்ள தகவல்.

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!

3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

4. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

5. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

6. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

7. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

8. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

9. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

10. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

11. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.

12. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.

13. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

14. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }

15. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

16. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

17. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

18. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
ுழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி.
வாதம் வைத்தியம் pinned «ுழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம். •• சீரகப் பொடி மற்றும் தயிர் மற்றொரு வழி சிறிது தயிரில்…»
ஆரோக்கிய_வாழ்விற்கு_மூலிகை_சமையல்.pdf
720.5 KB
ஆரோக்கிய_வாழ்விற்கு_மூலிகை_சமையல்.pdf
Photo from Raajan @ Singapore/Karur
கரும்புச்சாறு அடிக்கடி குடிப்பவர்களா???
எனில் உடல்கழிவுகளை வெளியேற்றுவதில் சிறந்தவர் நீங்கள்

நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தும் நீ சாப்பிடு கிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

நீங்களே பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

● கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது.

● உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

●அதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும்.

● உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடையது.

● அதே போன்று விட்டமின் சி அதிகமாக கரும்புசாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது.

● கரும்பு சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும்.

● அதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.

● சிலருக்கு பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும் இவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது.

● உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.

● பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் இதற்கு கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது.

● நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்பு சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.

● கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமான சாருகள் சுரக்கவும் இது உதவுகிறது.

● பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும்.

● கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான சிறப்புகள் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.

● சித்த மருத்துவத்தின் படி உடலில் அதிகரித்து பித்தத்தை கரும்பு சமநிலை படுத்தும்.

● சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.

● கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

● முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டு சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது.

● இது low glycemic index உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தாலும் நல்ல பலனை தரும்.

● உடலுக்கு பல நன்மைகள் செய்யக்கூடிய இந்த கருப்பு சாற்றை நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. போகின்ற இடமெல்லாம் கிடைக்கின்றது.

● கரும்பு சாற்றை இனி அடிக்கடி சாப்பிடுங்கள். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.