வாதம் வைத்தியம்
2.7K subscribers
1.44K photos
200 videos
103 files
539 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
**ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்ய வேண்டியது*

உடலுக்கு முக்கியமான தேவையாக இருப்பதும், உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதுமாய் இருப்பதும் இரத்தம் தான். இந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்..!

ஹீமோகுளோபின். ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம். அது நமக்கு உணவின் மூலமாகக் கிடைக்கிறது. உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

இந்த ஹீமோகுளோபின் அளவை நீங்கள் இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.

*அறிகுறிகள்*

உடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்! எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி. எழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம். இந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.

*ஹீமோகுளோபின் அளவு*

ரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோயும், மற்ற தீவிரமான நோய்களும் வருவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன.

*உலர்ந்த திராட்சை*  

கருப்பு திராட்சை, பச்சை திராட்சை என இரண்டு வகைகள் உள்ளன. கருப்பு திராட்சை சிறந்து. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் அதிகரிக்கும்

*பேரீச்சம்பழம்*

பேரிச்சையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்தம் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும்.

*மாதுளைப் பழம்* 

குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று, மாதுளை. இதில் சிவப்பு மாதுளை இரத்த உற்பத்தியை பெருக்கும்.

*அத்திப்பழம்*

உலர்ந்த நிலையில் நாட்டுமருந்து கடை மளிகை கடைகளில் கிடைக்கும், பழக்கடைகளில் பழமாக கிடைத்தாலும் வாங்கி சாப்பிடலாம் பலன் தரும்.

*போலிக் அமிலம்*

சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும். அதனால் ஃபோலிக் அமில குறைபாடு இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். அதனால் ஃபோலிக் அமிலம் வளமையாக உள்ள பச்சை காய்கறிகள், கீரை வகைககள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, பாதாம், சிறு தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள்.

*பீட்ரூட்*

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
பீட்ரூட்டை நீர் ஊற்றி வேகவைக்க வேண்டும், பீட்ரூட் நன்கு வெந்தவுடன் வடிகட்டி அந்த நீரை பருகலாம், அந்த பீட்ரூட்டை பொரியல் பண்ணி சாப்பிடலாம்.

*ஆப்பிள்*

தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உண்ணுங்கள்.

*உடற்பயிற்சி*

தினமும் சில உடற்பயிற்சிகளை செய்திடுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, உடல் முழுவதும் தேவையான ஆக்சிஜனை அதிகரிக்க உங்கள் உடல் அதிகமான அளவில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும்.

*வைட்டமின் சி*

வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். வைட்டமின் சி வளமையாக உள்ள பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ் மற்றும் தக்காளி போன்றவற்றை உண்ணவும். அதிலும் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி அடங்கியுள்ள மாத்திரைகளையும் உண்ணலாம்.

*கருப்பு சர்க்கரைப்பாகு (கருப்பட்டி)*

இரத்த சோகையை எதிர்த்து போராடவும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் இனிப்புக்கு கருப்பட்டி பயன்படுத்தலாம்.

*குறிப்பு* :

எந்தப் பழத்தையும் சாப்பிடுவதற்கு முன்னர் உப்புத் தண்ணீரில் ஒரு மணி நேரமாவது ஊறவைத்து, பிறகு சாதாரண நீரில் நன்றாகக் கழுவி உண்ண வேண்டும். காய்கறி மற்றும் கீரை வகைகளை சமைக்கும் முன் கால் மணி நேரமாவது உப்புத் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு சாதாரண நீரில் நன்றாகக் கழுவி சமைப்பது நல்லது இப்படிச் செய்வது
் கனி மற்றும் கீரையின் மேற்புறத்தில் உள்ள பூச்சிக்கொல்லிப் படிமங்களை நீக்கிவிடும். 

*உடலில்* *ஆக்சிஜன்* *அளவு* *98* - *100* *க்குள்* *இருக்க* *வேண்டும்* என்று சொல்லுகிறார்கள்; 43 க்கு கீழ் ஆக்சிஜன் சென்றுவிட்டால், ஆக்சிஜன் சிலிண்டர் தேவை;
ORAC-Oxygen Radical Absorption Capacity என்று ஒரு கணக்கீடு உள்ளது; இதன்படி இந்த அளவுகோலில் *ஆக்சிஜன்* *அதிகம்* *உள்ள* *பொருட்களை* *அவ்வப்போது* *நாம்* *சாப்பிட* *வேண்டும்* .
1.கிராம்பு. 314446 ORAC
2. பட்டை. .... 267537 ORA
3. மஞ்சள்.......102700 ORA
4. சீரகம்........... 76800 ORA
5. துளசி..........67553 ORAC
6. இஞ்சி..........28811 ORAC

சரி, இவைகளைத் தினமும் எடுத்துக்கொள்ள ஏதாவது சுருக்கு வழி உள்ளதா?... அதற்கு ஒரு ரெசிபி உள்ளது! அதனை குறித்து வைத்துக்கொண்டு பின்பற்ற முயற்சி செய்யுங்கள்;
1. *ஓமம்* ........100 கிராம்
2. *சோம்பு* .......50 கி.
3. *கிராம்பு* ........5 கி.
4. *பட்டை* ......... 5 கி
5. *சுக்கு* ............10 கி
6. *ஏலக்காய்* .....10 கி.
இவைகளை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து பொடி செய்து ஒரு பாட்டிலில் அடைத்துக் கொண்டு காலை மாலை டீ போடும்போது இரண்டு பேருக்கு ஒரு ஸ்பூன் வீதம் கலந்து சாப்பிட்டால் டீ மசாலா டீ ஆக மாறும் ; நமக்கும் ஆக்ஸிஜன் அபரிமிதமாக கிடைக்கும்.

வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்.
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
(Thuthi Ilai Uses in Tamil):

உடல் வலி, மலச்சிக்கல் தீர:

“கொதிக்குற நீரில் துத்தி இலையப் போட்டு வேகவச்சு, அந்த தண்ணிய ஒரு துணியில நனைச்சுப் பிழிஞ்சு, உடல் வலிக்கு ஒத்தடமிட்டா உடல் வலி தீரும். இலைய கசாயம் செஞ்சு அதோட, பாலும் சக்கரையும் சேத்து குடிச்சு வந்தா, மலச் சிக்கல் தீரும். அதோடு மூலச்சூடும் தணியும்! அப்புறம்... இந்த துத்தி இலைய பருப்பு சேத்து சாப்பாட்டுல கலந்து சாப்பிடலாம். நம்ம முன்னோர்களெல்லாம் இந்த துத்திய உணவாதான் பாத்தாங்க, நாமதான் மருந்தா பாக்குறோம். துத்தி விதையில கூட நல்ல மருத்துவ குணங்கள் இருக்கு.”

மூல நோய் தீர்க்கும் துத்தி இலை (How to use thuthi leaf for piles in tamil):

“முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள் மூலநோய்க்கு ஆளாகுறாங்க. இந்த துத்தி இலை மூல நோய்க்கு சிறந்த மருந்தா இருக்கு. ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலைய வதக்கி, மூலத்தால வர்ற கட்டி-புண்ணுக மேல ஒத்தடமிட்டு வந்தா, மூலநோய்க்கு நல்ல குணம் கிடைக்கும். அதான் அவருக்கு கொடுத்தேன்.” பாட்டி சொல்லிவிட்டு அடுத்த நபரை அழைத்தாள்.

பல் ஈறு பிரச்சனை தீர:

பல் ஈறு பிரச்சனையால் அவதியுற்றுக்கொண்டிருந்த அந்த நபருக்கு துத்தி இலைக் குடிநீரை வாயிலிட்டு கொப்பளிக்கும்படி ஆலோசனை வழங்க, துத்தியின் மற்ற குறிப்புகள் பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தது. செவிக்கு உணவு தேடும் என் ஆவலைப் புரிந்துகொண்ட பாட்டி, தொடர்ந்து பகிர்ந்தாள் துத்தி பற்றி!

துத்தி விதையின் பயன்கள்:

பாட்டி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தபோது, அதிக உடல் சூட்டுப் பிரச்சனையைப் பற்றி ஒரு நபர் பாட்டியிடம் முறையிட்டார். ஒரு டப்பாவில் பொடி செய்து போட்டிருந்த துத்தி விதைப் பொடியை கொஞ்சம் பொட்டலம் போட்டு அவருக்குத் தந்து, அதனை சர்க்கரை சேர்த்து 1/2 கிராம் வீதம் தினமும் உண்டு வரச் சொல்லி அனுப்பினாள்.

துத்தி விதை பற்றிய குறிப்புகளை முழுமையாகச் சொல்லும்படி பாட்டியிடம் ஒரு விண்ணப்பம் போட்டேன்.
தொடர்ந்து சொன்னாள் பாட்டி!

“துத்தி விதைய கரிநெருப்புல போட்டு, அதிலயிருந்து வர்ற புகைய குழந்தைகளின் மலவாயில் படும்படி செய்தா, வயித்துப் புழுக்கள் வெளியேறும். துத்தி விதைக் கசாயத்த தினமும் (15-30 மிலி) குடிச்சு வந்தா பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், மூல நோய் குணமாகும்.”

பாட்டி துத்தியின் பல்வேறு ஆரோக்கியம் நல்கும் குணங்கள் பற்றி சொல்லியதும், பாட்டியிடம் கொஞ்சம் துத்தி இலையை போகும்போது வாங்கிச் செல்ல நினைத்தேன். ஆனால் அங்கிருந்த மக்களுக்கே அவை பற்றாக்குறையாக இருக்குமெனத் தோன்றியதால், வேறெங்காவது கிடைக்குமா என யோசித்துக் கொண்டிருக்கையில், பாட்டி சொன்னாள் “கொஞ்சம் ஈஷா ஆரோக்கியா வரைக்கும் போயி, துத்தி பொடி வாங்கிட்டு வர்றயா?! 
https://youtu.be/y7vLxrcLShY

நம் உடலை..
என்றென்றும்
*இளமையாகவும் திடமாகவும்*
பேணி..

*உள்ளுருப்புகளை வலிமையாக்கி*
நோயற்ற
*ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும்*
குமரி சாதனை.

நாட்டு *கற்றாழையுடன் திரிகடுகமும்* சேர்த்து உட்கொள்ளும்
முறையில்..

ஒரு *கற்பசாதனை*

(ஒரு உறுதியுடன்
தேர்ந்தெடுத்த செயலை நெடுங்காலம் கடைபிடித்தலே = "கற்பம்" ஆகிறது.)

சித்தர் முறை உடல் பேணும் நுட்பம் இங்கே 👇
👁️காணொளியாக பகிரப்பட்டுள்ளது.
🗣️
https://youtu.be/y7vLxrcLShY
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
ஶ்ரீ கணபதிதாசர்
சித்தரின்..
"நெஞ்சறிவிளக்கம் "
100 ல் ஒருபகுதியில்..

20பாடல்-23பாடல் வரையானதற்கு
சிறு விளக்க
குரலொலியுடன்..
பகிரப்பட்டுள்ளது.

யோக-ஞானத்
தேடுதலுக்கு..
தெளிவையும் உறுதியையும்
பெற உதவவல்லது
கணபதிதாசர் ஞானம்!🙏